Just In
- 11 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 12 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 23 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 1 day ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- News
காங்கிரசுக்கு அன்று அண்ணா! திமுகவுக்கு இன்று அண்ணாமலை! ஆட்சி மாற்றம் உறுதி! நயினார் பேச்சு!
- Movies
காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு கடைசி தங்கச்சி பிறந்தது.. ஆர்ஜே பாலாஜி சொன்ன குடும்ப ஸ்டோரி!
- Sports
ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங்.. ஜடேஜா- ஸ்ரேயாஸ்க்கு வந்த வாய்ப்பு.. பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்யம்
- Finance
Elon Musk-ஐ புலம்பவிட்ட Tesla, SpaceX, Twitter ஊழியர்கள்..! - வீடியோ
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உடனே வாங்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விலை... போட்டியாளர்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த கியா கார்!
கியா நிறுவனத்தின் விலை குறைவான கார், போட்டியாளர்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). கியா நிறுவனம் இந்திய காரை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்னும் முழுமையாக 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

அதற்குள்ளாக விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை கியா சொனெட் கார் கடந்துள்ளது. இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 1.50 லட்சத்திற்கும் (1.50 Lakh) மேற்பட்ட கியா சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதுதான் கியா சொனெட் கார் விற்பனையில் கடந்துள்ள புதிய மைல்கல்.

அறிமுகம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையிலேயே, 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்திய சந்தையில் கியா சொனெட்டிற்கு கிடைத்துள்ள மிக பிரம்மாண்டமான வரவேற்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இது இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த மூன்றாவது கார் ஆகும்.

இதற்கு முன்னதாக செல்டோஸ் (Kia Seltos) மிட்-சைஸ் எஸ்யூவி காரை கடந்த 2019ம் ஆண்டிலும், கார்னிவல் (Kia Carnival) சொகுசு எம்பிவி காரை கடந்த 2020ம் ஆண்டிலும் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. தற்போது கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்து விட்டது.

சொனெட் காருக்கு பிறகு, கேரன்ஸ் (Kia Carens) காரை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரையும் கியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த 2 கார்களுமே நடப்பு 2022ம் ஆண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் கேரன்ஸ் காரும், நடப்பு ஜூன் மாதம் இவி6 எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்து வரும் 5 கார்களுக்குமே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் தற்போது விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ள கியா சொனெட் கார், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

அத்துடன் தனது உடன்பிறப்பான ஹூண்டாய் வெனியூ காருக்கும், கியா சொனெட் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 7.15 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.69 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

கியா சொனெட் காரின் வெற்றிக்கு சரியான விலை நிர்ணயமும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சொனெட்தான் கியா இந்தியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார் ஆகும். கியா நிறுவனம் சொனெட் காரில் தற்போது ஒட்டுமொத்தமாக 3 இன்ஜின் தேர்வுகளை வழங்கி வருகிறது. அவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் யூனிட்கள் ஆகும்.

சிறப்பான இன்ஜின் தேர்வுகளுடன், கியா சொனெட் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதன்படி எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகளை கியா சொனெட் கார் பெற்றுள்ளது.

மேலும் இபிடி உடன் ஏபிஎஸ், பின் பகுதியிலும் ஏசி வெண்ட்கள் போன்ற வசதிகளும் கியா சொனெட் காரில் வழங்கப்படுகின்றன. கியா நிறுவனம் வெகு விரைவில் சொனெட் காரின் புதிய சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது ஏற்கனவே கேமராவின் கண்களில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை பொறுத்தவரையில், ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதவிர 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் 2022 டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார்களும் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. இதில், 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
எரிபொருளை மிச்சப்படுத்துவதில் 5 ஸ்டார்களை பெற்ற மிஷ்லின் டயர்கள்... எத்தனை சதவீதம் மிச்சப்படுத்தும் தெரியுமா?
-
இந்தியாவில் ரீ-என்ட்ரீ கொடுக்க தயாரானது முன்னணி பைக் நிறுவனம்... மொத்தமா 4 டூ-வீலர்களை களமிறக்க போறாங்களாம்!
-
எந்த அளவிற்கு பாதுகாப்பான கார் கியா கேரன்ஸ்? உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனை முடிவுகள் வெளியீடு!!