டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

தமிழகத்தைப் போல் மற்றுமொரு மாநில அரசு அதிக எண்ணிக்கையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் கார்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த துறைக்காக, எத்தனை மின்சார கார்கள் வாங்கப்பட்டுள்ளன, அவற்றின் விலை என்ன என்பது பற்றிய கூடுதல் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

டாடா மின் வாகனங்கள் இந்தியாவில் அபரிதமான வளர்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசு துறைகளிடம் இருந்தும் அதற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் டாடா டிகோர் இவி எலெக்ட்ரிக் கார்களை தமிழக அரசு, அரசின் உயர் பொருப்பில் உள்ள அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வாங்கியது.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

இதற்காக 25 யூனிட்டுகள் டாடா டிகோர் இவி மின்சார கார்கள் வாங்கப்பட்டன. 3.42 கோடி ரூபாய் செலவில் இந்த கார்கள் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இந்த கொள்முதலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்தியாவின் மற்றுமொரு மாநில அரசு டாடாவின் விலையுயர்ந்த மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கியிருக்கின்றது.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

மேற்கு வங்கமே அந்த மாநில அரசு ஆகும். அது, கொல்கத்தாவின் காவல்துறைக்காக 17 நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார்களை வாங்கியிருக்கின்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டை தூய்மையாக்கும் முயற்சியாக காவல்துறை பயன்பாட்டில் இந்த மின்சார கார்கள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

ஏற்கனவே கொல்கத்தா காவல்துறையின் வசம் கணிசமான அளவில் மின்சார கார்கள் பன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே மேலும் சில எலெக்ட்ரிக் கார்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆகையால், கொல்கத்தா காவல்துறையிடம் இருக்கும் இ-கார்களின் எண்ணிக்கை 243 ஆக உயர்ந்துள்ளது.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

மின்சார கார்கள் போலீஸ் வாகனம் என்பதால் அது வழக்கத்திற்கு மாறாக காட்சியளிக்கின்றது. அதாவது, போலீஸ் எனும் எழுத்துக்கள், சைரன் மற்றும் ஃபிளாஷர்களுடன் அக்கார் காட்சியளிக்கின்றது. இவற்றையே அடுத்த 8 ஆண்டுகளுக்கு கொல்கத்தா காவல்துறை பயன்படுத்த இருக்கின்றது.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

ஆம், தற்போது வாங்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் 8 ஆண்டுகள் லீஸ் திட்டத்தின்கீழ் வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய-மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு கணிசமான சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

அந்தவகையில், சமீபத்தில் மேற்கு வங்க மாநில அரசும் அதன் மின் வாகன கொள்கையை அறிவித்தது. இரண்டு மற்றும் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் ரத்து, மோட்டார் வாகன வரி மற்றும் இதர வரிகளும் ரத்து செய்யப்படுவதாக அது அறிவித்தது.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

மின் வாகனங்களுக்கு மட்டுமின்றி சிஎன்ஜி வாகனங்களுக்கும் இதுமாதிரியான சிறப்பு சலுகைகளை மாநில அரசு அறிவித்திருக்கின்றது. இந்த சிறப்பு சலுகைகள் நடப்பாண்டு 1 ஏப்ரல் தொடங்கி 2024 மார்ச் 31 வரையில் நடைமுறையில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

எவ்வளவு செலவில் மின்சார கார்களை மேற்கு வங்க அரசு வாங்கியுள்ளது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. இதன் ஆரம்ப விலையே ரூ. 17.74 லட்சம் ஆகும். இதன் அப்டேட்டட் வெர்ஷனை நெக்ஸான் இவி மேக்ஸ் எனும் பெயரில் டாடா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது அதிகபட்சமாக 437 கிமீ ரேஞ்ஜை முழு சார்ஜில் வழங்கும்.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

ஆனால், வழக்கமான நெக்ஸான் இவி ஓர் முழு சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 3.3 kW பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை அதிக வேக சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் 0-80 சதவீதம் சார்ஜை ஏற்ற வெறும் 56 நிமிடங்களே போதும்.

டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!

இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரையே மேற்கு வங்கம் மாநில அரசு தற்போது காவல்துறை பயன்பாட்டிற்காக வாங்கியிருக்கின்றது. இதே மின்சார வாகனத்தையே கேரளா போன்ற பிற மாநில அரசுகளும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Kolkata police dept got 17 tata nexon ev e car s to their fleet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X