கியா இந்தியா சேல்ஸ் ரிப்போர்ட்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் விற்பனையா! ஆச்சரியமா இருக்கே!

கியா நிறுவனத்தின் செப்டம்பர் மாத விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா இந்தியா சேல்ஸ் ரிப்போர்ட்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் விற்பனையா! ஆச்சரியமா இருக்கே!

கியா இந்தியா நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் 25,857 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14,441 கார்களாக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 79.1 சதவீத வளர்ச்சியை கியா இந்தியா நிறுவனம் பதிவு செய்து அசத்தியிருக்கிறது.

கியா இந்தியா சேல்ஸ் ரிப்போர்ட்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் விற்பனையா! ஆச்சரியமா இருக்கே!

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுதான் இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பாக கியா நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்தது கிடையாது. இதன் மூலம் கியா நிறுவனம் இந்தியாவில் புதிய சாதனையை படைத்துள்ளது.

கியா இந்தியா சேல்ஸ் ரிப்போர்ட்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் விற்பனையா! ஆச்சரியமா இருக்கே!

அத்துடன் இந்த விற்பனை எண்ணிக்கை மூலம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை நிறுவனங்களின் பட்டியலில் கியா நிறுவனம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் கியா நிறுவனம் விற்பனை செய்த டாப் கார்களின் பட்டியலும் நமக்கு கிடைத்துள்ளது.

கியா இந்தியா சேல்ஸ் ரிப்போர்ட்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் விற்பனையா! ஆச்சரியமா இருக்கே!

இதன்படி இந்த பட்டியலில் கியா செல்டோஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. கியா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9,583 செல்டோஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 11,000 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கியா செல்டோஸ் கார் விற்பனையில் 14.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கியா இந்தியா சேல்ஸ் ரிப்போர்ட்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் விற்பனையா! ஆச்சரியமா இருக்கே!

இந்த பட்டியலில் கியா சொனெட் கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கியா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4,454 சொனெட் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 9,291 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கியா சொனெட் கார் விற்பனையில் 110 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கியா இந்தியா சேல்ஸ் ரிப்போர்ட்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் விற்பனையா! ஆச்சரியமா இருக்கே!

இந்த பட்டியலில் கியா கேரன்ஸ் கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கியா நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 5,233 கேரன்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. கியா கேரன்ஸ் கார் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட இயலாது.

கியா இந்தியா சேல்ஸ் ரிப்போர்ட்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் விற்பனையா! ஆச்சரியமா இருக்கே!

இந்த பட்டியலில் நான்காவது இடம் கியா கார்னிவல் காருக்கு கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 404 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 333 ஆக குறைந்துள்ளது. இது 17.5 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் வீழ்ச்சியை சந்தித்த ஒரே ஒரு கியா கார் இது மட்டுமே.

கியா இந்தியா சேல்ஸ் ரிப்போர்ட்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் விற்பனையா! ஆச்சரியமா இருக்கே!

இதுதவிர கியா நிறுவனம் இந்திய சந்தையில் இவி6 என்ற எலெக்ட்ரிக் காரையும் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரின் செப்டம்பர் மாத விற்பனை விபரம் நமக்கு கிடைக்கவில்லை. பண்டிகை காலம் என்பதால், வரும் மாதங்களில் கியா கார்களின் விற்பனை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

Most Read Articles
English summary
Kia india sales report september 2022
Story first published: Saturday, October 1, 2022, 21:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X