India
YouTube

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

ஜீப் மெரிடியன் காருக்கு வெகு விரைவில் புக்கிங் தொடங்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஜீப் மெரிடியன் (Jeep Meridian) கார், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்த காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் மே மாதம் தொடங்கப்படவுள்ளது. அதை தொடர்ந்து ஜீப் மெரிடியன் கார் வெகு விரைவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

ஜீப் காம்பஸ் காருடன் மெரிடியன் பிளாட்பார்ம்மை பகிர்ந்து கொள்கிறது என்பது ரெகுலர் வாசகர்களுக்கு தெரியும். எனினும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு பொருந்தும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

டிசைன்

ஜீப் மெரிடியன் கார் கம்பீரமான தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. முன் பகுதியில் செவ்வக வடிவ ஹெட்லேம்ப்களையும், 7-ஸ்லாட் க்ரில் அமைப்பையும் ஜீப் மெரிடியன் பெற்றுள்ளது. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், கருப்பு நிற பில்லர்கள், காரை சுற்றிலும் கருப்பு நிற க்ளாடிங் ஆகியவற்றை நம்மால் காண முடிகிறது.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

பின் பகுதியை பொறுத்தவரையில், நேர்த்தியான எல்இடி டெயில்லைட்கள், பம்பரின் மீது சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் ஜீப் மெரிடியன் காரின் டிசைன் அனைவரையும் கவரக்கூடிய வகையில் கம்பீரமாக இருக்கும். நீங்கள் இந்த காரில் சென்றால், அனைவரும் திரும்பி பார்ப்பது உறுதி.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

இன்டீரியர்

ஜீப் காம்பஸ் காரின் கேபினுக்கும், ஜீப் மெரிடியன் காரின் கேபினுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இதில் டேஷ்போர்டின் டிசைன், ஸ்டியரிங் வீல், சென்டர் கன்சோல் ஆகியவை முக்கியமானவை. எனினும் ஜீப் மெரிடியன் காரின் இன்டீரியர் ட்யூயல்-டோன் ப்ளாக்/ப்ரவுன் நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும் இந்த காரை இன்னும் பிரீமியமாக காட்டுகின்றன.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

இன்ஜின்

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில் ஜீப் மெரிடியன் கார் ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடன் மட்டுமே கிடைக்கும். அது 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஒரு இன்ஜின் தேர்வுதான் என்றாலும், 2 கியர் பாக்ஸ் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

இதன்படி 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என 2 கியர் பாக்ஸ்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். தற்போதைக்கு டீசல் இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டாலும், வரும் காலத்தில் பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் ஜீப் நிறுவனம் மெரிடியன் காரில் வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

வசதிகள்

ஜீப் மெரிடியன் காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் வழங்கப்படுகிறது. இதுதவிர வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி (ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராடு ஆட்டோ), ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளையும் ஜீப் மெரிடியன் பெற்றுள்ளது.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

பாதுகாப்பு வசதிகள்

ஜீப் மெரிடியன் காரின் பாதுகாப்பு வசதிகளும் நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன. 6 ஏர்பேக்குகள், ட்ராக்ஸன் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஜீப் மெரிடியன் கார் பெற்றுள்ளது.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

டெலிவரி

ஜீப் மெரிடியன் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் மே மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மெரிடியன் காரை இந்திய வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ஜீப் நிறுவனம் வரும் ஜீன் மாத கடைசியில் தொடங்கவுள்ளது. பிரீமியம் கார் என்பதால் ஜீப் மெரிடியனின் விலை அதிகமாக இருக்கும்.

போட்றா வெடிய... விரைவில் புக்கிங் தொடங்குகிறது... இந்த காருக்காகதான் நிறைய பேர் காத்து கெடக்கறாங்க!

அனேகமாக ஜீப் மெரிடியன் காரின் ஆரம்ப விலை 26 லட்ச ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. மெரிடியன் காரின் விலையை ஜீப் நிறுவனம் வரும் நாட்களில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. விலை உயர்ந்த கார் என்றாலும், அதற்கேற்ற அம்சங்களை ஜீப் மெரிடியன் கொண்டிருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep meridian bookings to commence from may 2022 here s everything you need to know
Story first published: Saturday, April 30, 2022, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X