தீபாவளி போனஸ் வரப்போகுதா... இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க... புதுசா 7 கார்கள் வரப்போகுது..

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு 7 புதிய கார்கள் களம் இறங்கத் தயாராகவுள்ளன. இந்த கார்கள் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

தீபாவளி போனஸ் வரப்போகுதா . . . இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க . . . புதுசா 7 கார்கள் வரப்போகுது . . .

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் துவங்கிவிட்டது. அடுத்தடுத்து தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனத் தொடர் பண்டிகைகள் வரவிருக்கிறது. இந்தியர்கள் மத்தியில் நல்ல நாட்களில்தான் கார் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் அவர் வாழ்வாதாரத்தை உயர்த்து பொருட்களை வாங்குவது வழக்கம். அதனால் ஆட்டோமொபைல் துறையில் இந்த பண்டிகை காலங்களில் தான் வாகனங்களின் விற்பனை அமோகமாக இருக்கும். இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் தான் தனது புதிய தயாரிப்புகளைக் களம் இறக்கத் தயாராவார்கள்.

தீபாவளி போனஸ் வரப்போகுதா . . . இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க . . . புதுசா 7 கார்கள் வரப்போகுது . . .

அந்த வகையில் தற்போது இந்தியாவில் விற்பனைக்குத் தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வரவுள்ள கார்களின் பட்டியலைத் தான் இந்த செய்தியில் உங்களுக்காக வழங்கியுள்ளோம். இதுவரை கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி 7 கார்கள் இன்னும் இந்த பண்டிகை காலத்தில் வெளியாகத் தயாராகவுள்ளன. அந்த பட்டியலைக் கீழே காணலாம்.

தீபாவளி போனஸ் வரப்போகுதா . . . இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க . . . புதுசா 7 கார்கள் வரப்போகுது . . .

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்

எம்ஜி நிறுவனம் தனது ஹெக்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வரும் நவம்பர் மாதம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில பழைய காரில் உள்ள இன்ஜின் தான் இதிலும் இருக்கிறது. இதில் புதிதாக இதன் முன்பக்க டிசைன் மாற்றப்படுகிறது. இது போக கேபினிலும் சில அப்டேட்டகள் வருகின்றன. தற்போது உள்ள காரில் உள்ளதை விடப் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏடிஏஎஸ், மேலும் பல மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், சில புதிய அம்சங்களும் இடம் பெறும் என கூறப்படுகிறது.

தீபாவளி போனஸ் வரப்போகுதா . . . இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க . . . புதுசா 7 கார்கள் வரப்போகுது . . .

பிஒய்டி அட்டோ3

பிஓய்டி நிறுவனம் தனது அட்டோ 3 காரை இந்தியாவில் தனது இரண்டாவது தயாரிப்பாக வெளியிடுகிறது. இந்த கார் ரூ28-35 லட்ம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இ3 என்ற ஃபிளாட்ஃபார்மில் வெளியாகிறது. இந்த கார் 4.5 மீட்டர் நீளம் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி காராகும். இந்த காரில் பிளேடு பேட்டரி என்ற பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 470 கி.மீ வரை பயணிக்கும் ரேஞ்சை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தீபாவளி போனஸ் வரப்போகுதா . . . இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க . . . புதுசா 7 கார்கள் வரப்போகுது . . .

டொயோட்டா அர்பன் க்ரூஸர்

டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் காரை இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் நிலையில் அதை அப்டேட் செய்து புதிய தலைமுறை காராக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை அர்பன் க்ரூஸர் காரில் புதிய வெளிப்புற டிசைன், அப்டேட் செய்யப்பட்ட கேபின், புதிய அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட இன்ஜின் ஆப்ஷன்கள், பெரிய பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல ஆப்ஷன்கள் இந்த காரில் வெளியாகவுள்ளன.

தீபாவளி போனஸ் வரப்போகுதா . . . இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க . . . புதுசா 7 கார்கள் வரப்போகுது . . .

மாருதி பலேனோ சிஎன்ஜி

டொயோட்டா நிறுவனம் தனது கிளான்ஸா காரின் சிஎன்ஜி வேரியன்டை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. அதே போல மாருதி நிறுவனமும் தனது பலேனோ காரின் சிஎன்ஜி வெர்ஷனை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இந்த சிஎன்ஜி வெர்ஷனிற்காக அந்நிறுவனம் பலேனோ காரின் 1.2 லி பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் சிஎன்ஜி மோடில் 77 எச்பி பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். கிளான்ஸாவிற்கு பிறகு பிரிமியம் ஹேட்ச் பேக் காரில் சிஎன்ஜி ஆப்ஷன் உள்ள கார் இது தான்.

தீபாவளி போனஸ் வரப்போகுதா . . . இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க . . . புதுசா 7 கார்கள் வரப்போகுது . . .

மாருதி கிராண்ட் விட்டாரா

மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் ஹைபிரிட் ஷெர்ஷனை வெளியிடவுள்ளது. இந்நிறுவனம் இந்த கிராண்ட் விட்டாரா காரை மார்கெட்டில் சிறப்பான விற்பனையில் உள்ள மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் தயாரித்துள்ளது. இந்த செக்மெண்டில் ஏற்கனவே கியா செல்டோறா், ஃபோக்ஸ்வேகன் டைகுன், உள்ளிட்ட பல கார்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த லைன்அப்களில் முதல் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார் இதுவாக தான் இருக்கும். இந்த கார் 1.5 லி கே15 ஸ்மார்ட்-ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் இருக்கிறது.

தீபாவளி போனஸ் வரப்போகுதா . . . இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க . . . புதுசா 7 கார்கள் வரப்போகுது . . .

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

டொயோட்டா நிறுவனம் தனது குளோபல் எஸ்யூவி ஸ்டைலிங்கை கொண்டு இந்த அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை தயாரித்துள்ளது. இந்த கார் குளோபல் சி ஃபிளாட்ஃபார்மில் தயாராகியுள்ளது. கிராண்ட் விட்டாரா காரும் இதே ஃபிளாட்ஃபார்மில் தான் தயாராகி வருகிறது. இந்த ஹைரைடர் காரில் ஸ்டிராங்க் டைனமிக் எக்ஸ்டென்சிவ் அம்சங்கள் இருக்கின்றன. இந்த காருக்கான ஹைபிரிட் வேரியன்ட்களுக்கான விலை விபரங்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. விரைவில் அத்தனை வேரியன்ட்களுக்கான விபரமும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தீபாவளி போனஸ் வரப்போகுதா . . . இப்பவே எந்த காரை வாங்குறதுன்னு முடிவு பண்ணுங்க . . . புதுசா 7 கார்கள் வரப்போகுது . . .

மஹிந்திரா ஸ்கார்பியோ என்

மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே தனது ஸ்கார்பியோ என் காரை அறிமுகப்படுத்திவிட்டது. ஆனால் அந்த காருக்கான டெலிவரிகள் இன்னும் துவங்கவில்லை. ஸ்கார்பியோ தான் இந்தியாவிலேயே குறைந்த விலை 4X4 எஸ்யூவி காராக உள்ளது. இந்த காரின் கேபின்கள் பிரிமியம் அம்சங்களுடனும், வெளிப்புறத்தோன்றம் ஃபோல்டான தோற்றத்துடனும் இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த காரின் முந்தைய மாடல் ஸ்கார்பியோ கிளாசிக் எனப் பெயர் மாற்றப்பட்டு விற்பனையாகிறது.

Most Read Articles
English summary
List of upcoming 7 cars in this festive season in India
Story first published: Wednesday, September 21, 2022, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X