இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது. இதற்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனமும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலெக்ட்ரிக் காரும் ஒன்றாகும்.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் வரும் செப்டம்பர் மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வரும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tata Nexon EV) காருக்கு இது போட்டியாக இருக்கும்.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஐசி இன்ஜின் காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி400 ஆகும். மஹிந்திரா நிறுவனம் தற்போது எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி400. முதலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், எக்ஸ்யூவி300 இவி (XUV300 EV) என்ற பெயரில் அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் கார் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் (XUV400 Electric) என்ற பெயரில் அழைக்கப்படும் என்பதை மஹிந்திரா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை காட்சிக்கு வைத்திருந்தது. அதன் டிசைனிற்கும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கும், டிசைனில் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரில், ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகளுடன் 'ஷார்ப்' ஆன ஹெட்லேம்ப்கள் வழங்கப்படலாம்.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

அதேபோல் முக்கோண வடிவிலான பனி விளக்குகள் அறை, புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகியவையும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரை காட்டிலும், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் நீளமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். ஆனால் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் நீளம் 4.2 மீட்டர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது எக்ஸ்யூவி300 காரை விட எக்ஸ்யூவி400 காரின் நீளம் 200 மிமீ அதிகமாக இருக்கலாம்.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இதன் காரணமாக எக்ஸ்யூவி300 காரை காட்டிலும், எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் அதிக பூட் ஸ்பேஸை கொண்டிருக்கலாம். நிறைய லக்கேஜ்களை கொண்டு செல்வதற்கு இது உதவி செய்யும். அதே நேரத்தில் இந்த காரின் பேட்டரி மற்றும் மோட்டார் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் நமக்கு தற்போதைக்கு கிடைக்கவில்லை.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இருப்பினும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டாரை எக்ஸ்யூவி400 கார் பெற்றிருக்கும் என கருதப்படுகிறது. அதேபோல் இது ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் காராக இருக்கலாம். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 150 ஹெச்பி-யாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

ஒரு பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் குறைவானதாகவும், மற்றொரு பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் அதிகமாகவும் இருக்கலாம். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில், பேட்டரி ஆப்ஷனை தேர்வு செய்ய முடியும். மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 15 லட்ச ரூபாயாக இருக்கலாம். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19 லட்ச ரூபாயாக இருக்க கூடும். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். வரும் மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் நமக்கு தெரியவரலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Important details about mahindra xuv400 ev
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X