மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ!

ஆடி க்யூ3 சொகுசு கார் மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கின்றது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் வால்வோ எக்ஸ்சி40 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த சொகுசு வாகனம்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி அதன் க்யூ3 லக்சூரி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இக்காரின் வருகையை இந்தியர்கள் பெரிதும் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தநிலையில் இப்போது அது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அறிமுகமாக சொகுசு காருக்கு ரூ. 44.89 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

இரு விதமான வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி ஆகிய தேர்வுகளிலே சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கும். இக்காரின் டெலிவரி பணிகள் நடப்பாண்டின் இறுதிக்குள் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்முக சிறப்பு வசதிகளுடன் இந்த லக்சூரி காரை ஆடி நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

இது ஆடி க்யூ3 காரின் மறு வருகை என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதியின் காரணமாக ஆடி க்யூ3 வெளியேற்றப்பட்டது. இந்த நிலையிலேயே மீண்டும் அதன் வருகையை இப்போது ஆடி நிறுவனம் செய்திருக்கின்றது. இது மூன்றாம் தலைமுறை ஆடி க்யூ3 ஆகும். இதற்கான புக்கிங் பணிகளையே நிறுவனம் மிக சமீபத்தில் தொடங்கியது.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

ரூ. 2 லட்சம் முன் தொகையில் இக்காருக்கான புக்கிங் பணிகள் சமீப சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து நேற்றைய தினம் வரையில் சுமார் 500க்கும் அதிகமானோர் க்யூ3 காரை புக்கிங் செய்திருக்கின்றனர். இதன் வாயிலாக ஆடி க்யூ3 காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருப்பது தெளிவாக தெரிகின்றது.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

ஆடி நிறுவனம் க்யூ3 காரை மிகவும் கவர்ச்சியான வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. இதற்காக, பெரிய ஹெட்லேம்ப், புதிய சிங்கிள் ஃபிரேம் ஹெக்ஸோகனல் க்ரில், கிராஷ்ட் பாடி லைன்கள், ஸ்பிளிட் ரக எல்இடி லைட்டுகள் உள்ளிட்டவற்றை ஆடி வழங்கியிருக்கின்றது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், மறு வடிவமைப்பிற்கு உட்படுத்தப்பட்ட பம்பர்கள் முன் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

தொடர்ந்து, 5 கரங்கள் கொண்ட அலாய் வீல்கள், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், பவர் ஃபோல்டிங் மற்றும் ஆட்டோ டிம்மிங் எக்ஸ்டீரியர் மிர்ரர், ஸ்போர்ட்ஸ் அட்ஜெஸ்டபிள் வசதிக் கொண்ட இருக்கைககள், பன்முக கன்ட்ரோல்கள் மற்றும் லெதரால் போர்த்தப்பட்ட 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஸ்டோரேஜ் மற்றும் லக்கேஜ்களுக்கான கம்பார்ட்மென்ட் மற்றும் ஃப்ரேம் இல்லாத ஆட்டோ டிம்மிங் இன்டீரியர் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் மிக தாரளமாக இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

இதுமட்டுமின்றி, 2 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதியுடனும், ஸ்பீடு லிமிட் வசதியுடன் க்ரூஸ் கன்ட்ரோலும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்களுடனேயே ஆடி க்யூ3 கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்களையும் அதிகளவில் தாங்கிய வாகனமாக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. 6 ஏர் பேக்குகள், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமிரா, லேன் கீப்பிங் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு இருக்கைகள், டிராஃபிக் ஜாம் அசிஸ்ட மற்றும் ஃபிரண்ட் கொள்ளிசன் அவாய்டன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களே க்யூ3 காரில் வழங்கப்ப்டடிருக்கின்றன.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

எஞ்ஜினை பொருத்தவரை ஆடி க்யூ3 எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனும் வழங்கப்படுகின்றது. இது அனைத்து வீல்களுக்கும் இயக்க திறனைக் கடத்தும் திறன் கொண்டது.

மீண்டும் தனது கால் தடத்தை பதிவு செய்த ஆடி க்யூ3... சொகுசுக்கு பஞ்சமில்லாத கார்! பதற்றத்தில் பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்கள்!

தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் வால்வோ எக்ஸ்சி40 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இக்காரை ஆடி நிறுவனம், அதன் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே உருவாக்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்பைக் காட்டிலும் அதிக நீளம் மற்றும் அகலத்தில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Luxury car maker audi launched q3 suv in india at rs 44 89 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X