சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா அறிமுகம்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அறிவித்திருந்தபடியே அதிக மைலேஜ் தரும் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்காரின் வருகயை உச்சகட்ட எதிர்பார்ப்பில் இந்தியர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதன் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து கிராண்ட் விட்டாராவின் முழு விலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

ரூ. 10.45 லட்சம் தொடங்கி ரூ. 19.65 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். குறிப்பாக யாரும் எதிர்பார்த்திராத விலையில் இக்கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனமாக மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, அதிக பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் மாருதி சுஸுகி வாரி வழங்கியிருக்கின்றது. ஆகையால், இதன் விலை பல மடங்கு அதிகமாக இருக்கும் என யூகிக்கப்பட்டது. ஆனால், இதற்கு பட்ஜெட் விலையையே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது நிர்ணயித்திருக்கின்றது.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

இதன் முழுமையான விலை விபரத்தை வேரியண்ட் வாரியாக கீழே உள்ள பட்டியலில் பார்க்கலாம்:

வேரியண்ட் விபரம் ஒற்றை நிற தேர்வு இரட்டை நிற தேர்வு
Sigma Smart Hybrid MT ₹10,45,000 -
Delta Smart Hybrid MT ₹11,90,000 -
Delta Smart Hybrid AT ₹13,40,000 -
Zeta Smart Hybrid MT ₹13,89,000 -
Zeta Smart Hybrid AT ₹15,39,000 -
Zeta+ Intelligent Electric Hybrid eCVT ₹17,99,000 ₹18,15,000
Alpha Smart Hybrid MT ₹15,39,000 ₹15,55,000
Alpha Smart Hybrid AT ₹16,89,000 ₹17,05,000
Alpha Smart Hybrid ALLGRIP SELECT MT ₹16,89,000 ₹17,05,000
Alpha+ Intelligent Electric Hybrid eCVT ₹19,49,000 ₹19,65,000
சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே இந்த காருக்கா புக்கிங் பணிகளை நாட்டில் தொடங்கிவிட்டது. ரூ. 11 ஆயிரம் முன் தொகையிலேயே முன் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியாகிய தகவல்களின்படி 55 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இது மாருதி சுஸுகி வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். அதிகப்படியானோர் இக்காரின் ஸ்ட்ராங் ஹைபிரிட் தேர்வையே புக் செய்திருக்கின்றனர்.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

இத்தகைய நல்வரவேற்பே கிராண்ட் விட்டாராவிற்கு இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இது வருங்காலத்தில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக இந்த கார் 11 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதுதவிர, மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என்கிற இரு விதமான ஹைபிரிட் ஆப்ஷன்களும் கிராண்ட் விட்டாராவில் வழங்கப்படுகின்றது.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

இதுமட்டுமின்றி டூயல் டோன் (இரட்டை நிற) தேர்விலும் கிராண்ட் விட்டாராவை வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், உயர் நிலை தேர்வுகளில் மட்டுமே இந்த வசதியை பெற முடியும். அல்ஃபா, ஜெட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் ஆகிய தேர்வுகளில் மட்டுமே டூயல் டோன் ஆப்ஷன் வழங்கப்படும் என மாருதி சுஸுகி தெரிவித்திருக்கின்றது. இதற்கு கூடுதலாக ரூ. 16 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி சுஸுகி நிறுவனம் டொயோட்டா உடனான கூட்டணியின் அடிப்படையிலேயே கிராண்ட் விட்டாராவை உருவாக்கியிருக்கின்றது. இதன் கூட்டணியின்கீழாகவே டொயோட்டா நிறுவனத்திற்கான ஹைரைடர் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினாலேயே இவையிரண்டும் இரட்டையர்களைப் போல் உள்ளன.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

ஒரே மாதிரியான மோட்டார், ஒரே மாதிரியான தொழில்நுட்ப வசதி என பலவற்றில் இரண்டும் ஒரே மாதிரியான காட்சியளிக்கின்றன. ஏன் உருவத்தில்கூட இரு கார்களும் கணிசமான பொருத்தங்களைக் கொண்டிருக்கின்றன. அதேவேலையில், சில தனித்துவமான அலங்காரப் பொருட்களால் இவை மாறுபட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் என்பதை வெளிக்காட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக முகப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றம் கிராண்ட் விட்டாராவை புதுமுக காராக காட்சியளிக்க செய்கின்றது.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

இதற்காக இக்காரில் பெரிய குரோம் லைன்கள் கொண்ட ஹெக்ஸோகனல் க்ரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், மும்முனை எல்இடி பகல்நேர லைட்டுகள், பாடி கிளாடிங் மற்றும் ஹெட்லேம்ப் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், சைடு பாடி பேனல், டெயில்கேட் உள்ளிட்டவற்றிலும் கணிசமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

சிறப்பம்சங்களாக இந்த காரில் பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட் கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டுகள், கார் இணைப்பு தொழில்நுட்பம், எஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் கிராண்ட் விட்டாராவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

குறிப்பாக, இதன் உயர்நிலை தேர்வுகளில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை (ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பம் கொண்டது), ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், காரின் பின் பக்கத்திற்கும் ஏசி வெண்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழையும் வசதி என பல்வேறு பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

இதேபோல் பாதுகாப்பு அம்சங்களையும் மிக அதிகளவில் உயர்நிலை ட்ரிம்கள் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா பிளஸ் ட்ரிம்களில் 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம், டே-நைட் ஐஆர்விஎம் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட கிராண்ட விட்டாராவில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 101.6 பிஎச்பி பவரையும், 117 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

இதன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் முன்பக்க இரு வீல் டிரைவ் சிஸ்டம் என டிரைவிங் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதன் மைலேஜ் திறன் ஒரு லிட்டருக்கு 21.1 கிமீ ஆகும். இதைவிட பல மடங்கு அதிக மைலேஜ் தரக் கூடிய ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதிக் கொண்ட கிராண்ட் விட்டாரா இருக்கின்றது.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

இது ஒரு லிட்டருக்கு 27.97 கிமீ வரை மைலேஜ் தரும் என அராய் சான்று வழங்கியிருக்கின்றது. இந்த தேர்வில் 1.5 லிட்டர், 3 சிலிண்டர், அட்கின்சன் சைக்கிள் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், ஸ்ட்ராங்க் ஹைபிரிட் தொழில்நுட்பமாக 79 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இதுவும், பெட்ரோல் மோட்டாரும் இணைந்து 114.5 பிஎச்பி பவரை வெளியேற்றும்.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மின் மோட்டாருக்கென தனி பேட்டரி பேக் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. காரின் இயக்கத்திலேயே சார்ஜ் செய்து கொள்ளும். அவ்வாறு அது முழு சார்ஜ் அளவை எட்டுகின்றபோது 25 கிமீ வரை பெட்ரோல் செலவில்லாமல் பயணிக்க முடியும். ஆகையால், கணிடமான அளவு எரிபொருளை சிக்கனம் செய்ய முடியும். இந்த அம்சத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் ஸ்ட்ராங் ஹைபிரிட் கொண்ட கிராண்ட் விட்டாராவிற்கு நல்ல வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Just as promised the much awaited grand vitara is now on sale
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X