இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

கியா நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக 19,019 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதில், செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கை 7,506 ஆகும். அதே நேரத்தில் சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கை 5,404 ஆக இருக்கிறது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

மறுபக்கம் கியா நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 5,754 கேரன்ஸ் எம்பிவி கார்களையும், 355 கார்னிவல் சொகுசு எம்பிவி கார்களையும் விற்பனை செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

இதற்கிடையே கியா நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் நுழையவுள்ளதை சமீபத்தில் உறுதி செய்துள்ளது. தற்போதைய நிலையில் ஐசி இன்ஜின் கார்களை மட்டுமே விற்பனை செய்து வரும் கியா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

அது இவி6 எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் நடப்பாண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. கியா நிறுவனம் இவி6 எலெக்ட்ரிக் காரை வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பாக நடப்பு மே மாதமே கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி தொடங்கவுள்ளது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

வரும் மே 26ம் தேதி கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என கியா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. கியா மட்டுமல்லாது, ஹூண்டாய் நிறுவனமும் மேலும் ஒரு எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதை உறுதி செய்துள்ளது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வரும் நிலையில், அதை தொடர்ந்து ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதுதவிர கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் மேம்படுத்தி, ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

ஆனால் கியா இவி6, ஐயோனிக் 5 மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியின் புதிய மாடல் என இந்த 3 எலெக்ட்ரிக் கார்களுமே விலை உயர்ந்ததாக இருக்கும். இதற்கிடையே கியா நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட 2022 செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

இதில் 2022 கியா செல்டோஸ் கார் தற்போது 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் ஐஎம்டி கியர் பாக்ஸ் தேர்வை பெற்றுள்ளது. அத்துடன் 2 புதிய வண்ண தேர்வுகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளையும் 2022 கியா செல்டோஸ் கார் பெற்றுள்ளது. மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய அப்டேட்கள் கியா செல்டோஸ் காருக்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

மறுபக்கம் 2022 கியா சொனெட் காரும், புதிய பாதுகாப்பு வசதிகள், புதிய வண்ண தேர்வுகள் மற்றும் கூடுதல் வேரியண்ட்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது. இதன் மூலம் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் கியா சொனெட் தொடர்ந்து வலுவான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செக்மெண்ட்டில் ஏராளமான கார்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை உயர்வு... எவ்ளோ சதவீதம் அதிகமாயிருக்கு தெரியுமா?

இதில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அதன் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட காரான டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் போன்ற கார்கள் குறிப்பிடத்தக்கவை. இதில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார்களின் புதிய தலைமுறை மாடல்கள் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
Kia india sales increased by 18 per cent in april 2022 details here
Story first published: Monday, May 2, 2022, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X