இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

இந்திய சந்தையில் கியா நிறுவனம் களமிறக்கவுள்ள இவி6 எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட், கார்னிவல் மற்றும் கேரன்ஸ் என மொத்தம் 4 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இதில், கேரன்ஸ் கார் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த 4 கார்களுக்குமே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

இந்த சூழலில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதன் மூலம் இந்திய சந்தையில் தனது தயாரிப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முதல் எலெக்ட்ரிக் காராக இது இருக்கும். கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இவி6 (Kia EV6) ஆகும்.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் மே 26ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

முதல் ஆண்டில் இந்திய சந்தைக்கு என 100 இவி6 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே ஒதுக்குவதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியா நிறுவனத்திற்கு ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் தொழிற்சாலை உள்ளது. ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் இங்கு நடைபெறாது. இவி6 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தைக்கு சிபியூ (CBU) வழியின் மூலமாக கொண்டு வரப்படவுள்ளது.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். எனவே இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும். 55 லட்ச ரூபாய் முதல் 60 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் பல்வேறு பேட்டரி அளவுகளுடன் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

இதில், 77.4kWh பேட்டரி தொகுப்புடன் கூடிய மாடலையே கியா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது. இதன் பவர் அவுட்புட் 320 பிஹெச்பி மற்றும் 605 என்எம் ஆகும். இந்த மாடலின் ரேஞ்ச் 425 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 425 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 மைல்கள் என்ற வேகத்தை வெறும் 3.5 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடும் திறனை இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இவி6 எலெக்ட்ரிக் காரின் சிறிய பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட வேரியண்ட்டை கியா நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சற்று குறைவாக இருக்கலாம்.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

கியா இவி6 எலெக்ட்ரிக் காரில், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். அத்துடன் வாய்ஸ் கமாண்ட் வசதியையும் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கும். இதுதவிர வைஃபை ஹாட்ஸ்பாட், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், ஆப்ஷனல் 14 ஸ்பீக்கர்கள் மெரிடியன் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகளும் கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும்.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

கியா இவி6 எலெக்ட்ரிக் காரில், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஆட்டோமேட்டிக் ஹை பீம்ஸ் போன்ற வசதிகளும் வழங்கப்படும். சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் கியா இவி6 எலெக்ட்ரிக் காரில், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப்பிங் அஸிஸ்ட் போன்ற வசதிகளை ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் கியா களமிறக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... என்ன விலையில் வரப்போகுது தெரியுமா?

இதுதவிர சொனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களின் சிஎன்ஜி மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் கியா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. கியா சொனெட் மற்றும் கியா கேரன்ஸ் கார்கள் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த 2 கார்களின் சிஎன்ஜி மாடல்களையும் நாம் கூடிய விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Important details about upcoming kia ev6 electric car
Story first published: Sunday, April 24, 2022, 8:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X