கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

உலகளவில் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகும் நாடுகளின் பட்டியலில் நமது இந்தியா 4வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

கொரோனா வைரஸ் பரவலினால் மற்ற நாடுகளை போல் இந்திய ஆட்டோமொபைல் துறையும் கடந்த சில வருடங்களில் அதிக இன்னல்களை சந்தித்து வந்துள்ளது. இது போதாதென்று, வைரஸ் பரவலினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை ஆட்டோமொபைல் துறையை வேறு விதமாக பந்தாடியது.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

ஆனால் தற்போது நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருவதுபோல் தெரிகிறது. இந்த நிலையில்தான் நல்லதொரு செய்தியாக, ஆட்டோமொபைல் கார்கள் விற்பனையில் இந்தியாவிற்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இதுவே இந்தியாவின் சிறந்த தர நிலையாகும். இதற்குமுன் 4வது இடத்தில் இருந்துவந்த ஜெர்மனியை இந்தியா முந்தியுள்ளது. ஜெர்மனி ஆனது ஐரோப்பிய ஆட்டோமொபைல் மையமாக ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து திகழ்ந்து வருகிறது.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

ஏனெனில் மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ, போர்ஷே & ஃபோக்ஸ்வேகன் என உலகம் முழுவதிலும் பிரபலமான கார் பிராண்ட்கள் ஜெர்மனியை சேர்ந்தவை ஆகும். ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சர்வதேச அமைப்பு (OICA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2021இல் மொத்தம் 37,59,398 ஆட்டோமொபைல் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே ஜெர்மனியில் 29,73,319 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

இவ்விரு நாடுகளுக்கு இடையேயான வித்தியாசம் 26% ஆகும். கடைசியாக 2019இல் உலகளவிலான லிஸ்ட்டில் 4வது இடத்தை இந்தியா பெற்றிருந்தது. அதன்பின் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 4வது இடத்தை இந்தியா தனதாக்கியுள்ளது. இன்னும் 3 வருடங்களில், அதாவது 2025இல் கார்கள் விற்பனையில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறும் என ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

தற்சமயம் 3வது இடத்தில் ஜப்பான் உள்ளது. ஜப்பானில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 44,48,340 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை ஆனது நமது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 7 லட்ச யூனிட்கள் மட்டுமே அதிகமாகும். ஆதலால் வரும் ஆண்டுகளில் ஆட்டோமொபைல் கார்கள் விற்பனையில் ஜப்பானை இந்தியா முந்துவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

இருப்பினும் உண்மையில் இந்தியாவில் ஆட்டோமொபைல் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆனது மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் குறைவே ஆகும். அதாவது நம்மை காட்டிலும் பல மடங்கு மக்கள் தொகை குறைவான ஜப்பானில் 44.48 லட்சம் பேர் கடந்த ஆண்டில் புதியதாக கார்களை வாங்கியுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 130 கோடி பேர் உள்ள இந்தியாவில் 37.59 லட்சம் தான்.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

அதாவது இந்தியாவில் 1000இல் 33 பேர் மட்டுமே தற்போதைக்கு கார்களை பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். இந்தியாவில் கமர்ஷியல் பயன்பாடுகளுக்காக 4-சக்கர கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மற்ற வளர்ந்த நாடுகளை காட்டிலும் மிகவும் குறைவாகும்.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

கமர்ஷியல் கார்களுக்கான தேவை இன்னும் சில வருடங்களுக்கும் வளர்ச்சியை காணாது என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்சமயம் உலகளவில் அதிக ஆட்டோமொபைல் கார்கள் விற்பனையாகும் நாடுகள் லிஸ்ட்டில் சீனா எந்தவித மாற்றமுமின்றி முதலிடத்தை தொடர்கிறது. இதற்கடுத்து அமெரிக்கா 4 சதவீத வளர்ச்சியுடன் உள்ளது. இருப்பினும் 2019ஐ காட்டிலும் கடந்த 2021இல் அமெரிக்காவில் குறைந்த எண்ணிக்கையிலான கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

டாப்-5 வரிசையில் இரண்டு இலக்கங்களில் (28%) வளர்ச்சியை கடந்த காலண்டர் ஆண்டில் பதிவு செய்த ஒரே நாடு இந்தியா ஆகும். இந்த லிஸ்ட்டில் ஜெர்மனியை முந்திக்கொண்டு இந்தியா நான்காவது இடத்தை பிடிக்கும் என ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 2021 டிசம்பர் மாதத்திலேயே கணிக்கப்பட்டு இருந்தது. ஜெர்மனியின் சரிவிற்கு குறை கடத்திகளின் பற்றாக்குறை முக்கிய காரணமாக சொல்லலாம்.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

ஏனெனில் குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறையால் மற்ற நாடுகளை காட்டிலும் ஐரோப்பிய நாடுகளே பெரியதாக பிரச்சனைகளை வாகன உற்பத்தியில் சந்தித்தன. இதற்கு மத்தியில் கொரோனா வைரஸின் புதிய வெர்சன் வேறு உலகில் ஆங்காங்கே பரவி வருகிறது. இவற்றினால் உலகளாவிய ஆட்டோமொபைல் துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழவுள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கார்கள் விற்பனையில் உலகளவில் இந்தியாவிற்கு 4வது இடம்!! ஜெர்மனியை முந்தியது!

ஜெர்மனியை போன்று கார்கள் விற்பனையில் எதிர்பாராத விதத்தில், பெரிய சரிவை சந்தித்துள்ள மற்றொரு ஐரோப்பிய நாடு இத்தாலி ஆகும். ஃபெராரி, லம்போர்கினி போன்ற பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் பிராண்ட்களை கொண்ட இத்தாலியில் கடந்த 2021இல் மொத்தமாகவே 20 லட்ச கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இத்தாலியை ரஷ்யா முந்தியுள்ளது.

Most Read Articles
English summary
India gets 4th place in top 5 best automobile selling country list details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X