இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

இந்திய சந்தையில் தனது 3வது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது முழுமையாக தயாராகி விட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் கார், நாளை (செப்டம்பர் 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை (Tata Tiago EV) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) என 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் மூன்றாவதாக டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

தற்போது விற்பனைக்கு வரவிருப்பது ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். டாடா டியாகோ காரானது, ஏற்கனவே ஐசி இன்ஜின் (வழக்கமான எரிபொருளில் இயங்க கூடியது) மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வரவுள்ளது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

இதன் மூலம் ஐசி இன்ஜின், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என 3 வெர்ஷன்களில் கிடைக்கும் இந்தியாவின் 2வது கார் என்ற பெருமையை டாடா டியாகோ பெறவுள்ளது. முன்னதாக டாடா டிகோர் காரானது ஐசி இன்ஜின், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கைதான் முழுமையாக ஓங்கியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 100 எலெக்ட்ரிக் கார்களில், சுமார் 85 எலெக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையது! இந்த ஆதிக்கத்தை மேலும் அதிகமாக்குவதற்கு டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 26kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்புதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் இந்த பேட்டரி 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜை வழங்கும் (ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்கும் தொலைவு) என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

அத்துடன் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டிருக்கலாம். இதன்படி டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் இந்த பேட்டரியை வெறும் ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். மேலும் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கும்.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

இதில், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஸ்மார்ட்வாச் கனெக்ட்டிவிட்டி மற்றும் மல்டி மோடு ரீஜென் ஃபங்ஷன் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. டிசைனை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட ஐசி இன்ஜின் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களை போலேதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரும் இருக்கும் என கருதப்படுகிறது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

ஆனால் இது எலெக்ட்ரிக் கார் என்பதால், டிசைனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும். இதன்படி முன் பகுதியில் மூடப்பட்ட வகையிலான க்ரில் அமைப்பு, இவி பேட்ஜ்கள் ஆகிய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். இதுதவிர நீல நிற அலங்கார வேலைப்பாடுகளையும் நாம் எதிர்பார்க்க முடியும். வெளிப்புறத்தில் மட்டுமல்லாது, உட்புறத்திலும் நீல நிற அலங்கார வேலைப்பாடுகள் இருக்கும் என கூறப்படுகிறது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை பற்றி இங்கே குறிப்பிட்ட ஆக வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. விலைதான் அந்த முக்கியமான தகவல். டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்தான், இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கலாம் (India's Most Affordable Electric Car) என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

அதாவது 10 லட்ச ரூபாய் என்ற விலைக்குள் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுவதால்தான், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஆவலை தூண்டியுள்ளது.

இனி எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவே தவம் கிடக்கும் விலை குறைவான டாடா தயாரிப்பு நாளை அறிமுகம்!

ஆனால் டியாகோ எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வமான விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாளைதான் அறிவிக்கும். எனினும் மிகவும் விலை குறைவானது என்பதால், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

Most Read Articles
English summary
India s most affordable electric car launch tomorrow
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X