மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

2022 மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் ரூ.11.99 லட்சத்தில் இருந்து ரூ.19.49 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய ஸ்கார்பியோ என் மாடலின் மேனுவல் வேரியண்ட்களின் விலையே. ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் விலைகள் வருகிற ஜூலை 21இல் வெளியிடப்பட உள்ளன.

மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

தற்போதைய தலைமுறை ஸ்கார்பியோவை போன்று, புதிய ஸ்கார்பியோ என் காருக்கும் போட்டியளிக்க கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் என முன்னணி பிராண்ட்களின் மாடல்கள் தயார் நிலையில் உள்ளன. இவற்றிற்கும் 2022 ஸ்கார்பியோ என் காருக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

கட்டமைப்பு & இயக்குத்தளம்

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் மட்டுமே தற்போதைக்கு இந்த விலையில், பாடி-ஆன்-சட்டகத்தில் உருவாக்கப்பட்ட ஒரேயொரு 3-இருக்கை-வரிசை கொண்ட எஸ்யூவி காராக விளங்குகிறது. ஆனால் பொதுவாக மோனோகோக் இயக்குத்தளத்தில் கட்டமைக்கப்பட்ட வாகனங்களே (மேற்கூறப்பட்ட 3-இருக்கை வரிசை எஸ்யூவி கார்கள்) ஹேண்ட்லிங்கிற்கு சிறந்தவைகளாக இருப்பதாக சந்தையில் ஓர் கருத்து உள்ளது.

மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

இருப்பினும், தனது விரைப்பான சேசிஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பின் மீது மஹிந்திரா வைத்துள்ள நம்பிக்கையினால் பாடி-ஆன்-சட்டகத்தின் அடிப்படையிலேயே புதிய ஸ்கார்பியோ என் மாடலை உருவாக்கியுள்ளது. இதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், இத்தகைய பாடி-ஆன்-சட்டகத்தில் உருவாக்கப்பட்ட கார்கள் ஆஃப்-ரோடு பயணங்களில் சிறப்பாக செயல்படக்கூடியவை.

மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

ஆஃப்-ரோடு திறன்

ஏற்கனவே கூறிவிட்டோம், பாடி-ஆன்-சட்டகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், 2022 ஸ்கார்பியோ என் மாடல் ஆஃப்-ரோடுகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறது. அத்துடன் 4x4 ட்ரைவ் அமைப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளதால், எந்தவொரு கடினமான ஆஃப்-ரோடு சாலையிலும் ஸ்கார்பியோ என் காரை நம்பி செல்லலாம்.

மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

ஏனெனில் 4x4 ட்ரைவ் அமைப்பை கொண்ட கார்களில் குறை விகித கியர்மாற்றி, ஆஃப்-ரோடு மோட்கள், வாகனம் சறுக்குவதை தடுக்கும் கண்ட்ரோல், பின் சக்கரங்களுக்கான இயந்திர பூட்டு மற்றும் எலக்ட்ரானிக் நிலைப்பாட்டு பிரோகிராம் சார்ந்த பிரேக்-லாக்கிங் உள்ளிட்ட ஆஃப்-ரோடு பயணத்திற்கான அம்சங்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை மற்ற மோனோகோக் கார்களில் கிடைப்பதில்லை.

மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

மோனோகோக் கார்களில் கிடைக்கும் அதிகப்பட்ச ஆஃப்-ரோடு திறன்கள் என்று பார்த்தால், ட்ரைவ் & டிராக்‌ஷன் மோட்களையும், ஏறுமுகமான சாலைகளில் வாகனம் சறுக்குவதை தடுக்கும் கண்ட்ரோலையும் மட்டுமே சொல்ல முடியும். மஹிந்திராவின் எக்ஸ்யூவி700 மாடலிலும் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பு வழங்கப்படுகிறது, ஆனால் இதன் விலை முற்றிலுமாக வேறுப்பட்டதாக உள்ளது.

மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

என்ஜின் தேர்வுகள்

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பிரிவிலேயே பெரிய அளவிலான என்ஜின்களை தேர்வுகளாக பெற்றுள்ளது. அவை என்னென்ன என்பதையும், அவற்றின் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் கீழுள்ள அட்டவணையில் காணலாம்.

Diesel Low Variants Diesel High Variants Petrol
Engine 2.2-litre 2.2-litre 2-litre Turbo
Power 132PS 175PS 203PS
Torque 300Nm 370Nm / 400Nm 370Nm / 380Nm
Transmission 6-speed MT 6-speed MT / 6-speed AT 6-speed MT / 6-speed AT
Drivetrain RWD RWD / 4WD RWD
மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

அதேநேரம் கியா செல்டோஸில் ஆற்றல்மிக்க என்ஜினாக வழங்கப்படும் டர்போ-பெட்ரோல் என்ஜினை பற்றியும், டாடா சஃபாரியின் 2 லி டீசல் என்ஜினை பற்றியும் கீழே காணலாம்.

Kia Seltos Turbo-Petrol Tata Safari Diesel
Engine 1.4-litre turbo-petrol 2-litre Diesel
Power 140PS 170PS
Torque 242Nm 350Nm
Transmission 6-speed MT / 7-speed DCT 6-speed MT / 6-speed AT
Drivetrain FWD FWD
மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும் புதிய ஸ்கார்பியோ என் எந்த அளவிற்கு சிறந்தது? ஓர் சிறிய அலசல்!!

பரிமாண அளவுகள்

என்ஜின் தேர்வுகளை போல், நீளம், அகலம், உயரம் மற்றும் வீல்பேஸையும் மற்ற மாடல்களை காட்டிலும் அதிகமாக புதிய ஸ்கார்பியோ என் கொண்டுள்ளது. அதனை விளக்கும் அட்டவணை இதோ...

Dimension Mahindra Scorpio-N Kia Seltos Tata Safari
Length 4662mm 4315mm 4661mm
Width 1917mm 1800mm 1894mm
Height 1857mm 1620mm 1786mm
Wheelbase 2750mm 2610mm 2741mm
Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Key differences between mahindra scorpio n and its monocoque alternatives
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X