சின்ன காராக இருந்தாலும் மாருதி இவ்வளவு வசதிகளை கொடுக்குறாங்களா? ஆல்டோ ரசிகர்களுக்கு செம ட்ரீட்...

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், புதிய 2022 ஆல்டோ கே10 காரை, மாருதி சுஸுகி நிறுவனம் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

Recommended Video

Kia Carens: Driving Safe Cars | 10 Standard Safety Features For A Stress-free Journey

அந்த காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? என இந்த பதிவில் விரிவாகக் காணலாம் வாருங்கள்.

சின்ன காராக இருந் தாலும் மாருதி இவ்வளவு வசதிகளை கொடுக் குறாங்களா ஆல்டோ ரசிகர் களுக்கு செ ம ட்ரீட் . . .

மாருதி ஆல்டோ காரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. முதன் முறையான கார் ஓட்டி படித்த பலர் இந்த காரை தான் ஓட்டி படித்திருப்பார்கள். அந்த அளவிற்கு இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் மனதில் மிக நெருக்கமான கார் இந்த மாருதி ஆல்டோ. இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவனம் மாருதி ஆல்டோ கே10 காரின் புதிய அப்டேட்டட் வெர்ஷனை நாளை (18ம் தேதி) அறிமுகப்படுத்துகிறது.

சின்ன காராக இருந் தாலும் மாருதி இவ்வளவு வசதிகளை கொடுக் குறாங்களா ஆல்டோ ரசிகர் களுக்கு செ ம ட்ரீட் . . .

இந்த காருக்கான டீசரை மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் புதிய ஆல்டோ கே10 காரில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் இடம்பெறவுள்ளன. ஆல்டோவின் 20 ஆண்டுக் கால வரலாற்றை இந்த கார் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் இந்த காரில் உள்ள புதிய அம்சங்கள் குறித்த விபரங்களைக் காணலாம்

சின்ன காராக இருந் தாலும் மாருதி இவ்வளவு வசதிகளை கொடுக் குறாங்களா ஆல்டோ ரசிகர் களுக்கு செ ம ட்ரீட் . . .

மாருதி சுஸூகி ஆல்டோ கே10 கார் ஆட்டோகியர் பாக்ஸ் வேரியன்டுடன் சேர்த்து மொத்தம் 11 வேரியன்ட்களில் வெளியாகிறது. VXI,VXI(O),VXI+ மற்றும் VXI + (O), ஆகிய வேரியன்ட்களில் வெளியாகவுள்ளது. இந்த கார்களில் முக்கிய அம்சங்களாக ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டியரிங் மவுண்ட்டட் கண்ட்ரோல், ஆகிய முக்கியமான அம்சங்கள் இருக்கிறது.

சின்ன காராக இருந் தாலும் மாருதி இவ்வளவு வசதிகளை கொடுக் குறாங்களா ஆல்டோ ரசிகர் களுக்கு செ ம ட்ரீட் . . .

முக்கியமாக இந்த காரின் டாப் எண்ட் வேரியன்டை பொருத்தவரை ஏகப்பட்ட புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன. இந்த கார் குறித்துவெளியாகியுள்ள டீசரில் மாருதி சுஸூகி நிறுவனம் இந்த புதிய காரின் உட்புறத்தைக் கருப்பு நிறத்தில் கொடுத்துள்ளது. மேலும் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, 4 பவர் விண்டோ, எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்டபுள் ஓஆர்விஎம், ரிமோட் கீ ஆகிய அம்சங்கள் இருக்கின்றன.

சின்ன காராக இருந் தாலும் மாருதி இவ்வளவு வசதிகளை கொடுக் குறாங்களா ஆல்டோ ரசிகர் களுக்கு செ ம ட்ரீட் . . .

இந்த காரில் உள்ள உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மாருதி சுஸூகி எஸ்-பிரஸ்ஸோ மற்றும் புதிய தலைமுறை செலிரியோ காரில் உள்ள சிஸ்டம் தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஆல்டோ கே10 காரின் இன்ஜினை பொருத்தவரை கே10 சி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 1.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு இன்ஜினாக இருக்கிறது. இது 66 பிஎச்பி பவரை 5500 ஆர்பிஎம்மிலும், 89என்எம் டார்க் திறனை 3500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது.

சின்ன காராக இருந் தாலும் மாருதி இவ்வளவு வசதிகளை கொடுக் குறாங்களா ஆல்டோ ரசிகர் களுக்கு செ ம ட்ரீட் . . .

இதே இன்ஜின் தான் புதிய செலிரியோ, வேகன் ஆர், எஸ்-பிரஸ்ஸோ, ஆகிய கார்களிலும் உள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது, ஏஜிஎஸ் எனப்படும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பாதுகாப்பைப் பொருத்தவரை முன்பக்கம் 2 ஏர் பேக்கள், பின்பக்கம் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

சின்ன காராக இருந் தாலும் மாருதி இவ்வளவு வசதிகளை கொடுக் குறாங்களா ஆல்டோ ரசிகர் களுக்கு செ ம ட்ரீட் . . .

இந்த புதிய மாருதி சுஸூகி ஆல்டோ கே10 கார் மொத்தம் 6 விதமான கலர்களில் கிடைக்கிறது. ஸ்பீடி ப்ளு, எர்த் கோல்டு, சிசிலிங் ரெட், சில்கி ஒயிட், சாலிட் ஒயிட், கிரணைட் க்ரே ஆகிய நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் நாளை அறிமுகமாகிறது. இந்த காருக்காக பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த காரை புக் பண்ண நீங்க ரெடியா இருக்கீங்களா?

Most Read Articles
English summary
List of features in 2022 Maruti alto k10
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X