நிஜ உலகில் கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி இவ்வளவு மைலேஜ் தருதா? நம்மைபோல ஒருவர் கூறிய தகவல்!

கியா கேரன்ஸின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி வேரியண்ட் எவ்வளவு மைலேஜ் தருகின்றது என்கிற தகவலை அக்காரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் நபர் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களில் கியா கேரன்ஸ் (Kia Carens)-ம் ஒன்று. இந்த கார் மாடலின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி வேரியண்டைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நபரே அதன் ரியல் வேர்ல்டு மைலேஜ் விபரங்களை வெளியிட்டிருக்கின்றார்.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

இதுகுறித்து அவர் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிட்டிருக்கும் தகவலைப் பார்க்கலாம், வாங்க.

அந்-நபர் பயன்படுத்திக் கொண்டிருப்பது 1.4 லிட்டர் டி பிரெஸ்டீஜ் பிளஸ் மேனுவல் வேரியண்டாகும். இந்த காரிலேயே அதன் உரிமையாளர் 432 கிமீட்டர் தூரத்தைக் கவர் செய்திருக்கின்றார். இந்த நீண்ட தூர பயணத்திற்கு 39.9 லிட்டர் வரை பெட்ரோல் செலவாகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கையில் தோராயமாக ஒரு லிட்டருக்கு 10.82 கிமீ வரை மைலேஜ் தந்திருப்பது தெரிய வருகின்றது.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

அதேவேலையில், எம்ஐடி திரையோ 11.8 கிமீ ஒரு லிட்டருக்கு மைலேஜ் தந்திருப்பதாக தெரிவிக்கின்றது. இந்த 432 கிமீ தூர பயணத்தின் பெரும்பகுதி நகர் பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 23 மணி நேரம் இந்த பயணத்திற்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. அதிக மழை காரணமாக இந்தளவு அதிக கால இடைவெளி எடுத்துக் கொண்டதாக அக்காரின் உரிமையாளர் தெரிவித்தார்.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

மேலும், ஒவ்வொரு முறையும் காரில் பயணிக்கும்போது 50 சதவீதம் ஏசியை பயன்படுத்தியதாகவும், எட்டுக்கும் அதிகமானோருடனேயே இக்காரில் பயணித்ததாகவும் கேரின்ஸின் உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையிலேயே ஒரு லிட்டருக்கு 10க்கும் அதிகமான கிமீட்டர் மைலேஜை கேரன்ஸின் 1.4 லிட்டர் டி பிரெஸ்டீஜ் பிளஸ் மேனுவல் வழங்கியிருக்கின்றது.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

சாதாரணமான நேரங்களிலேயே நகர்ப்புற சாலைகள் அதிக வாகன போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். மழைக் காலங்களில் இது இன்னும் மோசமானதாக இருக்கும். இந்த மாதரியான சூழலிலேயே கேரன்ஸ் கார் பயன்பாட்டாளர் இந்தளவு குறைவான மைலேஜை பெற்றிருக்கின்றார். இருப்பினும், மழை, வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக பயணிகளுடன் பயணித்தும் இந்த அளவு மைலேஜை கேரன்ஸ் தந்திருக்கின்றதா என பிற எம்பிவி கார் பயன்பாட்டாளர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

இந்த நிலையிலேயே கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் மற்றொரு லாங் டிரைவில் அதிக மைலேஜை பெற்றிருக்கின்றார். இம்முறை அவர் பெங்களூருவில் இருந்து சென்னையை நோக்கி பயணித்ததாகக் கூறப்படுகின்றது. இம்முறை நெடுஞ்சாலைகள் வாயிலாக பயணித்திருக்கின்றார்.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

சுமார் 353 கிமீ தூர பயணம், மணிக்கு 100 கி.மீட்டருக்கும்., அதிகமான வேகம், ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு சிறுவருடன் இந்த பயணத்தை கேரன்ஸ் மேற்கொண்டிருக்கின்றது. இந்த பயணத்தின்போது அதே கேரன்ஸ் கார் ஒரு லிட்டருக்கு 17.3 கிமீ வரை மைலேஜ் தந்திருக்கின்றது. இதேபோல் அடுத்தடுத்த பயணங்களில் எடை, வேகம் மற்றும் ஏசி பயன்பாட்டிற்கு ஏற்ப மைலேஜை கேரன்ஸ் மாறி மாறி வழங்கியிருப்பதாக டீம் பிஎச்பி பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆயில் மாற்றத்திற்கு பின்னர் இதைவிட நல்ல மைலேஜ் இந்த கார் வழங்கும் என நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றார்.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

எஸ்யூவி மற்றும் எம்பிவி ஆகிய கலவையான தோற்றத்திலேயே கேரன்ஸ் காரை கியா உருவாக்கியிருக்கின்றது. இந்தியாவின் பெரிய குடும்பததாரர்களுக்கு ஏற்ற வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு மற்றும் ஏழு ஆகிய இரு விதமான இருக்கைகள் தேர்வில் கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிக சொகுசு வசதி மற்றும் இட வசதியை விரும்புவோர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த காரில் ஆறு இருக்கை தேர்வை கியா வழங்குகின்றது.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

இந்த ஆறு இருக்கை தேர்வானது லக்சூரி ப்ளஸ் ட்ரிம்மில் மட்டுமே கிடைக்கும். அதேவேலையில், இந்த வாகனம் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, பிரீமியம், பிரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி, லக்சூரி ப்ளஸ் ஆகும். இந்த அனைத்து வேரியண்டுகளிலும் ஏழு இருக்கை தேர்வுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

நிஜ உலகில் கியா கேரன்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எம்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது? நம்மை போல ஒரு கார் உரிமையாளர் கூறிய தகவல்!

கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை ரூ. 9.59 லட்சம் ஆகும். ஆனால், இக்கார் அறிமுகமான புதிதில் ரூ. 8.99 லட்சத்திற்கே விற்பனைக்கு வந்தது. தற்போது அதிகரித்து வரும் டிமாண்ட் மற்றும் வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவை இக்காரின் விலையை ரூ. 60 ஆயிரம் உயர செய்திருக்கின்றது. கியா கேரன்ஸ் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Kia carens 1 4 litre turbo petrol mt real world fuel efficiency details
Story first published: Friday, September 16, 2022, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X