விலை எவ்ளோனே தெரியாது... ஆனா, புக்கிங்கை வாரி குவிச்சிட்டாங்க! 24மணி நேரத்தில் 7738 புக்கிங்கை பெற்ற கேரன்ஸ்!

கியா கேரன்ஸ் (Kia Carens) காருக்கு இன்னும் விலை அறிவிக்கப்படாத நிலையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகளைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

கியா (Kia) நிறுவனம் இந்தியாவிற்கான இரண்டாவது எம்பிவி ரக காராக கேரன்ஸ் (Carens) காரை மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய கார் மாடல்களை விற்பனக்கு வழங்கி வருகின்றது. இதனைத் தொடர்ந்தே நான்காவது மாடலாக நிறுவனம் கேரன்ஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

இந்த காரின் விற்பனைக்கான வருகையை முன்னிட்டு மிக சமீபத்தில் புக்கிங் பணிகளை கியா நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை தினத்தின்போதே கியா கேரன்ஸ் எம்பிவி காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கின.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

மிக மிக குறைவான முன் தொகையில் காருக்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 25 ஆயிரம் எனும் தொகையின் அடிப்படையிலேயே கியா கார் விற்பனையாளர்கள் விரைவில் அறிமுகத்தைப் பெற இருக்கும் கேரன்ஸ்-க்கு புக்கிங்கை ஏற்று வருகின்றனர்.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

இந்த நிலையிலேயே கியா கேரன்ஸ் காருக்கு 24 மணி நேரத்தில் கிடைத்த புக்கிங் விபரம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கியா கேரன்ஸ் காருக்கு வெறும் 24 மணி நேரத்தில் 7,738 புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன. இது அபரிதமான வரவேற்பாகும்.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

இந்த நிலை இந்தியாவில் புதிய கார்களுக்கு மிக அமோகமான வரவேற்பு கிடைத்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ரகத்தில் எம்பிவியாகவும், தோற்றத்தில் எஸ்யூவி-யைப் போன்றும் இந்த கார் உருவாகி இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை ஹூண்டாய் அல்கஸார், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

மூன்று வரிசை இருக்கை அமைப்பு, எட்டு விதமான நிற தேர்வுகள் ஆகியவற்றில் கியா கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இம்பீரியல் ப்ளூ, மாஸ் பிரவுன், ஸ்பார்க்ளிங் சில்வர், இன்டென்ஸ் ரெட், கிளாசியர் ஒயிட் பியர்ல், கிளியர் வெள்ளை, கிராவிட்டி கிரே மற்றும் ஆரோரா பிளாக் பியர்ல் ஆகிய நிற தேர்வுகளிலேயே கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

மேலும், இந்த கார் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. பிரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் பிளஸ், லக்சூரி மற்றும் லக்சூரி ப்ளஸ் ஆகிய ட்ரிம்களிலேயே விற்பனைக்கு வர இருக்கிறது. ஆறு மற்றும் 7 இருக்கை தேர்வுகளே இதில் வழங்கப்பட இருக்கின்றன.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக கிரீடம் போன்ற தோற்றம் கொண்ட எல்இடி மின் விளக்கு, ஸ்டார் மேப் எல்இடி டிஆர்எல்கள், 16 இன்ச் அளவிலான இரட்டை டோன் அலாய் வீல்கள், குரோம் பூச்சுக் கொண்ட பின் பக்க பம்பர் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

மேலும், 10.25 இன்ச் அளவுள்ள எச்டி தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் இணைப்பு வசதி, 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம், 64 நிறங்கள் அடங்கிய ஆம்பிசியண்ட் மின் விளக்கு, ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

இவை மட்டுமின்றி, காற்றோட்ட வசதிக் கொண்ட இருக்கைகள் (முன்பக்கத்தில்), பன்முக டிரைவிங் மோட்கள், சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர், ஒயர்லெஸ் சார்ஜர், குளிர்பானங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் கோப்பை தாங்கிகள், 6 ஏர் பேக்குகள், இஎஸ்சி, விஎஸ்எம், எச்ஏசி, டிபிசி, ஏபிஎஸ், பிஏஎஸ், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் கருவி மற்றும் பின்பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் என ஏராளமான அம்சங்கள் கேரின்ஸில் இடம் பெற இருக்கின்றன.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

இதில் 6 ஏர் பேக் அம்சமானது வழக்கமான சிறப்பு அம்சமாக வழங்கப்பட இருக்கின்றது. ஆகையால், அனைத்து கேரன்ஸ் தேர்விலும் ஆறு ஏர் பேக்குகள் இடம் பெற இருக்கின்றது. இத்துடன், 3 விதமான எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இரு பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் ஒற்றை டீசல் எஞ்ஜின் என மூன்று விதமான மோட்டார் தேர்வுகளே இக்காரில் வழங்கப்பட இருக்கின்றது.

குறையவே இல்ல... இந்தியாவில் தூள் கிளப்பும் புதிய கார்கள் விற்பனை... 24 மணி நேரத்தில் பல ஆயிரம் புக்கிங்கை பெற்ற ஒற்றை கார்!

ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஜி 1.5 லிட்டர் பெட்ரோல், ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஜி 1.4 டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளிலேயே கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிடி மற்றும் 6 ஸ்பீடு ஏடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றது.

Most Read Articles

English summary
Kia carens mpv received 7738 bookings with in first 24 hours
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X