மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள்... செம மாஸா இருக்கே!

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் என்னென்ன அம்சங்கள் புதிதாக இருக்கிறது? பழைய காருக்கும் புதிய காருக்கும் என்ன வித்தியாசம்? முழு தகவல்களை இங்கே காணலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

இந்திய மக்கள் மத்தியில் மஹிந்திரா காருக்கு என ஒரு தனி மரியாதை இருக்கிறது. அதிலும் ஸ்கார்பியோ காரை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அந்த காரை வைத்திருந்தாலே அவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பதான எண்ணம் மக்களுக்கு வருகிறது. இந்த காரின் கம்பீர லுக் மக்களை ஈர்க்கிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் 2022 ஸ்கார்பியோ என் காரை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை அந்நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது. ஏற்கனவே விற்பனையாகும் பழைய காரும் விற்பனையாகும். புதிய காரும் விற்பனைக்கு வருகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

பழைய கார் ஸ்கார்பியோ கிளாசிக் என்ற பெயரிலும், புதிய கார் ஸ்கார்பியோ என் என்ற பெயரிலும் விற்பனையாகவுள்ளது. இந்நிலையில் இந்த பதிவில் நாம் பழைய ஸ்கார்பியோ காரிலிருந்து புதிய ஸ்கார்பியோ காரில் என்னென்ன அம்சங்கள் புதிதாக இடம் பெற்றுள்ளது காணலாம் வாருங்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

4X4

புதிய ஸ்கார்பியோ என் காரில் எல்லா வேரியன்ட் காரும் ஆல்வீல் டிரைவ் ஆப்கான்களுடன் வரவிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த கார் ஆஃப் ரோடு டிரைவிங்கிற்கு சிறந்த கார் என்பதால் இந்த காரில் ஆல்வீல் டிரைவ் கட்டாயம் இருக்க வேண்டும் என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

புதிய லோகோ

ஏற்கனவெளியான புகைப்படத்தின் படி இந்த கார் புதிய லோகாவுடன் வருகிறது. ஏற்கனவே இந்த லோகா மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காரில் அறிமுகப்படுத்திவிட்டது. இந்த காரும் அதே லோகாவுடன் வெளியாகவுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

டூயல் எல்இடி புரோஜெக்டர்

அந்த காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களில் இந்த காரில் உள்ள ஹெட்லைட் டூயல் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்டாக உள்ளது. இது காருக்கு ஸ்போர்ட்டி மற்றும் மார்டன் லுக்கை தருகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்

இந்த காரில் டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதே இண்டிகேட்டர் தான் எக்ஸ்யூவி700 காரிலும் உள்ளது. அதே இண்டிகேட்டர் தற்போது ஸ்கார்பியோ என் காரிலும் உள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

பெரிய டச் ஸ்கிரீன்

இந்த கார் குறித்து வெளியான ஸ்பை புகைப்படங்களில் இந்த காரில் பெரிய அளவிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் டேஷ்போர்டு பழைய காரிலிருந்து சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

டிஜிட்டல் இன்ட்ரூமெண்ட் கன்சோல்

இந்த காரின் ஸ்டியரிங்கிற்கு பின்னால் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.இது சமீபத்தில் வெளியான ஸ்பை புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இதுவரை 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் தான் வெளிவந்தது. தற்போது இதில் மற்றொரு ஆப்ஷனாக 6 ஸ்பீடு டார்க் கண்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வருகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

டிரைவ் மோட்கள்

ஸ்கார்பியோ என் காரில் ஒரு சில டிரைவ் மோட்கள் இருப்பதாக வெளியான ஸ்பை புகைப்படங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த மோட்களை டிரைவர் எளிதாக மாற்ற முடியும் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரைவ் மோட்கள் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல்

இந்த 2022 ஸ்கார்பியோ என் கார் முழுவதுமாக ஸ்போர்ட்டி லுக்கில் இருக்கிறது. இந்த கார் பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீலை பெற்றுள்ளது. மேலும் ஸ்டியரிங்கிலேயே இன்ஃபோடெயின்மெண்டி்ல பெரும்பாலான ஆப்ஷன்களை கையாளும் வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

சன் ரூப்

பழைய ஸ்கார்பியோ காரை இல்லாத ஒரு வசதி புதிய ஸ்கார்பியோ காரில் இருக்கிறது என்றால் சன் ரூஃப் வசதியைக் கட்டாயமாகச் சொல்லலாம். இன்று வெளியாகும் பெரும்பாலான உயர்ரக காரில் இருக்கும் வசதி என்பதால் இந்த காரிலும் அந்த வசதியை உருவாக்கியுள்ளனர்.

மஹிந்திரா ஸ்கார்பியோ - என் காரில் யாரும் எதிர்பார்க்காத புதிய அம்சங்கள் . . . செம மாஸா இருக்கே !

இந்த காரில் மற்ற வழக்கமானவசதிகளான 360 டிகிரி கேமரா, டூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், கனெக்ட்டெட் கார் தொழிற்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், பிரிமியம் கண்ட்ரோல் சிஸ்டம், ஆகிய வசதிகள் இருக்கிறது. இத்தனை அம்சங்கள் நாம் வெளியான புகைப்படங்களை வைத்துக் கூறுகிறோம். இந்த தகவல்களை மஹிந்திரா நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
List of features and new things in Mahindra scorpio N car
Story first published: Saturday, May 21, 2022, 15:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X