விலையை பாத்து பயப்பட வேண்டும்.. ஒர்த்தான வசதிகள் நிறைய தந்திருக்காங்க! உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் இ-கார்!

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட இக்யூஎஸ் 580 (Mercedes EQS 580) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காரில் நிறுவனம் வழங்கியிருக்கும் சொகுசு அம்சங்கள் மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

சொகுசு கார்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மின்சார கார் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கியிருக்கின்றது. இந்த செயலை தொடங்கி தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் காரையே நேற்றைய தினம் இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்தியது. மெர்சிடிஸ் இக்யூஎஸ் 580 (Mercedes EQS 580) எனும் எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் இந்திய சொகுசு மின்சார கார் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக இந்த காருக்கு ரூ. 1.55 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

டிசைன் மற்றும் சிறப்பு ஃபீச்சர்கள்:

மெர்சிடிஸ் நிறுவனம் இந்த சொகுசு காரை இந்தியாவில் வைத்து தயாரித்திருந்தாலும் சர்வதேச தரத்திற்கு ஏற்பவே உருவாக்கியிருக்கின்றது. இதனை அக்காரின் கவர்ச்சிகரமான தோற்றம் உறுதிப்படுத்துகின்றது. முழுமையாக அடைக்கப்பட்ட ஸ்டைலிலான கிரில், இரு முனைகளிலும் கோண வடிவிலான ஹெட்லைட்டுகள், எல்இடி லைட் பார் உள்ளிட்டவை காரின் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

இத்துடன், பெரிய துளை காற்று செல்ல ஏதுவாக முன் பக்க பம்பரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது காரின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவியாக இருக்கும். முன் பக்கத்தைப் போலவே காரின் பக்கவாட்டு பகுதிக்கும் கவர்ச்சியான தோற்றத்தை சேர்க்கும் வகையில் 20 அங்குல அளவிலான 5 ஸ்போக்குகள் கொண்ட வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீலை பிரத்யேக நிறங்களால் மெர்சிடிஸ் அலங்கரித்திருக்கின்றது. கருப்பு மற்றும் சில்வர் நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த வீல்களில் 255/45 R 20 டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், இந்த எலெக்ட்ரிக் காரின் பின் பகுதியும் அதிக கவர்ச்சியான கூறுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. மிக முக்கியமாக பெரிய எல்இடி லைட் பார் அதன் பின் பகுதியில் சேர்க்கப்பட்டிருப்பது வேற லெவல் அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

வெளிப்புறங்களைப் போலவே காரின் உட்பக்கமும் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. இதற்காக பன்முக அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 56 அங்குல ஹைப்பர் ஸ்கீரின் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இந்த ஹைப்பர் ஸ்கிரீன் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று டிரைவருக்கான திரையாகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், கடைசி ஒன்று முன் பக்க பயணிக்கானதாகவும் செயல்படும்.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த ஹைப்பர் திரையில் எம்பியூஎக்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்புகளை மேற்கொள்ள முடியும். இதுதவிர, இந்த சொகுசு காரில் 7 அங்குல டேப்ளட் பின் பக்க பயணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த திரையைக் கொண்டு பல்வேறு கருவிகளை ரியர் பயணிகளால் கன்ட்ரோல் செய்ய முடியும்.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

உதாரணமாக சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட், கூலிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை அவர்களால் இயக்க முடியும். இத்துடன், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜிங் பேட், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் மற்றும் மசாஜ் வசதிக் கொண்ட இருக்கைகள், மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

நிற தேர்வு மற்றும் பூட் ஸ்பேஸ் அளவு:

இந்த காரில் பூட் ஸ்பேஸ் 610 லிட்டர் ஆகும். பின் இருக்கைகளை மடித்து வைத்துக் கொள்வதன் வாயிலாக இதனை 1,770 லிட்டராக உயர்த்திக் கொள்ள முடியும். இக்காரை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவை, ஒப்சிடியன் பிளாக் (Obsidian Black), கிராஃபைட் கிரே (Graphite Grey), டைமண்ட் ஒயிட் பிரைட் (Diamond White Bright), சோடாலைட் ப்ளூ (Sodalite Blue) மற்றும் ஹை-டெக் சில்வர் (High-tec Silver) ஆகும்.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

ரேஞ்ஜ் மற்றும் மின் மோட்டார் விபரங்கள்:

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 எலெக்ட்ரிக் காரில் மிகப் பெரிய அளவுக் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. 107.8kWh பேட்டரியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இரு மின் மோட்டார்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டும் இணைந்து 516 பிஎச்பி பவரையும், 855 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீ என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி வெறும் 4.3 செகண்டுகளில் இந்த எலெக்ட்ரிக் கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இந்த மோட்டார்கள் கொண்டிருக்கின்றன.

விலையை பாத்து பயப்பட வேண்டும்... இதுக்கு ஒர்த்தான வசதிகள் நிறைய கொடுத்திருக்காங்க... உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

காரில் வழங்கப்பட்டிருக்கும் பெரிய பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 676 கிமீ வரை பயணிக்க முடியும் என டபிள்யூடிபி சான்றளித்துள்ளது. அதேவேலையில் அராய் 857 கிமீ தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கின்றது. இந்த அதிகபட்சே ரேஞ்ஜ் திறனுக்கு மெர்சிடிஸ் நிறுவனம் இந்த காரை 0.20 கேஎஃப்சியன்ட் டிராக்கில் தயாரித்திருப்பதே காரணம் என கூறப்படுகின்றது.

Most Read Articles
English summary
Locally assembled mercedes eqs 580 4matic launched in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X