நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

ஹூண்டாய் வெனியூ என்-லைன் மாடல் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் ஸ்போர்ட்டியர் வெர்ஷன்களை (Sportier Version) என்-லைன் (N-Line) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

இந்த வரிசையில் ஹூண்டாய் வெனியூ காரின் என்-லைன் மாடல் (Hyundai Venue N-Line) நாளை (செப்டம்பர் 6) இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ என்-லைன் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஹூண்டாய் வெனியூ காரின் என்-லைன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. ஹூண்டாய் வெனியூ என்-லைன் மாடலில், சிகப்பு பிரேக் காலிபர்களுடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

கருப்பு நிற மேற்கூரையுடன் போலார் ஒயிட், தண்டர் ப்ளூ மற்றும் ஷேடோ க்ரே என ஹூண்டாய் வெனியூ என்-லைன் மாடல் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். ஹூண்டாய் வெனியூ என்-லைன் மாடலின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 3,995 மிமீ, 1,770 மிமீ, 1,617 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,500 மிமீ ஆக உள்ளது. இந்த புதிய மாடலின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 195 மிமீ ஆகும்.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

உட்புறத்தை பொறுத்தவரையில், சிகப்பு நிற தையல் வேலைப்பாடுகளுடன் புதிய அப்ஹோல்ஸ்ட்ரியை 2022 ஹூண்டாய் வெனியூ என் லைன் பெற்றுள்ளது. என்-லைன் மாடல்களுக்கே உரித்தான வகையில், என்-லைன் பேட்ஜ்கள், புதிய தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்களை, ஹூண்டாய் வெனியூ என் லைன் பெற்றுள்ளது.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

செயல்திறனை பொறுத்தவரையில் ஹூண்டாய் வெனியூ என்-லைன் மாடலில், 1.0 லிட்டர், ஜிடிஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும்.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

ஹூண்டாய் வெனியூ என்-லைன் மாடலில், பாடி ரோல் ஏற்படுவதை குறைக்கும் வகையிலும், கையாளுமையை மேம்படுத்தும் வகையிலும் சஸ்பென்ஸன் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. N6 மற்றும் N8 என ஹூண்டாய் வெனியூ என்-லைன் மாடல் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

இந்த புதிய மாடலின் விலை 11 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் கியா சொனெட் எக்ஸ் லைன் (Kia Sonet X Line), ஸ்கோடா குஷாக் மாண்டி கார்லோ (Skoda Kushaq Monte Carlo) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி (Volkswagen Taigun GT) போன்ற கார்களுடன் ஹூண்டாய் வெனியூ என்-லைன் போட்டியிடும்.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

இதில், கியா சொனெட் எக்ஸ் லைன் மாடல் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களில் என் லைன் மாடல்களை விற்பனை செய்து வருவதை போல், கியா நிறுவனம் தனது கார்களின் எக்ஸ் லைன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

நாளைக்கு லான்ச் பண்றாங்க... இந்த புது ஹூண்டாய் காருக்காக நிறைய பேர் வெயிட்டிங்... என்ன ரேட்ல வரப்போகுது?

ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர் ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து விற்பனைக்கு வரவுள்ள என் லைன் மாடலும், ஹூண்டாய் வெனியூ காரின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இது நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகவே இருக்கின்றன.

Most Read Articles
English summary
Hyundai venue n line india launch tomorrow
Story first published: Monday, September 5, 2022, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X