டாடாவிற்கு போட்டியாக களமிறங்கிய கியா... இவி6 காருக்கு க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்

கியா இவி6 காருக்கு ANCAP க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்

டாடாவிற்கு போட்டியாக களமிறங்கிய கியா . . . இவி6 காருக்கு க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்

கியா நிறுவனம் இந்தியாவின் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இவி6 காருக்கான புக்கிங்கை மே26ம் தேதி துவங்குகிறது. இந்நிறுவனம் கடந்தாண்டு இந்த காரின் டிசைனை வெளியிட்டது. அப்பொழுதே மக்கள் மத்தியில் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்த காரை முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கார் தற்போது ANCAP-ல் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

டாடாவிற்கு போட்டியாக களமிறங்கிய கியா . . . இவி6 காருக்கு க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்

ANCAP என்பது ஆஸ்திரேலியன் நியூ கார் அசஸ்மெண்ட் புரோகிராம் என்பது சுறுக்கம் ஆகும். இதில் புதிதாக தயாரிக்கப்பட்ட கார் ஒன்று இந்த சோதனையின் போது விபத்து ஏற்பட்டால் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படும் என்பதை கணக்கிட்டு அதற்கு தகுந்தார் போல் ரேட்டிங்கை வழங்கும். கார்களின் தரத்தை சோதனை செய்ய இந்த க்ராஷ் டெஸ்ட் மிக முக்கியான ஒரு விஷயம் இந்த க்ராஷ் டெஸ்டில் எவ்வளவு ரேட்டிங் பெருகிறதோ அதுவே இந்த காரின் பாதுகாப்பு தன்மையாக கருத்தில் கொல்லப்படும்.

டாடாவிற்கு போட்டியாக களமிறங்கிய கியா . . . இவி6 காருக்கு க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்

இந்த சோதனையின் போது பல்வேறு விதமான டெஸ்ட்கள் எடுக்கப்படும். அப்பொழுது இந்த காரில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, சாலையில் செல்பவர்களுக்கான பாதுகாப்பு, காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை கணக்கிடப்படும்.

தற்போது கியா இவி6 கார் இந்த கிராஷ் டேஸ்டில் மொத்தம் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதில் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக உள்ள 38 புள்ளிகளில் இந்த கார் 34.48 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கான 49 புள்ளிகளில் 42.96 புள்ளகளையும், சாலையில் பயணிப்பவர்களின் பாதுகாப்பில் 64சதவீத மதிப்பெண்களையும், பாதுகாப்பு அம்சங்களுக்கான மதிப்பில் 88 சதவீத மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

டாடாவிற்கு போட்டியாக களமிறங்கிய கியா . . . இவி6 காருக்கு க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்

இந்த சோதனையின் போது காரின் முன்பக்கம் நேரடியாக மோதல் நடக்கும் போது பயணிகள் அமர்ந்திருக்கும் இடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. காரிலிருந்த டம்மிகளில் ரீடிங்கின் படி கார் விபத்தில் சிக்கும் போது டிரைவர் சீட்டில் இருந்த டம்மியில் நெஞ்சு மற்றும் கீழ் பகுதியில் கொஞ்சம் அடி இருந்தது.

டாடாவிற்கு போட்டியாக களமிறங்கிய கியா . . . இவி6 காருக்கு க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்

ஆனால் முன்பக்கம் உள்ள பாசஞ்சர் சீட்டில் இருந்த டம்மி பாதுகாப்பாக இருந்தது. மனிதர்களின் உடலில் அடிபட்டால் அதிகவிளைவுகளை ஏற்படுத்தும் பாகங்களில் அடிபடவில்லை. அதனால் இந்த காருக்கு 5ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டாடாவிற்கு போட்டியாக களமிறங்கிய கியா . . . இவி6 காருக்கு க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை டாடா நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. அது பாதுகாப்பான கார் என மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நிலையில் தற்போது கியா நிறுவனத்தின் எலெக்டரிக் காரும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது பாதுகாப்பான கார்கள் பட்டியல் தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் கியா வெற்றி பெறுமா? டாடா வெற்றி பெறுமா? பொருத்திருந்து பார்போம்

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia ev6 got 5 star rating in ancap crash test
Story first published: Wednesday, May 25, 2022, 19:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X