எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் எம்ஜி ஹெக்டர் (MG Hector) காரை வாங்கலாமா? இதற்கான விளக்கத்தையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

இங்கிலாந்தை நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனம் எம்ஜி (MG). இந்நிறுவனம் சீனருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் கால்தடம் பதித்து நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய முதல் தயாரிப்பு ஹெக்டர் (Hector) ஆகும். ஆகையால், இப்போது இந்த கார் ஸ்பெஷலான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் நிறுவனத்திற்கென நற்பெயர் நிலவிக் கொண்டிருக்கின்றது என்றால் அதற்கு இந்த ஹெக்டர் கார் மாடலும் ஓர் காரணமாகும்.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

இந்த வாகனம் ஹெக்டர் பிளஸ் என்கிற தேர்விலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டில் ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்ட் சந்தையில் வாங்கலாமா?, வாங்கினால் அது நாம் செலவு செய்யும் தொகைக்கு ஏற்றதாக இருக்குமா? என்பது பற்றி விளக்கும் தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

இட வசதி:

இட வசதியைப் பொருத்தவரை எம்ஜி ஹெக்டர் விசாலமான கேபினைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இந்த அம்சத்திற்காகவும், அதிக தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்திற்காகவுமே இந்த கார் நம்முடைய சந்தையில் பிரபலமடைந்துக் காணப்படுகின்றது. இதன் காரணமாக நீண்ட மாத கால காத்திருப்பு நிலவியது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

ஆகையால், அதிக இட வசதியைக் கொண்ட காரை செகண்ட் ஹேண்ட் சந்தையில் வாங்க நீங்கள் விருப்பப்பட்டால், இந்த காரையும் உங்களது லிஸ்டில் தாரளமாகக சேர்த்துக் கொள்ளலாம். இந்த காரில் ஐந்து பேர் வரை மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், ஹெக்டர் பிளஸ் எனும் தேர்வில் கிடைக்கும் காரில் 6 முதல் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

எஞ்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் எப்படி?

எம்ஜி ஹெக்டர் காரில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 170 எச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இம்மோட்டார் அதிகபட்சமாக 143 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

இதுதவிர, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை வழக்கமான டிரான்ஸ்மிஷனாகவும், 8 ஸ்டெப் சிவிடி தானியங்கி கியர்பாக்ஸ் டர்போ பெட்ரோல் மோட்டாருடன் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்த 8 ஸ்டெப் சிவிடி-க்கு முன்னதாக 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வே டர்போ பெட்ரோல் மோட்டாருடன் வழங்கப்பட்டது. 2021 பிப்ரவரிக்கு பின்னர் இந்த கியர்பாக்ஸ் வழங்கல் நிறுத்தப்பட்டது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

ஆனால், செகண்ட் ஹேண்ட் சந்தையில் இந்த 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸுடன் எம்ஜி ஹெக்டர் காரை பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், எம்ஜி நிறுவனம் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தையும் பெட்ரோல் மாடல்களுடன் வழங்கப்படுகின்றது. இந்த சிஸ்டம் தனித்துவமாக 20 என்எம் டார்க் வரை வெளியேற்றும். இந்த சிஸ்டம் அதிக எரிபொருள் சிக்கனத்திற்கு உகந்ததாக இருக்கின்றது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

இதன் டீசல் மோட்டார் நெடுஞ்சாலைகளில் 16.5 கிமீ மைலேஜையும், நகர சாலைகளில் 12.6 கிமீ மைலேஜையும் வழங்கும் திறன் கொண்டது. அதேவேலையில், இதன் பெட்ரோல் மோட்டாரின் மேனுவல் வெர்ஷன் 7.25 கிமீ முதல் 10.27 கிமீ வரையில் மைலேஜ் தரும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் டிசிடி கியர்பாக்ஸஸ் கொண்ட தேர்வு உச்சபட்சமாக 6.9 கிமீ - 9 கிமீ வரையில் மட்டுமே மைலேஜ் தரும். ஆகையால், இதில் டீசல் மோட்டாரே பெஸ்டானதாகக் காட்சியளிக்கின்றது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

