அடேங்கப்பா... லம்போர்கினியில் இப்படியொரு ஆஃப்-ரோடு காரை எதிர்பார்க்கவே இல்ல!! ஹூராகென் ஸ்டெர்ராடோ...

லம்போர்கினி கார்கள் எல்லாம் நம் இந்தியாவில் எப்போதுதான் அறிமுகமாகுமோ என ஏங்கி கொண்டிருந்த காலம் போய் தற்போது தொடர்ச்சியாக லம்போர்கினி கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வகையில் புதியதாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது தான் லம்போர்கினி ஹூராகென் ஸ்டெர்ராடோ.

ரூ.4.61 கோடி என்ற மதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த லம்போர்கினி கார் உலகம் முழுவதுமே வெறும் 1,499 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய லம்போர்கினி திட்டமிட்டுள்ளது. இதில் எத்தனை யூனிட்கள் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. காரின் வெளிப்பக்கம் முழுவதும் வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் பிரத்யேகமாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூராகென் ஸ்டெர்ராடோ ஆனது ஆஃப்-ரோடு பயணங்களுக்காக சில அப்கிரேட்களுடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் கார் ஆகும்.

புதிய லம்போர்கினி ஹூராகென் ஸ்டெர்ராடோ இந்தியாவில் அறிமுகம்!!

புதிய அப்கிரேட்களின்படி முன் டயர்களுக்கு இடைப்பட்ட தூரம் 30மிமீ-உம், பின் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம் 34மிமீ-உம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் எனப்படும் தரையில் இருந்து காரின் அடித்தளத்தின் உயரமும் 44மிமீ உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ப கூடுதல் சஸ்பென்ஷன் டிராவலை பெற முடியும். கரடு முரடான சாலைகளில் பயணிப்பதற்கு பாதுகாப்பாக காரின் அடிப்பகுதியில் அலுமினியம் தகடுகளும், வலிமையான சில்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், தூசி மிகுந்த சாலைகளில் பயணிக்கும்போது என்ஜின் எந்தவொரு தடையுமின்றி செயல்பட மேற்கூரையில் ஏர் இண்டேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய ஹூராகென் ஸ்டெர்ராடோ கார் அப்டேட் செய்யப்பட்ட வாகன டைனாமிக் தொகுப்பு உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொகுப்பின் மூலமாக புதிய ராலி மோடை காரில் பெறலாம். அதேபோல் ஸ்ட்ராடா மற்றும் ஸ்போர்ட் மோட்களும் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய 19-இன்ச் அலாய் சக்கரங்களையும் இந்த ஆஃப்-ரோடு சூப்பர் கார் பெற்றுள்ளது.

புதிய லம்போர்கினி ஹூராகென் ஸ்டெர்ராடோ இந்தியாவில் அறிமுகம்!!

வழக்கமான லம்போர்கினி ஹூராகென் காரில் இதனை காட்டிலும் சற்று பெரியதான சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. புதிய ஹூராகென் ஸ்டெர்ராடோ காரின் அலாய் சக்கரங்களில் கஸ்டம் பிரிட்ஜ்ஸ்டோன் டூயுலர் ஏடி002 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர்கள் ரன்-ஃப்ளாட் தொழிற்நுட்பத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதால் டயர் பழுதாகினாலும் தொடர்ந்து காரை இயக்க முடியும். முன் டயரின் அளவு 235/40 -ஆர்19 மற்றும் பின் டயரின் அளவு 285/40 -ஆர்19 ஆகும்.

மற்றப்படி காரின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. ஹூராகென் காரில் வழக்கமாக லம்போர்கினி நிறுவனம் பொருத்தும் அதே 5.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி10 என்ஜின் தான் இந்த ஆஃப்-ரோடு வெர்சன் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 610 எச்பி மற்றும் 560 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் புதிய ஸ்டெர்ராடோ மாடலில் இந்த என்ஜின் 30 எச்பி மற்றும் 40 என்எம் டார்க் திறன் குறைவே வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய லம்போர்கினி ஹூராகென் ஸ்டெர்ராடோ இந்தியாவில் அறிமுகம்!!

இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூவல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸ் ஆனது என்ஜின் வழங்கும் ஆற்றலை எலக்ட்ரிக்-மூலமாக கண்ட்ரோல் ஆகக்கூடிய ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் மற்றும் ரியர் மெக்கானிக்கல் செல்ஃப்-லாக்கிங் டிஃப்ரென்ஷியல் வாயிலாக காரின் அனைத்து சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கும். இவற்றின் உதவியுடன் 0-100kmph வேகத்தை வெறும் 3.4 வினாடியில் எட்டிவிடக்கூடிய இந்த புதிய லம்போர்கினி காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 260கிமீ ஆகும்.

காரின் உயரம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, விளக்குகளுக்கு வலிமையான பாதுகாப்பான்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் டிஃப்யூஸர் வழக்கமான ஹூராகெனில் இருந்து சற்று வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பெரியதாக எந்த அப்கிரேடும் இல்லை. டேஸ்போர்டில் டச் ஸ்க்ரீனுக்கு புதிய கிராஃபிக்ஸ் உடன் புதிய அல்காண்ட்ரா வெர்டே என்ற பிரத்யேக பச்சை நிறத்தில் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள லம்போர்கினி ஹூராகென் ஸ்ட்ர்ராடோவிற்கு இந்தியாவில் போட்டியாக எந்த காரும் இல்லை.

Most Read Articles
English summary
Lamborghini huracan sterrato super car launched in india
Story first published: Friday, December 9, 2022, 19:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X