சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் மிக அதிக சொகுசு வசதிகள் கொண்ட ரேஞ்ஜ் ரோவர் (Range Rover) எஸ்யூவி காருக்கு இந்தியாவில் முன் பதிவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மிக அதிக சொகுசு வசதிகள் கொண்ட கார் மாடலாக ரேஞ்ஜ் ரோவர் இருக்கின்றது. இதனால், இந்த காருக்கு இந்திய சொகுசு வாகன விரும்பிகள் மத்தியில் டிமாண்ட் சற்றே அதிகமாக காட்சியளிக்கின்றது. இந்த காரின் புதிய தலைமுறை வெர்ஷனையே ரேஞ்ஜ் ரோவர் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இப்புதிய தலைமுறை வெர்ஷன் கடந்த ஆண்டுதான் உலகளவில் வெளியீட்டைப் பெற்றது.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த நிலையிலேயே 2022 லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதன் இந்திய வருகையை ஒட்டி லேண்ட் ரோவர் சொகுசு கார் விற்பனையாளர்கள் அக்காருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றனர். ரூ. 2.31 கோடி என்ற உச்சபட்ச விலையில் இக்கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

தற்போது இந்தியா வந்திருப்பது ஐந்தாம் தலைமுறை வெர்ஷன் ரேஞ்ஜ் ரோவர் ஆகும். புதிய எஞ்ஜின் தேர்வுகள் மற்றும் பன்மடங்கு கூடுதல் சிறப்பு வசதிகள் என முன்பைவிட காட்டிலும் மிக தரமான தயாரிப்பாக இது உருவாக்கப்பட்டிருக்கின்றது. நிறுவனத்தின் "மாடுலர் லாங்கிடூடினல் ஆர்கிடெக்சர்" (Modular Longitudinal Architecture)-ஐ பயன்படுத்தியே இக்கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

புதிய ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி மூன்று விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்இ, எச்எஸ்இ மற்றும் ஆட்டோபையோகிராஃபி ஆகிய தேர்வுகளிலேயே ட்ரிம்களிலேயே இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இத்துடன், லேண்ட் ரோவர் நிறுவனம் இதன் முதல் பதிப்பு வேரியண்டை அடுத்த ஆண்டு வரை விற்பனைக்கு வழங்க திட்டமிட்டிருக்கின்றது.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

ஆட்டோபையோகிராஃபி ட்ரிம்மிலேயே இந்த சிறப்பு பதிப்பு வழங்கப்பட இருக்கின்றது. இந்த தேர்வு சன்செட் கோல்டு சேடின் ஃபினிஷ் நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இது சிறப்பு நிற தேர்வாகும். இத்துடன் இன்னும் ஐந்து புதிய நிற தேர்வுகளும் இதில் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

புதிய ரேஞ்ஜ் ரோவர் லேண்ட் ரோவர் அதிக சொகுசு வசதிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கேற்ப மூன்று வரிசை ஏழு இருக்கைகள் அமைப்பு இக்காருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, கப்பலில் செல்லுவதைப் போன்று உணர்வை வழங்கக் கூடிய அதிக சொகுசு வசதிகள் கொண்ட இருக்கைகள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

தொடர்ந்து, காரின் வெளிப்புற தோற்றத்தை அதிக கவர்ச்சியானதாக காட்டுகின்ற வகையிலான சிறப்பம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், டிஆர்எல்-களுடன் கூடிய டிஜிட்டல் எல்இடி ஹெட்லேம்ப் (இதன் ஒளி 500 மீட்டர்கள் வரை செல்லும்), ஸ்லோப் ரக ரூஃப்லைன் மற்றும் போட்டின் வால் பகுதி போன்ற அமைப்பு கொண்ட ஸ்பிளிட் ரக டெயில்கேட் உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

வெளிப்புறத்தில் மட்டுமில்லைங்க இந்த காரின் உட்புறமும் அதிக கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் கொண்ட 13.1 இன்ச் அளவுள்ள வளைவான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (பிவி ப்ரோ சிஸ்டம் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது), பயணிகளுக்கான 11.4 இன்ச் அளவுள்ள தொடுதிரை ஆகியவை இந்த காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

மேலும், காரின் உட்புறத்தை தூய்மையானதாக வைக்கும் வகையில் காற்று வடிகட்டியும் காருக்குள் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய பன்முக பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகளுடனேயே 2022 லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த காரில் 3.0 லிட்டர் மைல்டு-ஹைபிரிட் வசதிக் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 394 எச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன், டீசல் எஞ்ஜின் தேர்வும் இந்த காரில் வழங்கப்படும்.

சொகுசான வாகன விரும்பிகளின் பிரியமான காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த மோட்டார் கொண்ட ரேஞ்ஜ் ரோவர் 341 எச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் வசதியைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், மூன்றாவதாக 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிக அதிகபட்சமாக 515 எச்பி மற்றும் 750 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Land rover range rover most luxurious suv launched in india
Story first published: Wednesday, January 12, 2022, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X