இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

கியா நிறுவனத்தின் இவி6 எலெக்ட்ரிக் கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

கியா இந்தியா நிறுவனம் தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட், கார்னிவல் மற்றும் கேரன்ஸ் ஆகிய 4 கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை நான்குமே ஐசி இன்ஜின் கார்கள் ஆகும். இந்த சூழலில், கியா இந்தியா நிறுவனத்தின் 5வது காராக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது இவி6. இது கியா இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

இந்த சிறப்புடன், வரும் ஜூன் 2ம் தேதி கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. இந்த செய்தியில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை பார்க்கலாம்.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

கியா இவி6 எலெக்ட்ரிக் காரில், 77.4kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், ஆரம்ப நிலை GT Line மாடல் அதிகபட்சமாக 225 பிஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த மாடலில் சக்தி, பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படும். இந்த மாடல் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.3 வினாடிகளில் எட்டி விடும்.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

இதுதவிர GT Line AWD வேரியண்ட்டும் கிடைக்கும். AWD என்ற பெயருக்கு ஏற்ற வகையில், காரின் 4 சக்கரங்களுக்கும் சக்தி அனுப்பப்படும். இந்த வேரியண்ட் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.2 வினாடிகளில் எட்டி விடும். இந்த வேரியண்ட்டின் பவர் அவுட்புட் 345 பிஹெச்பி மற்றும் 605 என்எம் ஆகும்.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

கியா இவி6 எலெக்ட்ரிக் காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். அப்போது இந்த கார் எங்களை பலவிதங்களில் கவர்ந்தது. பரிமாணங்களை பொறுத்தவரையில், கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் நீளம் 4,695 மிமீ ஆகும். அகலம் 1,890 மிமீ ஆகவும், உயரம் 1,550 மிமீ ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் வீல்பேஸ் நீளம் 2,900 மிமீ ஆக இருக்கிறது.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

மூன்ஸ்கேப், ஸ்னோ ஒயிட் பேர்ல், ரன்வே ரெட், அரோரா ப்ளாக் பேர்ல் மற்றும் யட்சாட் ப்ளூ என மொத்தம் 5 வண்ண தேர்வுகளில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும். டிசைன் என்ற விஷயத்திலும் கியா இவி6 நம்மை கவர்கிறது. டிசைனை பொறுத்தவரையில், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், 19 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

அத்துடன் பூட் லிட் நீளத்திற்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ள எல்இடி லைட்பார், ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. பொதுவாக கியா நிறுவனத்தின் கார்களில் வசதிகளுக்கு பஞ்சமிருக்காது. கியா இவி6 எலெக்ட்ரிக் காரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இதன்படி கியா இவி6 எலெக்ட்ரிக் கார் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீலை பெற்றுள்ளது.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

இதுதவிர 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 8 ஏர்பேக்குகள், கியா கனெக்ட் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகளும் கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

அத்துடன் கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் அடாஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 3 டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.

இந்தியாவை கலக்க வரும் கியா எலெக்ட்ரிக் கார்... ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும்போதே வாங்கணும் போல தோணுது!

இதன்படி 50kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை வெறும் 73 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். அதே நேரத்தில் 350kW சார்ஜர் இந்த வேலையை வெறும் 18 நிமிடங்களிலேயே முடித்து விடும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 528 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Kia ev6 electric car here s everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X