ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஜீப் காம்பஸின் 5 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு காம்பஸ் 5ஆம் ஆண்டு நிறைவு எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காம்பஸ் காரை பற்றிய முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் இந்தியாவில் அதன் விலை குறைவான காராக காம்பஸை கடந்த 2017 ஜூலை 31இல் ரூ.14.95 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்தது. காம்பஸிற்கு கிடைத்த உடனடி வெற்றியின் மூலமாக இந்திய சந்தையில் கவனிக்கத்தக்க பிராண்டாக மாறிய ஜீப் அதன்பின் காம்பஸில் பல்வேறு விதமான மாற்றங்களை கொண்டுவந்தது.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

மேலும், இந்தியாவில் வ்ராங்லர், மெரிடியன் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை கிராண்ட் செரோக்கி என பல்வேறு புதிய கார்களை கொண்டுவருவதற்கு அடித்தளமாக காம்பஸ் அமைந்தது. இந்தியாவில், இத்தகைய காம்பஸ் மாடலின் 5 ஆண்டுகால விற்பனை பயணத்தை கொண்டாடும் விதமாகவே தற்போது சிறப்பு பதிப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

காம்பஸ் 5ஆம் ஆண்டு நிறைவு எடிசன் என்கிற பெயரில் களமிறக்கப்பட்டுள்ள இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.44 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது காம்பஸின் வழக்கமான எக்ஸ்-ஷோரூம் விலையை காட்டிலும் சற்று அதிகமாகும். இந்தியாவில் காம்பஸ் 5-இருக்கை எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.18.39 லட்சத்தில் துவங்கி ரூ.26.14 லட்சம் வரையில் உள்ளன.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

புதிய 5ஆம் ஆண்டு நிறைவு எடிசன் மட்டுமின்றி, நைட் ஈகிள், லாங்கிட்யூட் மற்றும் லிமிடெட் எடிசன்களிலும் காம்பஸ் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறான ஸ்பெஷல் எடிசன் கார்களில் பொதுவாக அப்டேட்கள் வெளிப்பக்கத்திலும், உட்புற கேபினிலும் தான் கொண்டுவரப்படும். இதில் காம்பஸின் இந்த 5ஆம் ஆண்டு நிறைவு எடிசன் மட்டும் என்ன விதிவிலக்கா...!

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த வகையில் இந்த புதிய காம்பஸ் ஸ்பெஷல் எடிசன் காரை சுற்றிலும் ஆங்காங்கே ‘5ஆம் ஆண்டுநிறைவு' லோகோக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் முன்பக்கத்தின் கீழ்பகுதி ஆனது சாடின் கிரானைட் க்ரிஸ்டல் டிசைனில் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்க, காரின் பக்கவாட்டு பகுதிகளில் கிளாடிங்குகளை காரின் உடல் நிறத்தில் காண முடிகிறது.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

பளபளப்பான கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் புதிய முன்பக்க க்ரில் அமைப்பில் க்ரே நிறத்தில் வளையங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தை காட்டும் வெளிப்புற பக்கவாட்டு கண்ணாடிகள் இதே க்ரே நிறத்தில் இண்டிகேட்டர் விளக்கை கொண்டுள்ளன. அலாய் சக்கரங்கள் 18 இன்ச்சில் கிரானைட் கிரிஸ்டல் ஃபினிஷ் செய்யப்பட்டவைகளாக உள்ளது.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இவ்வாறு, ஜீப் நிறுவனம் தனது முந்தைய ஸ்பெஷல் எடிசன் கார்களில் எத்தகைய ஃபார்முலாவை உபயோகித்ததோ அதே பாணியை தான் புதிய காம்பஸ் 5ஆம் ஆண்டு நிறைவு எடிசனிலும் தொடர்ந்துள்ளது. உட்புறத்தில் லெதர் இருக்கைகள் இளம் டங்க்ஸ்டன் நிற தையல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

கேபின் முழுவதும் பியானோ கருப்பு மற்றும் சற்று அடர் சில்வர் நிறத்தில் காட்சியளிக்கிறது. உட்புற கேபினில் புதியதாக தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய IRVM-ஐ கொடுத்துள்ளனர். மற்றப்படி என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. புதிய காம்பஸ் 5ஆம் ஆண்டுநிறைவு எடிசனிலும் வழக்கமான இரு என்ஜின் தேர்வுகள் தான் தொடரப்பட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இதில் 1.4 லிட்டர் மல்டி-ஏர் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 163 எச்பி மற்றும் 2,500 - 4,000 ஆர்பிஎம்-இல் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6 மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டாலும், பெட்ரோல் வேரியண்ட்கள் 4x2 ட்ரைவ் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றன.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

மறுப்பக்கம், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது 3,750 ஆர்பிஎம்-இல் 170 எச்பி மற்றும் 1,750- 2,500 ஆர்பிஎம்-இல் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வாங்கலாம். இதில் ஆட்டோமேட்டிக் தேர்வில் 4x4 ட்ரைவ் அமைப்பும் வழங்கப்படுகிறது.

ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

புதிய காம்பஸ் 5ஆம் ஆண்டு நிறைவு எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.24.44 லட்சத்தில் துவங்கி அதிகப்பட்சமாக ரூ.28.24 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விற்பனையில் ஜீப் காம்பஸிற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700, டாடா ஹெரியர், எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep launched compass 5th anniversary edition in india read to find more details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X