ஸ்கிராட்ச் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

ஸ்கிராட்சை தானாக சரி செய்யும் கார் கோட்டிங் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சூப்பரான கார் கோட்டிங் (Car Coating) குறித்த மேலும் பல சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்கிராட் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

வாகன உரிமையாளர்கள் மத்தியில் காணப்படும் மிக முக்கியமான கவலைகளில் ஒன்றே இந்த ஸ்கிராட்ச். இது எப்போ?.. எப்படி?.. வாகனங்களில் ஏற்படும்னு யாராலும் கணிக்கவே முடியாது. நம்ம காரு நல்ல இருக்க மாதிரி தெரியும், திடீருனு ஒரு நாள் சுத்தம் செய்யும்போது பாத்தா நமக்கே தெரியாம பெரிய கோடு விழுந்து கிடக்கும். அத பார்த்த அந்த நாள் அவ்ளோ தூக்கமே போய்ரும்.

ஸ்கிராட் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

இதுமட்டுமில்லைங்க, நம்ம ஊருல சும்மா போய்க் கொண்டிருக்கின்ற நேரத்துல, மரக்கிளை ஒன்னு வந்து விழுந்த காரணத்தாலகூட பெரியளவிலான ஸ்கிராட்ச் ஏற்பட்டிருக்கு. இந்த மாதிரியான ஸ்கிராட்ச்களை சரி செய்ய ஒர்க்ஷாப் சென்றால், அங்கிருக்கும் பணியாளர்களோ இதுதான் நேரம் என பில்லை போட்டு தீட்டி விடுவார்கள்.

ஸ்கிராட் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

இந்த மாதிரியான அவல நிலைக்கு முற்று புள்ளி வைக்கும் பொருட்டு ஓர் 'கார் கோட்டிங்' (Car Coating) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, கார் மீது விழும் ஸ்கிராட்ச்களை தானாக சரி செய்து கொள்ளுமாம். அதாவது, மனிதனின் உடலில் ஏற்படும் காயம் எப்படி சிறிது நாட்களில் தானாக சரியாகிவிடுமோ, அதுபோல், கீரல் (ஸ்கிராட்ச்) ஏற்பட்ட உடனே இந்த கார் கோட்டிங் அக்கீரலை தானாக அது சரி செய்துக் கொள்ளுமாம்.

ஸ்கிராட் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

ஆனால், மனிதனின் உடலைபோல் இது நீண்ட நாட்களை எடுத்துக் கொள்ளாது. ஒரு சில நிமிடங்களிலேயே அது கீரல்களை சரி செய்து கொள்ளும் என கூறப்படுகின்றது. தெளிவாகக் கூற வேண்டும் என்றால் வெறும் 30 நிமிடங்களிலேயே அது கீரல்களைச் சரி செய்துக்கொள்ளும் வல்லமை வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சூரிய ஒளி ஒன்று மட்டும் இருந்தால் போதும். சூரிய ஒளியின் வாயிலாக கிடைக்கும் வெப்பத்தின் மூலமாகவே கீரல்களை சரி செய்யும் பணியை அந்த கார் கோட்டிங் செய்கின்றது.

ஸ்கிராட் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

கொரியாவைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சி நிறுவனமே இந்த சூப்பரான கார் கோட்டிங்கை கண்டுபிடித்திருக்கின்றது. கண்ணாடி போன்ற ஓர் கோட்டிங்கையே அது கண்டுபிடித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான கோட்டிங்குகள் வாகனத்தை புதிதுபோல் பாதுகாக்கும் வகையில் மட்டுமே செயல்படுகின்றன. குறிப்பாக, சூரிய ஒளியால் ஏற்படும் புதுப்பொலிவு இழத்தல், நிறம் மங்குதல், ஸ்கிராட்ச் ஏற்பட்டாலும் அதை பெயிண்ட் வரை செல்ல விடாமல் தடுத்தல் போன்றவற்றிற்காக கார் கோட்டிங் செய்யப்படுகின்றது.

ஸ்கிராட் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

இந்த மாதிரியான சூழலிலேயே முதல் முறையாக ஸ்கிராட்ச் ஏற்பட்டாலும் அவற்றை தானாக சரி செய்யும் கோட்டிங் உருவாக்கப்பட்டிருக்கின்றது. வெகு விரைவில் இந்த கோட்டிங் பொது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1,000 முதல் 1,100 என்எம் வரையிலான அளவுள்ள ஸ்கிராட்ச்களைக் கூட இது சரி செய்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கிராட் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

ஆராய்ச்சி நிறுவனம் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஓர் கார் மாடலை தேர்வு செய்து, அந்த கார் மாடலில் புதிய செல்ஃப் ஹீலிங் திறன் கொண்ட கார் கோட்டிங்கை பூசியது. இதைத்தொடர்ந்து, ஆங்காங்கே ஸ்கிராட்ச்களை ஏற்படுத்தி அது ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது மிக சிறப்பாக அக்கார் கோட்டிங் செயல்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கிராட் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

குறிப்பாக, சூரிய ஒளியைப் பயன்படுத்தி வெறும் 30 நிமிடங்களிலேயே அது கீரல்களை சரி செய்திருக்கின்றது. கார் கோட்டிங்கில் சூரிய ஒளி படும்போது மீண்டும் இணையக் கூடிய பாலிமர் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலை அது ஒவ்வொரு முறையும் வெயில்படும்போது செய்யும். ஆகையால், சிறு கீரல் ஏற்பட்டால்கூட அது உடனடியாக சரியாகிவிடும்.

ஸ்கிராட் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!

இந்த சூப்பரான கண்டுபிடிப்பை வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் வீடுகள், செல்போன்கள், கணினி உள்ளிட்டவற்றிலும் பயன்படுத்துகின்ற வகையிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், முதலில் வாகனங்களுக்கான கோட்டிங்கே பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Krict develops car coating it can self heal scratches in sunlight
Story first published: Monday, August 15, 2022, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X