அமெரிக்கால அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

2022 கியா இவி6 (2022 Kia EV6) எலெக்ட்ரிக் கார் அமெரிக்காவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

கியா (Kia) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக இவி6 (EV6) காட்சியளிக்கின்றது. இது ஓர் மின்சார காராகும். உலக நாடுகள் சிலவற்றிலேயே இக்கார் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. அந்தவகையில், இவி6 விற்பனைக்கு கிடைத்து வரும் உலக சந்தைகளில் அமெரிக்காவும் ஒன்று. இங்கே புதிய 2022 இவி6 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

40,900 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை ட்ரிம்மின் விலை ஆகும். இந்திய மதிப்பில் ரூ. 30.71 லட்சம் ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்ட மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே கியா இவி6 மாடலின் உயர் நிலை ட்ரிம்மிற்கு 55,900 அமெரிக்க டாலர்கள் எனும் உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

ஜிடி லைன் எனும் பெயரில் இரு மோட்டார் மற்றும் இ-ஏடபிள்யூடி (e-AWD) ஆகிய அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் வேரியண்டிற்கே இந்த உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கியா நிறுவனம் இவி6 மாடலின் அடி நிலை வேரியண்டில் 58 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

இதன் வாயிலாகவே 167 எச்பி மற்றும் 349 என்எம் டார்க்கை வெளியற்றக் கூடிய மோட்டாருக்கான மின்சார திறனை வழங்கும். இந்த மின் மோட்டார் மணிக்கு 185 கிமீ எனும் இயங்கக் கூடியது. இதன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்தால் 373 கிமீ வரை பயணிக்க முடியும்.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

இத்துடன், 19 இன்ச் அலாய் வீல்கள், 12.3 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் கன்சோல், 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), எட்டு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

இதுமட்டுமின்றி, ஹை பீம் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், லேன் ஃபாலோவிங் அசிஸ்ட், ரியர் ஆக்குபேன்ட் அலர்ட், ரியர் க்ராஸ் டிராஃபிக் கொலிசன் அவாய்டன்ஸ், ஃபார்வார்டு கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் கொலிசன் வார்னிங், தானியங்கி ஏசி, ஒயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் வசதி, லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் என கூடுதல் சிறப்பு வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

இதைக் காட்டிலும் கூடுதல் சிறப்பு வசதிகளைக் கொண்டவையாக அடுத்தடுத்த ட்ரிம்கள் இருக்கின்றன. ரேஞ்ஜ், தொழில்நுட்பம் மற்றும் சொகுசு வசதிகளைக் கூடுதலாகக் கொண்டவையாக அவை இருக்கும். இதுமாதிரியான பன்முக தேர்வுகளிலேயே அமெரிக்க சந்தையில் கியா இவி6 விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காரையே கியா நிறுவனம் மிக விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. கியா நிறுவனம் தற்போது அதன் கேரன்ஸ் எம்பிவி காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

ஏற்கனவே இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கி விட்டன. ஜனவரி 14ம் தேதி அன்றே இப்பணிகள் தொடங்கியது. இது தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்திலேயே 7,738 புக்கிங்கை பெற்று கியா கேரன்ஸ் எம்பிவி அசத்தியது. இதுமாதிரியான மிக அசத்தலான வரவேற்பே கியா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாட்டில் கிடைத்து வருகின்றது.இன்றைய நிலவரப்படி கேரன்ஸுக்கு கிடைத்து வரும் புக்கிங் இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனம் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

அமெரிக்காவுல அறிமுகமாகிடுச்சு... அடுத்து நம்ம இந்தியாதான்... ஆவலை தூண்டும் அம்சங்களுடன் 2022 கியா இவி6 வெளியீடு!

மேலும், தற்போது தங்கள் நிறுவத்திற்கு கிடைத்து வரும் அமோகமான வரவேற்பை தக்க வைத்துக் கொள்ள கியா அடுத்தடுத்து இன்னும் சில புதிய தயாரிப்புகளை நாட்டில் களமிறக்க இருக்கின்றது. அந்த வகையிலேயே புதிய 2022 கியா இவி6 காரும் மிக மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள், இக்கார் நடப்பாண்டு முடிவடைவதற்குள்ளாகவே இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியீட்டை பெற்று விடும் என தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
India bound kia 2022 ev6 unveiled in us market
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X