இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

கியா செல்டோஸ் கார் இந்தியாவில் விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கியா கார்களில் ஒன்று செல்டோஸ் (Kia Seltos). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதுதான் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார். இந்த சூழலில், இந்தியாவில் 3 லட்சம் செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளதாக கியா இந்தியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

இத்தனைக்கும் வெறும் 3 ஆண்டுகளுக்கு உள்ளாக கியா செல்டோஸ் கார் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. கியா செல்டோஸ் கார், இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதிதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்னும் 3 ஆண்டுகள் கடந்துள்ள கூட முழுமையாக முடிவடையாத நிலையில், இந்தியாவில் 3 லட்சம் கியா செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் செல்டோஸ் கார்களை கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி செல்டோஸ்தான், இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார். இந்த முதல் தயாரிப்பே இந்தியாவில் கியா நிறுவனத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

இந்தியாவில் தற்போதைய நிலையில் செல்டோஸ், கார்னிவல், சொனெட், கேரன்ஸ் மற்றும் இவி6 ஆகிய 5 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒட்டுமொத்த கியா கார்களின் எண்ணிக்கையில், செல்டோஸ் எஸ்யூவியின் பங்களிப்பு மட்டும் சுமார் 60 சதவீதத்திற்கும் நெருக்கமாக உள்ளது.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் கியா செல்டோஸ் காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கியா இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் அமைந்துள்ளது (கியா இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை முதலில் தமிழகத்திற்கு வருவதாக இருந்தது வேறு கதை). இங்கிருந்து தற்போது வரை 90 நாடுகளுக்கும் மேலாக, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கியா செல்டோஸ் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

இதற்கிடையே கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்திருந்தது. இதில், கியா செல்டோஸ் கார்களின் பங்களிப்பு, நாங்கள் ஏற்கனவே கூறியபடி, கிட்டத்தட்ட 60 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கியா செல்டோஸ் கார், ஹூண்டாய் க்ரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

ஆனால் வெகு விரைவில் கியா செல்டோஸ் காருக்கு போட்டி மிக கடுமையாக அதிகரிக்கவுள்ளது. இது கியா செல்டோஸ் காருக்கான போட்டி மட்டுமல்ல. இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற அனைத்து கார்களுக்குமே போட்டி அதிகரிக்கவுள்ளது. இதற்கு காரணம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் ஆகும்.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகிய இரண்டு மிட்-சைஸ் எஸ்யூவி கார்களும் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. இதில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதை தொடர்ந்து, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

இந்த 2 கார்களின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காருக்கு 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை மட்டும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டால், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!

இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சரியான விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகிய 2 கார்களும் விற்பனைக்கு வந்த பின்னர், இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
Kia seltos mid size suv crosses the 3 lakh sales milestone in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X