பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்.. சீக்கிரம் ஆரம்பிங்க!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கியா இவி6 மின்சார காருக்கு இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைச் செய்து வரும் நெக்ஸான் இவி, டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு நாட்டில் செம்ம டிமாண்ட் நிலவி வருகின்றது. இவற்றிற்கு கிடைத்து வரும் வரவேற்பு பிற நிறுவனங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்கும் என்றுகூட கூறலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

அந்தளவிற்கு மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியை இரு மின்சார கார் மாடல்களும் நாட்டில் பெற்று வருகின்றன. எனவே இவற்றிற்கு போட்டியளிக்கும் முயற்சியில் சில முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. அந்தவகையில், பிரபல தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா அதன் முதல் மின்சார கார் மாடலை இந்திய சந்தையில் களமிறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

அது இவி6 (Kia EV6) எனும் க்ராஸோவர் ரக எலெக்ட்ரிக் காரையே இந்தியாவில் முதலில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான புக்கிங் எப்போது தொடங்கும் என்கிற தகவலே தற்போது வெளியாகியுள்ளது. வரும் மே மாதம் 26ம் தேதி புக்கிங் பணிகள் தொடங்க இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

இதையடுத்து, ஜூன் மாதத்தில் இருந்து அக்காருக்கான விற்பனை பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. கியா இவி6 மிக அதிக சிறப்புகள் மற்றும் புகழ்பெற்ற கார் மாடலாக உள்ளது. இந்த கார் ஐரோப்பிய சந்தையின் 2022ம் ஆண்டிற்கான மிக சிறந்த கார் (2022 European Car of the Year award) எனும் விருதை வென்றிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

இதுமட்டுமில்லைங்க 2022 வேர்ல்டு கார் ஆஃப் தி இயர் எனும் விருதை நூலிழையில் தப்ப விட்டிருக்கின்றது. இந்த விருதை ஹூண்டாய் ஐயோனிக் 5 காரே தட்டிச் சென்றிருக்கின்றது. உலக நாடுகள் சிலவற்றில் கியா இவி6 ஏற்கனவே விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

மின்சார வாகன கட்டமைப்பிற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இ-ஜிஎம்பி ஸ்கேட்போர்டு தளத்தில் வைத்தே இவி6 காரை கியா தயாரித்திருக்கின்றது. இந்த கார் மட்டுமின்றி இன்னும் பல புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்த தளத்தில் வைத்தே கியா மற்றும் ஹூண்டாய் குழுமம் உருவாக்க இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

கியா இவி6 சிபியூ வாயிலாக இந்திய சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், என்ன மாதிரியான அம்சங்கள் மற்றும் எத்தனை ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வரவில்லை. அதேநேரத்தில், தற்போது இந்திய எலெக்ட்ரிக் வாகன பிரிவில் போட்டி அதிகரித்து வருவதனால், அதிக தொழில்நுட்ப வசதி மற்றும் சொகுசு அம்சங்களுடன் இவி6 விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

உலக சந்தையில் கியா இவி6 இரு விதமான பேட்டரி தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் பின் வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் ஆகிய கான்ஃபிகரேஷனிலும் கிடைக்கின்றன. சிபியூ வாயிலாக இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவதால் அதன் விலை சற்று அதிகமானதாக இருக்கும் என வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

40-50 லட்சம் ரூபாய் வரைகூட இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இவற்றிற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தே அடுத்தடுத்து மேலும் சில யூனிட்டுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. முதல் லாட்டில் 100 யூனிட்டுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

கியா இவி6 58 kWh பேட்டரி பேக் தேர்வு:

இந்த தேர்வு பின் பக்க வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பின் பக்க வீல் இயக்கம் தேர்வில் கிடைக்கும் கியா இவி6 அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

இதைவிட சற்று அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக அனைத்து வீல் இயக்கம் வசதிக் கொண்ட தேர்வு இருக்கின்றது. ஏனெனில் இரு மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை 235 பிஎஸ் மற்றும் 605 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டவை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

கியா இவி6 77.4 kWh பேட்டரி பேக் தேர்வு:

முன்னதாக பார்த்த சிறிய பேட்டரி தேர்வைப் போலவே இந்த பெரிய பேட்டரி பேக் தேர்வும் பின் வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் பின் வீல் இயக்கம் கொண்ட தேர்வு அதிகபட்சமாக 229 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

இதைவிட சற்று அதிக பவரை அனைத்து வீல் இயக்கம் ஆப்ஷன் கொண்ட தேர்வு வெளியேற்றுகின்றது. அது, 325 பிஎஸ் மற்றும் 605 என்எம் டார்க்கை வெளியேற்றும். இரு பேட்டரி பேக் ஆப்ஷன் மட்டுமின்றி கியா நிறுவனம் இவி6 காரில் ஜிடி எனும் தேர்வையும் வழங்குகின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

இது மேலே பார்த்த இரு பேட்டரி தேர்வுகளைக் காட்டிலும் அதிக பவரை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது. அதாவது, மணிக்கு 260 கிமீ வேகம், 585 பிஎஸ் பவர் வெளியேற்றம் ஆகிய திறன்களை அது கொண்டுள்ளது. கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் டாப் 510 கிமீ ஆகும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் காருக்கு விரைவில் இந்தியாவில் புக்கிங் தொடக்கம்! ஐரோப்பால விருது பெற்ற காருங்க இது!

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இத்தனை கிமீ வரை பயணித்துக் கொள்ள முடியும். மேலும், 350 kW ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தோமேயானால் 10-80 சதவீதம் சார்ஜை வெறும் 18 செகண்டுகளில் ஏற்றிக் கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
Kia ev6 e crossover pre bookings starts on may 26
Story first published: Thursday, April 21, 2022, 13:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X