சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) கார் டாடா சஃபாரி (Tata Safari) -யைக் காட்டிலும் பெரிய உருவத்தில் உருவாகியிருப்பதாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்யிபோ என் (Mahindra Scorpio N) கார் மாடலை இந்திய சந்தையில் வெகு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் காரின் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் சில முக்கிய தகவல்களை மஹிந்திரா அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் இடிருக்கின்றது.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

அந்தவகையில், காரின் அறிமுகத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், அதன் வெளியீடு தேதி பற்றிய விபரத்தை மஹிந்திரா வெளியிட்டது. இதன் வாயிலாக புதிய ஸ்கார்பியோ என் வரும் ஜுன் 27ம் தேதி அன்று முழுமையாக வெளியீடு செய்ய இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

இந்த மாதிரியான சூழலில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் குறித்த சில சுவாரஷ்ய தகவல்கள் இணையத்தின் வாயிலாகவும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், காரின் சிறப்புகளை வெளிப்படுத்தும் உரிமையாளர் மேனுவல் கையேடின் படங்கள் வெளியாகியுள்ளன.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

கசந்திருக்கும் படங்களின் ஊடாக கார்குறித்த இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, இக்கார் தற்போது விற்பனையில் இருக்கும் டாடாவின் கவர்ச்சிகரமான மாடலான சஃபாரியைக் காட்டிலும் பெரிய உருவத்தில் உருவாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

இந்த தகவல் பெரிய குடும்பங்கள் மிக தாரளமாக பயணிக்க ஏதுவாக புதிய ஸ்கார்பியோ என் இருக்கும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் 4,662 மிமீ நீளத்திலும், 1,971 மிமீ அகலத்திலும் மற்றும் 1,870 மிமீ உயரத்திலும் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

மேலும், இதன் வீல் பேஸ் 2,750 மிமீட்டாராக இருக்கின்றது. மேலும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீட்டாரகவும் இருக்கும் என்பது கசிந்திருக்கும் ப்ராச்சர் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இந்த அளவுகள் தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோ மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார் மாடல்களைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

இதுமட்டுமின்றி இன்னும் சில தகவல்களும் இக்கார்குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, புதிய ஸ்கார்பியோ என் காரில் அட்ரினோஎக்ஸ் ஆட்டோ இன்டலிஜன்ஸ் வசதிக் கொண்ட தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கார் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிஸ்டத்தில் ஆடியோ சிஸ்டம் மற்றும் ட்யூவல் ஜோன் தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோலுக்கான பொத்தான்களும் வழங்கப்பட்டுள்ளன.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

இதுமட்டுமின்றி, மூன்று வரிசை இருக்கை அமைப்புகளுக்கும் தனி தனி ஏசி வெண்டுகள், சி-டைப் சார்ஜிங் போர்ட், சன் ரூஃப், புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான், 4 வீல் டிரைவ் சிஸ்டம் (டாப் வேரியண்டில் மட்டுமே இந்த அம்சம் காணப்படும்), முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அடாஸ் அம்சம் உள்ளிட்டவையும் புதிய ஸ்கார்பியோ என் காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

மஹிந்திரா நிறுவனம் அண்மையில் இக்காரின் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன் வாயிலாக ஸ்கார்பியோ என் எல்இடி ஹெட்லேம்பால் அலங்கரிக்கப்பட இருப்பது உறுதியாகியது. குறிப்பாக, டைனமிக் ரக எல்இடி டர்ன் இன்டிகேட்டர் மற்றும் சி வடிவ பகல்நேர எல்இடி லைட்டுகள் மற்றும் எல்இடி பனி மின் விளக்கு உள்ளிட்டவையும் ஸ்கார்பியோ என்-இல் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

மேலும், புதிய ஸ்கார்பியோ என் காரில் 170 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய 2.0 லிட்டர் மோட்டார் மற்றும் 130 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய 2.2 லிட்டர் டீசல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு மோட்டார்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கிய ஆகிய இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

சஃபாரியைவிட பெரிய உருவத்தில் வருகிறதா புதிய ஸ்கார்பியோ என்?.. நிறைய பேரு போனாலும் இட பற்றாக்குறையே இருக்காது!

Source: Team BHP

Dimensions 2022 Scorpio N Old Scorpio XUV700 Safari
Length (mm) 4662 4456 4695 4661
Width (mm) 1917 1820 1890 1894
Height (mm) 1870 1995 1755 1786
Wheelbase (mm) 2750 2680 2750 2741
Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Leaked brochure pics reveales mahindra scorpio n dimension details
Story first published: Monday, June 13, 2022, 15:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X