உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

ஒவ்வொரு ஆண்டும் எலெக்ட்ரிக் வாகனத்தில் உள்ள பேட்டரியின் ரேஞ்ஜ் திறன் 2 சதவீதம் வரை குறையுமாம். இதுபோன்று இன்னும் பல சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்து பார்க்கலாம்.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

உலகம் முழுவதிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைந்துக் காணப்படுகின்றன. இந்தியர்களும்கூட மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பை வழங்க தொடங்கியிருக்கின்றனர். இதன் விளைவாக தற்போது இந்தியாவின் முக்கிய சாலைகளில் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

மக்கள் மத்தியில் சூப்பரான டிமாண்ட் மின் வாகனங்களுக்குக் கிடைக்கத் தொடங்கியிருப்பதனால் உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக ஆர்வத்துடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. இருப்பினும், இந்தியா மின் வாகன சந்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே, நாடு முழுவதும் மின் வாகன மயமாக மாறுமானால், எதிர்காலத்தில் ஆயுட்காலம் முடிந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளின் நிலைமை என்னவாகும் என்கிற சந்தேகம் நம்மில் பலரின் மத்தியில் எழும்பியிருக்கின்றது. இதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

மின் வாகனங்களின் பேட்டரி எத்தனை காலம் உழைக்கும்?

நவீன கால மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டவையாக காட்சியளிக்கின்றன. தற்போது விற்பனையில் உள்ள பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றது. இவை அதிக தரம் வாய்ந்தவை ஆகும். சிறந்த திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் அவை காட்சியளிக்கின்றன.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர்கள் பெரும்பாலானோர் தங்களின் மின்சார கார்களை 8 ஆண்டுகள் அல்லது 1.8 லட்சம் கி.மீட்டர்கள்., வாரண்டியின்கீழ் விற்கின்றனர். அதேநேரத்தில் நவீன கால பேட்டரிகள் 15 ஆண்டுகள் தொடங்கி 20 ஆண்டுகள் வரை பயன்படுகின்றன. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதன் ரேஞ்ஜ் திறனில் 2 சதவீதம் வரை அப்பேட்டரிகள் திறன் இழைப்பைச் சந்திக்கும்.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

அதிக பயன்பாட்டின் காரணத்தினால் அவை வெகுவிரைவில் திறனை இழக்கலாம். சமீபத்தில் ஓர் டெஸ்லா கார் உரிமையாளர், தன்னுடைய வாகனம் இதுவரை 15 லட்சம் கிமீ கடந்திருப்பதாகவும், ஆனால், காருடன் வழங்கப்பட்ட ஒரிஜினல் பேட்டரி 2.9 லட்சம் கிமீ வரை மட்டுமே பயன்பட்டதாகக் கூறினார். அவரின் கார் தற்போதும் புத்தம் புதியதாகக் காட்சியளிக்கின்றது. இருப்பினும், அதிக பயன்பாட்டின் காரணத்தினால் பேட்டரி அதன் ஆயுட்காலத்தை வெகு விரைவில் இறுதியைச் சந்தித்திருப்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

ரீபிளேஸ் அல்லது ரிப்பேர் எதை செய்யலாம்?

பழைய பேட்டரி செல்களை ரிப்பேர் செய்வதற்கான வழிகள் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு முறை ஓர் பேட்டரி அதன் பயன்பாட்டு தன்மை இழக்கும் எனில் அந்த பேட்டரி நிச்சயம் அகற்றப்பட்டே ஆக வேண்டும் என்பது விதி. ஆனால், இது பெரும் செலவை வழங்க கூடிய செயல் ஆகும். இந்தியாவில் இப்போதே மின் வாகன உலகம் வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கின்றது.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

ஆகையால், எங்களால் துள்ளியமான செலவு தொகைக் குறித்த புள்ளி விபரத்தை வழங்க முடியவில்லை. அதேவேலையில், மஹிந்திரா நிறுவனம் கடந்த காலத்தில் விற்பனைக்கு வழங்கிய இ2ஓ எலெக்ட்ரிக் காரின் பேட்டரிகளை மாற்றுவதற்கு ரூ. 4 லட்சம் வரை செலவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

சரி பழைய பேட்டரியை மாத்திட்டோம்னு வச்சுக்கோங்க, அதோட நிலைமை என்ன?

பேட்டரி செல்கள் நிக்கல், கோபால்ட் மற்றும் லித்தியம் ஆகிய அரிய தனிமங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை அதிக நச்சுத் தன்மை வாய்ந்தவையாகும். ஆம், இந்த நச்சு பொருட்களினாலேயே பேட்டரிகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை அவ்வளவு எளிதாக குப்பை கிடங்குகளில் கொட்டி விட முடியாது. வளர்ந்த நாடுகள் பயன்படுத்தப்பட்ட பேட்டரி கழிவுகளை சூரிய சக்தியை சேமிக்க பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதுபோன்று அவற்றை பயனுள்ளதாக மாற்ற இன்னும் பல மாற்று வழிகளை அவை தேடிக் கொண்டிருக்கின்றன.

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பழசாகிட்டா என்ன நடக்கும்? நிச்சயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்!

ரீசேல் மதிப்பு எப்படி இருக்கும்?

பேட்டரியின் வயதை வைத்தே அக்காரின் ரீசேல் வேல்யூ அமைகின்றது. அதிக கிமீட்டர்கள் பயணத்திற்கு ஓர் பேட்டரி உபயேகப்படுத்தப்பட்டிருக்கும் எனில் அந்த வாகனத்தின் மதிப்பு பன்மடங்கு குறையும். ஏனெனில், செகண்டு ஹேண்டில் வாங்கப்படும் மின்சார காரில் பேட்டரிகள் மாற்றப்படும் எனில் பல லட்சக் கணக்கான ரூபாய் செலவீணத்தை அது வழங்கும். இந்த காரணத்தினால்தான் செகண்டு ஹேண்டில் வாங்கப்படும் மின்சார வாகனங்களின் மதிப்பு பல மடங்கு குறைந்துக் காணப்படுகின்றது.

Most Read Articles
English summary
If your e car battery old what will happen here is details
Story first published: Saturday, May 28, 2022, 20:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X