இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

மூன்று மாத பயன்பாட்டை அடுத்து கியா கேரன்ஸ் கார் உரிமையாளர் அக்கார் எந்த மாதிரியான சிறப்பு வசதி கொண்டது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

எஸ்யூவி கார் பிரியர்கள் மற்றும் எம்பிவி கார் பிரியர்கள் என இருவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கார் மாடலே இந்த கியாஸ் கேரன்ஸ். இந்த காரில் ஏழு பேர் வரை மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்தால் கூடுதல் ஒருவர் அல்லது இருவர் பயணிக்க முடியும் என்கின்றனர் இக்காரை பயன்படுத்தி வரும் உரிமையாளர்கள் சிலர்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

இதுபோன்று பல்வேறு தகவல்களை இக்காரை (கியா கேரன்ஸ்) பயன்படுத்திக் கொண்டிருக்கும் உரிமையாளர்கள் சிலர், அக்கார்குறித்த தகவல்களை ரிவியூ செய்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், கடந்த மூன்று மாதங்களாக கியா கேரன்ஸ் காரை பயன்படுத்தி வரும் ஓர் நபர் அந்த கார்குறித்த தகவல்களை தன்னுடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையில் வெளியிட்டிருக்கின்றார்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

அவர் கேரன்ஸ்குறித்து என்னென்ன தெரிவித்திருக்கின்றார் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். வாக் வித் நெஃப் எனும் யுட்யூப் சேனலின் வாயிலாகவே கேரன்ஸ் பற்றிய அனைத்து விபரங்களையும் (ரிவியூவை) அதன் உரிமையாளரின் வெளியிட்ட்டுள்ளார்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

அந்நபர் பயன்படுத்திக் கொண்டிருப்பது கியா கேரன்ஸ் டர்போ பெட்ரோல் வெர்ஷன் ஆகும். இதன் மேனுவல் வேரியண்டையே அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். வெளிநாட்டில் பணி புரிந்துக் கொண்டிருந்த இவர் அண்மையிலேயே இந்தியா திரும்பி வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே குடும்பத்துடன் பயணிப்பதற்காக ஓர் காரை அவர் முடிவு செய்தார்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

இந்த நிலையிலேயே அவரின் கண்களில் கியா கேரன்ஸ் பட்டிருக்கின்றது. அதிக அம்சங்கள் மற்றும் அதிக பேர் பயணிக்கும் வகையில் இந்த இருந்த காரணத்தினால் பார்த்த உடனயே கேரன்ஸை வாங்க முடிவு செய்திருக்கின்றார் இந்த வெளிநாடு ரிட்டர்ன் நபர். ஆரம்பத்தில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, ஹூண்டாய் அல்கஸார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 என பல கார்களை பார்த்திருக்கின்றார்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

ஆனால், குறைவான விலையில் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட பெஸ்ட் வாகனமாக அவருக்கு கியா கேரன்ஸ் தென்பட்டிருக்கின்றது. ஆமாங்க, இந்தியாவில் இந்த கார் 9.59 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. முன்னதாக இவர் கியா கேரன்ஸ் காரின் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்டையே வாங்க முடிவு செய்திருக்கின்றார். ஆனால், இதற்கு டிமாண்ட் நாட்டில் அதிகம்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

ஆகையால், காத்திருப்பு காலம் சற்று அதிகமாக உள்ளது. ஆனால், தன்னால் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்று அவர் மேனுவல் டர்போ பெட்ரோல் வேரியண்டை தேர்வை செய்திருக்கின்றார். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கு காத்திருப்பு காலம் பல மடங்கு அதிகம் என்கிற காரணத்தினாலேயே அவர் இக்காரை வாங்க தவிர்த்திருக்கின்றார்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

தற்போது கியா கேரன்ஸ் டர்போ பெட்ரோல் வேரியண்டை வாங்கி அவர் 2,500 கிமீ வரை பயன்படுத்திவிட்டார். மேலும், முதல் சர்வீஸும் முடிந்துவிட்டதாக அவர் தெரிவிக்கின்றார். இந்த நிலையிலேயே கியா கேரன்ஸ் கார் பயன்படும் விதம் மற்றும் கியா நிறுவனத்தின் சேவை என அனைத்தும் தனக்கு முழு திருப்தி வழங்கியிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார். குறிப்பாக, கியா ஊழியர்கள் மிகவும் ஃப்ரெண்ட்லியாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

இந்த காரை அவர் ஆன்-ரோடில் ரூ. 17 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கேரன்ஸில் எல்இடி டிஆர்எல்கள், அலாய் வீல்கள், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட் என எக்கசக்க அம்சங்கள் உள்ளன.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

இந்த அம்சங்கள் தன்னை மேலும் பல மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இருப்பதாக கேரன்ஸ் உரிமையாளர் கூறியிருக்கின்றார். குறிப்பாக, தங்களுடைய பயணங்களை இவை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஹேண்ட்லிங் என அனைத்தும் தனக்கு முழு திருப்தியை வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், பிரீமியம் டிரைவிங் அனுபவத்தை அவர் பெற்றதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேநேரத்தில் கணிசமான சிக்கலையும் தான் சந்தித்ததாக அவர் கூறியிருக்கின்றார். முதல் கியரில் போதுமான பவரை எஞ்ஜின் வெளியேற்றாததையே அவர் குறையாக கூறுகின்றார். கியா கேரன்ஸ் காரின் உரிமையாளர் கேரள மாநிலத்தில் வசித்துக் கொண்டிருக்கின்றார். இந்த மாநிலத்தின் பெரும்பகுதி ஏற்றம் தாழ்வுகளைக் கொண்ட பாதைகளுடன் காணப்படுகின்றது. ஆகையால், சற்று ஏற்றமான பாதைகளில் முழு திறனுடன் செயல்பட அக்கார் திணறுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த காரை வாங்கியதில் எங்க குடும்பமே ஹேப்பி!.. 3 மாத பயன்பாட்டை அடுத்து கேரன்ஸ் ஓனர் கூறிய தகவல்கள்!

இதுமட்டுமே இக்காரில் குறையாக இருப்பதாக கேரன்ஸ் கார் உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார். அதேவேலையில், தன்னுடைய கியா கேரன்ஸ் ஒரு லிட்டருக்கு 13-14 கிமீ வரை மைலேஜ் தருவதாகவும் தெரிவித்திருக்கின்றார். நிறுவனம் இந்த கார் 16 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இறுதியாக இந்த காரின் ஒட்டுமொத்த அனுபவமும் தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kia carens turbo petrol variant owner comments after 3 months of use
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X