டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூன் மாத மத்தியில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதன் காரணமாக தற்போது ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் 11,240 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 8,377 வெனியூ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் ஹூண்டாய் வெனியூ கார் விற்பனையில் 134 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

விற்பனையில் ஏற்பட்டுள்ள சிறப்பான வளர்ச்சிக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்தான் மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 7.53 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். E, S, S+, S(O), SX மற்றும் SX(O) என ஹூண்டாய் வெனியூ கார் மொத்தம் 6 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

ஹூண்டாய் வெனியூ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய 3 இன்ஜின் ஆப்ஷன்களை ஹூண்டாய் வெனியூ கார் பெற்றுள்ளது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 ஹெச்பி பவரை உருவாக்க கூடியது.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் 83 ஹெச்பி பவரை வழங்க கூடியது. மறுபக்கம் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 100 ஹெச்பி பவரை உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. டிசைனை பொறுத்தவரையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய முன் பக்க க்ரில் அமைப்பு, புதிய எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

அத்துடன் புதிய 16 இன்ச் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான வகையில் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அட்டகாசமான டிசைன், 3 சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள், ஏராளமான வசதிகள் மற்றும் சவாலான விலை நிர்ணயம் ஆகிய அம்சங்களே ஹூண்டாய் வெனியூ காரின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களாக உள்ளன.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மட்டுமல்லாது, என் லைன் (Hyundai Venue N Line) மாடலையும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன் காரணமாக வரும் மாதங்களிலும் ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகவே தென்படுகின்றன.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இதில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய 2022 மாடலும் (2022 Maruti Suzuki Brezza) சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

அதேபோல் கியா சொனெட் காரின் எக்ஸ் லைன் (Kia Sonet X Line) மாடலும் வெகு சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு தங்களது தயாரிப்புகளை தொடர்ச்சியாக அப்டேட் செய்து வருகின்றன.

டாடா, மாருதிக்கு நெருக்கடி... ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை கிடுகிடு உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமாக உள்ள மிட்-சைஸ் எஸ்யூவியான க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அதேபோல் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வேலைகளையும் ஹூண்டாய் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai venue sales increased by 134 per cent in august 2022
Story first published: Saturday, September 10, 2022, 9:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X