அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் மாடலின் லிமிடெட் எடிசன் எஃப்-பேஸ் எஸ்விஆர் 1988 என்கிற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஜாகுவார் எஸ்யூவி காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

உலகளவில் பிரபலமான லக்சரி எஸ்யூவி கார் என்று பார்த்தால், அதில் நிச்சயம் ஜாகுவார் எஃப்-பேஸின் பெயரும் இருக்கும். அத்தகைய காரில்தான் எஃப்-பேஸ் எஸ்விஆர்1988 என்ற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிசன் என சொல்வதை காட்டிலும் லிமிடெட் எடிசன் என்றுதான் இதனை சொல்ல வேண்டும்.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

ஏனெனில் உலகளவிலேயே இதன் வெறும் 394 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பணக்காரர்களும் இந்த சிறப்பு பதிப்பு எஃப்-பேஸ் காரை வாங்குவது சிரமம் தான். இருப்பினும் இந்தியாவில் புதிய எஃப்-பேஸ் எஸ்விஆர் 1988 காருக்கான முன்பதிவுகளை ஜாகுவார் நிறுவனம் துவங்கியுள்ளது.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

இந்த காரின் பெயரில் உள்ள 1988 என்பது உலக ஸ்போர்ட்ஸ்-முன்மாதிரி பந்தயத்தில் ஜாகுவார் எக்ஸ்.ஜே.ஆர்-9 வெற்றி பெற்ற ஆண்டை குறிப்பதாக உள்ளது. இதற்காக, எக்ஸ்ஜேஆர்-9 முன்மாதிரியை நினைவுக்கூறும் விதமாக அதன் ஊதா நிறத்தில் எஃப்-பேஸின் இந்த புதிய லிமிடெட் எடிசன் கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் காரின் அலாய் சக்கரங்கள் அஸ்தனமாகும் சூரியனின் தங்க சாடின் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

இந்த நிறத்தை காரின் வெளிப்புற மற்றும் உட்புறங்களில் சில பகுதிகளிலும் காண முடிகிறது. உதாரணத்திற்கு, முன்பக்கத்தில் ஜாகுவாரின் லோகோ மற்றும் பின்பக்கத்தில் டெயில்கேட் பகுதியை கூறலாம். இந்த நிறத்திற்கு மாற்றாக ஷாம்பெயின் கோல்ட் சாடின் நிறத்திலும் 22-இன்ச் அலாய் சக்கரங்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். அத்துடன் காரின் வெளிப்பக்கத்தில் பிரத்யேக எண் கிராஃபிக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இது 1இல் இருந்து 394 வரையிலான எண்ணை குறிக்கும்.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

‘எடிசன் 1988' முத்திரை இரு முன்பக்க ஃபெண்டர்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இவை போதாதென்போர்க்காக, கருப்பு நிற பாகங்கள் தொகுப்பையும் ஜாகுவார் வழங்கவுள்ளது. இந்த தொகுப்பை பெறுவதன் மூலமாக கதவு கண்ணாடி மூடிகள் மற்றும் பிரேக் காலிபர்களை பளபளப்பான கருப்பு நிறத்தில் பெறலாம். அதேநேரம் இந்த தொகுப்பின் வாயிலாக சக்கர மைய மூடியில் எஸ்விஆர் லோகோவை பெற முடியும்.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

அப்படியே புதிய எஃப்-பேஸ் எஸ்விஆர் காரின் உட்புறத்திற்கு சென்றால், கார்பன்-ஃபைபர் ஃபினிஷிங்-கினாலும், செமி-அனிலின் எபோனி லெதர் உள்ளமைவினாலும் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏற்கனவே கூறியதுபோல், டேஸ்போர்டு, ஸ்டேரிங் சக்கர ஸ்போக்குகள், கியர் ஷிஃப்ட் பெடல்கள் மற்றும் முன்பக்க செயல்திறன்மிக்க ஹீட்டட் & கூல்டு இருக்கைகளில் சூரிய அஸ்தமன கோல்டு சாடின் நிறத்தை பார்க்க முடிகிறது.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

வழக்கமாக எஃப்-பேஸ் காரின் ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்படும் ஜாகுவாரின் லோகோ மற்றும் வளையங்கள் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செயப்பட்டுள்ளன. வெளிப்புறத்தை போல் உட்புறத்திலும் எடிசன் 1988 லோகோவை ஒளியூட்டப்பட்ட வரவேற்பு தட்டுகள் மற்றும் டேஸ்போர்டில் காண முடிகிறது. அதேபோல் காரின் எண்ணையும் (1-394) ஜாகுவார் வழங்கியுள்ளது.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் 1988 ஸ்பெஷல் எடிசன் காரில் 5.0 லிட்டர், சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 543 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த சூப்பர்சார்ஜ்டு என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

இவற்றுடன் அனைத்து-சக்கர-ட்ரைவ் (4x4) அமைப்பையும் எஃப்-பேஸ் லிமிடெட் எடிசன் கார் கொண்டுள்ளது. பிராண்டின் எஸ்யூவி கார்கள் வரிசையில் பிரதான மாடலாக முதலிடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள எஃப்-பேஸ் எஸ்விஆர் 1988 காரின் தோற்றத்தில் பிரத்யேகமான பெயிண்ட் பயன்படுத்தப்பட்டிருப்பது மட்டுமின்றி, காரின் அதி-செயல்திறன்மிக்க டிரைவிங் பண்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஜாகுவார் தெரிவித்துள்ளது.

அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

2016இல் இருந்து சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் ஜாகுவார் எஃப்-பேஸ் லக்சரி எஸ்யூவி காரின் பிரத்யேக வாகன மதிப்பீட்டு (எஸ்விஆர்) வேரியண்ட் 2019இல் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின் 2 வருடங்கள் கழித்து கடந்த 2021இல் தான் இந்தியாவில் எஃப்-பேஸ் எஸ்விஆர் மாடல் விற்பனைக்கு வந்தது. அதேபோல் கடந்த 2022 மே மாத இறுதியில் அமெரிக்கா உள்பட வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகமான எஃப்-பேஸ் எஸ்விஆர் 1988 எடிசன் கிட்டத்தட்ட 1.5 மாதங்கள் கழித்து தற்போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar f pace svr limited edition launched
Story first published: Friday, July 1, 2022, 16:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X