வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

இந்தியர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ள காரின் உற்பத்தி பணிகளும், முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ஜீப் மெரிடியன் (Jeep Meridian). விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மெரிடியன் எஸ்யூவி காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை ஜீப் இந்தியா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

இதை தொடர்ந்து வெகு விரைவில் விலை அறிவிக்கப்பட்டு, ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மெரிடியன் எஸ்யூவி கார்களை டெலிவரி செய்யும் பணிகளை ஜீப் இந்தியா நிறுவனம் தொடங்கவுள்ளது.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

வரும் ஜூன் மாதத்தின் 3வது வாரத்தில் இருந்து ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஜீப் மெரிடியன் காரை புக்கிங் செய்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள ஜீப் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மூலமாக மெரிடியன் எஸ்யூவி காரை நீங்கள் முன்பதிவு செய்ய முடியும்.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

அல்லது இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மெரிடியன் எஸ்யூவி காரை நீங்கள் புக்கிங் செய்து கொள்ளலாம். முன்பதிவுகளை ஏற்கும் பணியுடன், ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

மஹாராஷ்டிரா மாநிலம் ரஞ்சன்கான் பகுதியில் உள்ள தொழிற்சாலையில்தான் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார்களின் உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன. இது ஜீப் காம்பஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள, மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எஸ்யூவி கார் ஆகும். ஜீப் காம்பஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரிலும் வழங்கப்பட்டுள்ளது.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

இது 170 ஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 2.0 லிட்டர், நான்கு-சிலிண்டர், மல்டிஜெட் டர்போ-டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் ஆரம்பத்தில் ஒரே ஒரு டீசல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே கிடைக்கும்.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

எனினும் பின் நாட்களில் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 1.3 லிட்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வை பின் நாட்களில் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ரஞ்சன்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஜீப் மெரிடியன் கார்கள் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

எனவே ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் முக்கியமான ஏற்றுமதி மையமாக ரஞ்சன்கான் தொழிற்சாலை இருக்கும். இந்திய சந்தையில் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq), டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) போன்ற கார்களுடன் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் போட்டியிடவுள்ளது.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய் ஆட்டோ வசதிகளுடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவையும் குறிப்பிடத்தகுந்த வசதிகள் ஆகும்.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், டிராக்ஸன் கண்ட்ரோல், 360 டிகிரி பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளையும் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் 7 சீட்டர் தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதன் மத்திய வரிசையில் பென்ச் சீட் இருக்கை அமைப்பு இடம்பெற்றிருக்கும்.

வெயிட்டிங்கே வெறி ஏறுதே! இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடக்கம்! முன்பதிவும் ஸ்டார்ட் ஆயிருச்சு

எனினும் மத்திய வரிசையில் கேப்டன் இருக்கைகள் பொருத்தப்பட்ட 6 சீட்டர் மாடல், பின் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் மெரிடியன் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட அனைத்து தகவல்களும் வெளியாகி விட்ட நிலையில், விலை மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep meridian suv bookings open officially details here
Story first published: Tuesday, May 3, 2022, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X