வேரியண்டுகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

எம்ஜி ஹெக்டர் தற்போது சந்தையில் நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகியவையே அவை ஆகும். வேரியண்டுகளுக்கு ஏற்ப சிறப்பம்சங்கள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, உயர் நிலை தேர்வான ஷார்ப்-இல் எக்கசக்க வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக 10.4 அங்கு திரை காரின் கேபினுள் வழங்கப்பட்டிருக்கின்றது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

இது தொடுதிரை வசதிக் கொண்டது. மேலும், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, தானியங்கி குரல் கட்டளை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, நான்கு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் இருக்கை, இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம், பெரிய சன்ரூஃப், ஹீட்டட் ஓஆர்விஎம், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், தானியங்கி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள் மற்றும் 8 வண்ணங்கள் அடங்கிய மூட் லைட் செட்-அப் உள்ளிட்டவையும் ஹெக்டரின் ஷார்ப் வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக அதிகம். டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, டிராக்சன் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இதைக்காட்டிலும் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக இதன் ஷார்ப் வேரியண்ட் காட்சியளிக்கின்றது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

ஹெக்டர் காரில் கவனிக்க வேண்டியவை:

எம்ஜி ஹெக்டர் காரில் அனைவரைய் ஈர்க்கக் கூடிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை இருக்கின்றது. இந்த திரை மிக ஸ்லோவாக பதில் அளிப்பதாகவும், சில நேரங்களில் அது வேலை செய்வதில்லை என்றும் கூறப்படுகின்றது. ஆகையால், சில நேரங்களில் இந்த திரையை பயன்டுத்துவதில் சிக்கல் ஏற்படுவது தெரிகின்றது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

எனவே, செகண்ட் ஹேண்டில் எம்ஜி ஹெக்டர் காரை வாங்க செல்லும் முன் இதனை சரிபார்த்து பின்னர் வாங்குவது நல்லது. இதன் குரல் கட்டளை வசதியிலும் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுவும் மிக பொறுமையாகவே வேலை செய்வதாகவும், அதேநேரத்தில் நல்ல பலனை அளிப்பதாகவும் அது இருப்பதாகவும் தற்போதைய ஹெக்டர் பயன்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

ஹெக்டர் காரின் கியர் பாக்ஸில் சிக்கல் இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, டிசிடி கியர்பாக்ஸ் இயக்கத்தின்போது அதிக உஷ்னமாவதை அதன் பயனர்கள் சிலர் உணர்ந்திருக்கின்றனர். மிகவும் நெருக்கமான டிராஃபிக் நேரங்களில் இது சற்று கூடுதலாகவே தென்படுதவாகக் கூறப்படுகின்றது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

இதுபோன்ற சிக்கல் இருப்பதன் காரணத்தினாலேயே இந்த கியர்பாக்ஸ் கொண்ட தேர்வுகள் மிகவும் குறைவான மைலேஜை தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றன. இத்தகைய பிரச்னையை சரி செய்யவே சமீபத்தில் எம்ஜி நிறுவனம் 14 ஆயிரம் யூனிட் ஹெக்டர் கார்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. பாதிக்கப்பட்ட பாகங்களை சரி செய்யவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

எம்ஜி ஹெக்டர் காரை செகண்ட் ஹேண்டில் வாங்கலாமா?.. வாங்கினால் அது ஒர்த்தானதாக இருக்குமா?.. இதோ முழு தகவல்!

இதுபோன்று கணிசமான சிக்கல்களை இந்த கார் கொண்டிருக்கின்ற போதிலும் சந்தையில் நல்ல ரீ-சேல் வேல்யூவைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. ஆகையால், சற்று அதிக விலையைக் கொண்டதாகவே யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஹெக்டர் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி பயன்படுத்திய ஹெக்டர் காரே ரூ. 13 லட்சம் தொடங்கி ரூ. 19 லட்சம் வரையில் விற்பனைக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Is it a good idea to buy mg hector second hand
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X