கொஞ்சம் விட்டா மாருதி நிறுவனத்தையே தூக்கி சாப்பிட்றும் போல... போட்டியாளர்களின் அடி வயிறை கலங்கடித்த கியா!

கியா (Kia) நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 24,025 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கியா நிறுவனம் வெறும் 14,214 கார்களை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. இது 69 சதவீத வளர்ச்சியாகும்.

இந்திய சந்தையில் கடந்த நவம்பர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கியா கார்களின் பட்டியலில் கியா செல்டோஸ் (Kia Seltos) முதலிடத்தை பிடித்துள்ளது. கியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 9,284 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் முறையே சொனெட் (Kia Sonet), கேரன்ஸ் (Kia Carens) மற்றும் கார்னிவல் (Kia Carnival) ஆகிய கார்கள் இருக்கின்றன. இந்த கார்கள் கடந்த நவம்பர் மாதம் முறையே 7,834, 6,360, மற்றும் 419 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

கொஞ்சம் விட்டா மாருதி நிறுவனத்தையே தூக்கி சாப்பிட்றும் போல... போட்டியாளர்களின் அடி வயிறை கலங்கடித்த கியா!

இதுதவிர கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் 128 இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார்களையும் கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 24,025 கார்களை விற்பனை செய்து கியா நிறுவனம் அசத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இந்த 5 கார்களை மட்டுமே கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதில், செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதை இந்த சேல்ஸ் ரிப்போர்ட் நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன.

கியா நிறுவனம் தற்போது விற்பனை செய்து கொண்டுள்ள கார்களில் இவி6 புது வரவாகும். கடந்த ஜூன் மாத தொடக்கத்தில்தான் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விலை உயர்ந்த கார் என்றாலும் கூட கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. தற்போது வரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 296 வாடிக்கையாளர்களுக்கு இவி6 எலெக்ட்ரிக் கார்களை கியா நிறுவனம் டெலிவரி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 59.95 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 64.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவ்வளவு விலை உயர்ந்த ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டு கொண்டிருப்பது என்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாகதான் பார்க்கப்படுகிறது. ஆனால் கூடிய விரைவிலேயே கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு, புதிய போட்டி மாடல் ஒன்று களமிறங்கவுள்ளது.

அது ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் கார் ஆகும். வரும் டிசம்பர் 20ம் தேதியில் இருந்து ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது. எனவே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகைக்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) தொழில்நுட்ப வசதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவும் வாடிக்கையாளர்களை அதிகம் கவரக்கூடிய விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு வழங்கவுள்ள 2வது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

முன்னதாக ஹூண்டாய் கோனா (Hyundai Kona) என்ற எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அந்த நாளுக்காக வாடிக்கையாளர்கள் பலரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Kia india november 2022 sales report
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X