கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

இந்திய சந்தையில் சொகுசு கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் 3 நிறுவனங்களான மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி கடந்த 10 ஆண்டுகளில் வருடம் வாரியாக விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

இந்தியா இன்னமும் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடாக விளங்கினாலும், நம் நாட்டிலும் லக்சரி கார்கள் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டை மட்டும் எடுத்து பார்த்தோமேயானால், மேற்கூறப்பட்ட 3 பிராண்ட்களில் இருந்து மொத்தமாக 22 ஆயிரத்து 500 கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

ஆனால் இதற்கு முந்தைய 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 15,678 ஆக இருந்தது. லக்சரி கார்களின் விற்பனை இந்த அளவிற்கு சரிந்துள்ளதற்கான காரணம், உங்கள் எல்லாருக்கு தெரிந்ததுதான், கொரோனா வைரஸ் பரவல். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் சொகுசு கார்கள் விற்பனை மட்டுமின்றி, மொத்த ஆட்டோமொபைல் துறை விற்பனையும் 2020இல் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.

கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

இதற்குமுன் கடைசியாக 2010ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த சொகுசு கார்களின் எண்ணிக்கை 15,068 ஆக இருந்தது. அதிகப்பட்சமாக கடந்த 2018 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி பிராண்ட்களில் இருந்து மொத்தமாக முறையே 32,406 மற்றும் 32,585 லக்சரி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2015ஆம் ஆண்டிலும் இந்த முன்னணி பிராண்ட்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்திருந்தது.

கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

மீண்டும் கடந்த 2021ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தோமேயானால், கடந்த ஆண்டில் 11,242 மெர்சிடிஸ் கார்களும், 8,236 பிஎம்டபிள்யூ கார்களும், 3,293 ஆடி கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கு முந்தைய 2020ஆம் ஆண்டில் இவை மூன்றின் மொத்த விற்பனை எண்ணிக்கைகள் முறையே 7,893, 6,092 மற்றும் 1,693 ஆகும். மெர்சிடிஸை பொறுத்தவரையில் தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக விளங்குகிறது.

கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

2010ல் இருந்து இந்த நிறுவனம் அதிகளவில் கார்களை விற்பனை செய்த ஆண்டு என்று பார்த்தால், 2018 மற்ற்ம் 2017ஆம் ஆண்டுகளை சொல்லலாம். இந்த இரு ஆண்டுகளில் மெர்சிடிஸ் மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி நிறுவனங்களின் விற்பனையும் சிறப்பானதாகவே இருந்துள்ளது. 15,538 மற்றும் 15,330 கார்களை முறையே 2018 மற்றும் 2017ஆம் வருடங்களில் மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கையாக 10 ஆயிரம் யூனிட்களை வெற்றிக்கரமாக கடந்த 2018இல் கடந்திருந்தது. இதற்கடுத்து 2017இல் 9,379 பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டதே அதிகப்பட்சமாக உள்ளது. ஆடி இந்தியா நிறுவனத்தை பொறுத்தவரையில், 2015ஆம் ஆண்டில் இதன் மொத்த விற்பனை எண்ணிக்கை 11,192 யூனிட்களாக பதிவு செய்யப்பட்டது.

கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

இதற்கு முந்தைய 2014ஆம் ஆண்டில் 10,851 ஆடி கார்களும், 2013இல் 10,003 ஆடி கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது கடந்த சில வருடங்களாக தான் ஆடி கார்களின் விற்பனை சற்று குறைத்துள்ளன. அதிலிலும் 2020இல் வெறும் 1,693 ஆடி கார்கள் விற்பனை என்பது மிகவும் குறைவே. ஆனால் 2013-15ஆம் காலக்கட்டத்தில் நல்லப்படியாகவே இருந்துள்ளது.

கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

ஒட்டுமொத்தமாக 2010இல் இருந்து 2021 வரையிலான 12 வருடங்களில் மெர்சிடிஸ் இந்தியா நிறுவனம் 1,29,885 கார்களையும், பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 95,890 கார்களையும், ஆடி இந்தியா நிறுவனம் 81,202 கார்களையும் விற்பனை செய்துள்ளன. இந்த மூன்று பிராண்ட்களில் இருந்து மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் மொத்தம் 3,06,977 சொகுசு கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 10 வருடங்களில் இல்லாத விற்பனை வீழ்ச்சியை கண்டுவரும் ஆடி!! சொகுசு கார்களில் இந்த பிராண்ட் தான் டாப்!

ஒமிக்ரான் வைரஸ் பரவல் உடன் துவங்கியுள்ள 2022இல் சொகுசு கார்களின் விற்பனை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் தற்சமயம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் சில நகரங்களில் ஊரடங்குகள் அமலில் உள்ளன என்றாலும், அவை தொழிற்சாலைகளுக்கு இல்லை என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
India luxury car sales 2021 mercedes maintains lead
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X