பயமே இல்லாம அதிக தூரம் பயணிக்கணுமா? லிஸ்ட்ல இருக்க எலெக்ட்ரிக் கார்கள் அனைத்தும் உங்க ஆசையை பூர்த்தி செய்யும்!

மின்சார கார் - டூ-வீலர் என அனைத்து ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் இந்தியாவில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அண்மைக் காலங்களாக அவற்றிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதிலும் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நாம் எதிர்பார்த்திராத அளவிற்கு டிமாண்ட் நிலவிக் கொண்டிருருக்கின்றது.

இதன் விளைவாக இந்திய சந்தையில் அதிகம் ரேஞ்ஜ் தரும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகின்றது. அந்தவகையில், தற்போது இந்தியாவில் மிக மிக அதிகம் ரேஞ்ஜ் தரும் திறனில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ஓர் முழு சார்ஜில் 500க்கும் அதிகமான ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலை விரிவாகக் காணலாம்.

எலெக்ட்ரிக் கார்

பிஒய்டி அட்டோ3:

பிஒய்டி அதன் இரண்டாவது மின்சார காராக அட்டோ 3 இவி எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மின்சார காராகும். ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. காரை புக் செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு வரும் 2023 ஜனவரியில் டெலிவரி கொடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரின் விலை ரூ. 33.99 லட்சம் ஆகும். இந்த காரில் பிஒய்டி நிறுவனம் பன்முக சிறப்பு வசதிகளை வாரி வழங்கியிருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் அட்டோ3 எலெக்ட்ரிக் கார் சுமார் 521 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 60.48 kWh பேட்டரி பேக்கை பிஒய்டி பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை 80kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். அப்படி இந்த பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் பூஜ்ஜியம் சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இதேபோல், இக்காரை 2 ஏசி பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் சார்ஜ் செய்யும்பட்சத்தில் முழு சார்ஜை எட்ட 10 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

பிரவைக் டெஃபி:

இந்தியாவில் இந்த மின்சார கார் மிக சமீபத்திலேயே வெளியீடு செய்யப்பட்டது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற பெரிய உருவம் கொண்ட வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிமுகமாக ரூ. 39.50 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 90.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

உதாரணமாக டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்யும்போது வெறும் 30 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த அளவு சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திலேயே பிரவைக் டெஃபி சார்ஜாகும். பிரவைக் டெஃபியில் கூடுதல் சிறப்பு வசதிகளாக 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர், மல்டிபிள் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஒயர்லெஸ் சார்ஜிங், பயணிகளுக்கான சிறிய திரை என பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கியா இவி6:

கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு ரூ. 59.95 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப விலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதில் டாப் ஸ்பெக் மாடலாக அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வு இருக்கின்றது. இதற்கு ரூ. 64.96 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இந்த கார் பிரத்யேகமாக சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 77.4 kWh பேட்டரி பேக் தேர்விலேயே இரு தேர்வுகளும் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் 708 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆகையால், இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார் லிஸ்டில் இதுவும் பிடித்துள்ளது.

ஹூண்டாய் ஐயோனிக் 5:

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பே இந்த ஐயோனிக்5 எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த காரின் ரேஞ்ஜ் திறன் 500 க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அராய் சான்றளித்த ரேஞ்ஜ் திறன் இது ஆகும். இதில் வழங்கப்பட்டிருக்கும் பேட்டரி பேக்கை 350 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். அவ்வாறு சார்ஜ் செய்யும்பட்சத்தில் எலெக்ட்ரிக் காரை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 18 நிமிடங்களே போதுமானது.

பிஎம்டபிள்யூ ஐ4:

பிஎம்டபிள்யூ ஐ4 எலெக்ட்ரிக் கார் ரூ. 69.90 லட்சம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் 80.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் 590 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரியை அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். 210 kw டிசி ஃபாஸ்ட் சார்ஜ் பாயிண்டில் சார்ஜ் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 11 kWh வீட்டு சார்ஜர் பாயிண்டில் வைத்து கூட சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதில் வைத்து சார்ஜ் செய்தால் 8.30 மணி நேரம் வரை 10-80 சதவீதம் சார்ஜேற்ற செலவிட வேண்டியிருக்கும்.

Most Read Articles
English summary
List of 500 plus range e cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X