இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!

இந்தியாவின் கடைசி போக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) கார் டெலிவரி வழங்கப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) இந்தியாவில் இருந்து போலோ (Polo) காரை வெளியேற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. திட்டமிட்டபடி கடைசி அலகு போலோ உற்பத்தி செய்யப்பட்டு, அதை வெளியேற்றிய பின்னரே காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிறுவனத்தின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, போலோ காரின் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களை இதன் வெளியேற்றும் கடுமையாகவேப் பாதிக்க செய்தது.

இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!

ஃபோக்ஸ்வேகனின் போலோ காருக்கென இந்தியாவில் தனி ரசிக பட்டாளம் உண்டு. இவர்களையும், இக்காரின் வெளியேற்றும் கண் கலங்கச் செய்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கூடுதல் சென்டிமெண்டை ஏற்படுத்தும் வகையில் அந்நிறுவனம் இந்தியாவின் கடைசி போலோ காரை டெலிவரி செய்ய வெளியேற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது.

வீடியோவில் இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரிக்காக ஷோரூமில் இருந்து வெளியேறும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த காட்சி பலரை உணர்ச்சி வசப்பட செய்யும் வகையில் உள்ளது. நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் என போலோவை கூறலாம். இந்த காரை நிறுவனம் 2010ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தியது.

இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!

இது நிறுவனத்தின் மலிவு விலை காராக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆகையால், ஃபோக்ஸ்வேகனின் அதிகம் விற்பனையாகும் காராக போலோ உருவெடுத்தது. தற்போதும் பலர் இந்த காரை வாங்கும் ஆசையுடன் இருக்கின்றனர். இருப்பினும், ஃபோக்ஸ்வேகன் போலோவை அதிரடியாக வெளியேற்றியிருக்கின்றது. ஹர்யானா மாநிலத்தில் உள்ள பல்லபர்ஹ் பகுதியைச் சேர்ந்த ஓர் நபருக்கே போலோவின் கடைசி யூனிட் டெலிவரிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!

இந்த கடைசி யூனிட் போலோ லெஜண்ட் எனும் அலங்கார கிட் வாயிலாக அழகுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில்வர் நிறத்தால் அது கூடுதல் கவர்ச்சியான காராகவும் காட்சியளிக்கின்றது. இரண்டும் சேர்ந்து போலோவை கூடுதல் கவர்ச்சியான காராக மாற்றியிருக்கின்றது. லெஜண்ட் கிட்டின்கீழ் கருப்பு நிற வினில் விராப் ரூஃபிற்காகவும், பிளாக் கார்னிஷ் பூட் லிட்டிற்கும், சைடு பாடி டிகேல்கள் மற்றும் லெஜண்ட் பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!

ஆனால், டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கும் போலோ காரின் பக்கவாட்டு பகுதியில் கிராஃபிக்குகள் பொருத்தப்படாமல் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. வாடிக்கையாளர் தவிர்த்தல் அல்லது ஸ்டாக் இல்லாத காரணத்தினால் கிராஃபிக்குகள் ஒட்டப்படாமல் விடப்பட்டிருக்கும் என யூகிக்கப்படுகின்றது. கம்ஃபோர்ட்லைன் எம்பிஐ வேரியண்டையே போலோவின் கடைசி யூனிட்டாக ஃபோக்ஸ்வேகன் தயாரித்தது. இந்த வேரியண்டில் பன்முக சிறப்பு வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!

அவற்றில் முக்கியமான அம்சங்களாக 2 டின் ஆடியோ சிஸ்டம், 3 ஸ்போக் டில்ட் அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல், பின் பக்கத்திற்கான ஏசி வெண்ட் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவை காட்சியளிக்கின்றன. இதுதவிர, புஷ் ஸ்டார்ட்- ஸ்டாப் பட்டன், ரிவரஸ் கேமிரா, பனி மின் விளக்கு, பகல்நேர எல்இடி லைட், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் 15 அங்குல அலாய் வீல் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!

இத்தகைய சூப்பரான காருக்கே நடப்பு 2022ஆம் ஆண்டு இறுதியாண்டாக மாறியிருக்கின்றது. இக்காரின் வெளியேற்றத்திற்கு தற்போது சந்தையில் அதிகரித்து வரும் புதுமுகங்களின் வருகையே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுதவிர, தற்போது இந்தியர்கள் மத்தியில் ஹேட்ச்பேக் கார்களைக் காட்டிலும் எஸ்யூவி ரக கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதுமாதிரியான சூழல்களாலேயே போலோ ஹேட்ச்பேக் தற்போது வெளியேற்றப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ இந்தியாவில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டார், 1.0 லிட்டர் 75 பிஎஸ் எம்பிஐ மோட்டார் மற்றும் 1.0 லிட்டர் 110 பிஎஸ் டிஎஸ்ஐ டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் என பல விதமான மோட்டார்களுடன் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இத்துடன், மேனுவல் மற்றும் தானியங்கி கியர் பாக்ஸ் தேர்வுகளும் இந்த காரில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
India s last volkswagen polo delivered here is full details
Story first published: Thursday, August 11, 2022, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X