வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க! ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

ஆடி நிறுவனம் அதன் புதிய தன்னாட்சி வசதிக் கொண்ட அர்பன்ஸ்பியர் (Audi Urbansphere concept) கான்செப்ட் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த வாகனத்தின் முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, அர்பன்ஸ்பியர் (Audi Urbansphere concept) எனும் கான்செப்ட் மாடலை உருவாக்கியுள்ளது. இந்த காரையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்துள்ளது. நிறுவனம் தான் கற்று வைத்திருக்கும் அனைத்து வித்தைகளையும் இறக்கி வைத்திருப்பதைப் போல் இந்த அர்பன்ஸ்பியர் காரின் உருவாக்கம் இருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

முற்றிலும் மாறுபட்ட தோற்றம், மிக கவர்ச்சியான அமைப்பு மற்றும் கண்கவர் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றால் கான்செப்ட் மாடல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதன் வெளியீடு ஆடி கார் பிரியர்களின் கவனத்தை பெரியளவில் ஈர்த்துள்ளது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

ஆடி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் தன்னாட்சி வாகன வடிவமைப்பு கட்டிடக்கலை அடிப்படையில் உருவாக்கும் மூன்றாவது அடுத்த தலைமுறை கான்செப்ட் மாடல் இதுவாகும். இதன் வெளியீட்டின் வாயிலாக எதிர்காலத்தில் தங்கள் நிறுவனம் என்ன மாதிரியான தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பதை வெளிக்காட்டியுள்ளது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

ஆடி அர்பன்ஸ்பியர் டிசைன் மற்றும் ஸ்டைல்

ஆடி நிறுவனம் இதுவரையில் உருவாக்கியதைக் காட்டிலும் மிக சிறந்த மற்றும் பெரிய வாகனமாக இந்த அர்பன்ஸ்பியர் காட்சியளிக்கின்றது. தற்போது நிறுவனத்தின் பெரிய வாகனமாக க்யூ7 எஸ்யூவி இருக்கின்றது. இதைக்காட்டிலும் பெரிய உருவம் கொண்ட வாகனமாக அர்பன்ஸ்பியர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

இதுமட்டுமில்லைங்க, இதுவரை இல்லாத சூப்பரான ஸ்டைல் கொண்ட வாகனமாகவும் அர்பன்ஸ்பியர் கான்செப்ட் காட்சியளிக்கின்றது. காரின் முகப்பு பகுதியில் பாரம்பரிய க்ரில்லிற்கு பதிலாக முகமூடி போன்ற க்ரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நிறுவனத்தின் ஆடி லைட் கேன்வாஸ் என்றழைக்கப்படும் எல்இடி லைட் போன்ற சில பிரத்யேக அம்சங்களும் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

உலக நாடுகளின் முக்கிய நகரங்களை கருத்தில் கொண்டு இக்காரை வடிவமைத்திருப்பதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சீன சந்தையை நினைவில் கொண்டே அர்பன்ஸ்பியர் காரை ஆடி உருவாக்கியிருக்கின்றது. எனவே, அந்நாட்டின் முன்னணி நிறுவனத்தின் பங்கும் இக்காரின் உருவாக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

பெய்ஜிங்கை மையமாகக் கொண்டு இயங்கும் அந்த தனியார் நிறுவனம், நகர மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை நன்கு அறிந்து, அதற்கேற்ப காரை வடிவமைக்க ஆடிக்கு உதவியிருக்கின்றது. இதன் வாயிலாக, அர்பன்ஸ்பியர் கான்செப்ட் மிக நேர்த்தியாக தயாராகியிருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

அர்பன்ஸ்பியர் காரில் பி பில்லர்கள் இடம் பெறவில்லை. மேலும், வீடுகளில் காணப்படுவதைப் போன்ற கதவுகள் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இருக்கைகளை எளிதில் அடைய உதவும். இந்த வாகனத்தை வெறும் வாகனமாக மட்டுமின்றி அலுவலகம் அல்லது சிறிய வீடு அல்லது கேம்ப் வாகனம் ஆகியவையாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

இத்தகைய வடிவமைப்பையே ஆடி அர்பன்ஸ்பியர் காருக்கு கொடுத்துள்ளது. வீடுகளில் இருப்பதை போன்ற அனுபவத்தை வழங்குவதற்காக இக்காரில் மினி ஃப்ரிட்ஜ், திரை உள்ளிட்ட பன்முக அம்சங்கள் கொடுக்கப்படும். இத்துடன், கேபினை கூடுதல் லக்சூரியான வசதிக் கொண்டதாகவும் ஆடி உருவாக்கியிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

இதுமட்டுமில்லைங்க ஆடி நிறுவனம் இந்த வாகனம் ஓர் பசுமை வாகனமாகவும் செயல்படும். அதாவது, இது எலெக்ட்ரிக் வாகனமாக உருவாக்கப்பட இருக்கின்றது. இத்துடன், தன்னாட்சி போன்ற அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளும் இக்காரில் இடம் பெற உள்ளது. இந்த தன்னாட்சி தொழில்நுட்பமானது பயணிகளை தேவையான இடத்திற்கு தானே அழைத்துச் செல்லுதல், மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வருதல் போன்றவற்றை தானே செய்யும் வசதிக் கொண்டுள்ளது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

இக்காரின் இயக்கத்திற்காக இரண்டு மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று முன் பக்கத்தில் உள்ள ஆக்ஸில்களுக்கும், மற்றொன்று பின் பக்கத்தில் உள்ள ஆக்ஸிலிலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை 400 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டவை.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

இக்காரில் பயன்படுத்தப்பட்டிருப்பது 24 இன்ச் அளவுள்ள வீல்கள் ஆகும். இத்துடன், அடாப்டீவ் ஏர் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது. இவை காரின் இயக்கத்தை வெற லெவல் சொகுசானதாக மாற்றியுள்ளன. இத்துடன், ஓர் முழுமையான சார்ஜில் 749 கிமீ வரை மைலேஜை வழங்கக் கூடிய 120 kWh பேட்டரி பேக்கும் அர்பன்ஸ்பியர் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

இதன் சார்ஜ்வேகம் 270kW என ஆடி தெரிவித்துள்ளது. அதாவது, 5 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரையிலான சார்ஜை ஏற்ற வெறும் 25 நிமிடங்களே போதும் என கூறப்படுகின்றது. இந்த அம்சங்கள் மற்றும் வசதிகள் அனைத்தும் சீன சந்தையைக் கருத்தில் கொண்டே ஆடி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்... சீக்கிரம் விற்பனைக்கு கொண்டு வாங்க... ஆடி அர்பன்ஸ்பியர் வெளியீடு!

ஆகையால், இந்திய வருகை என்பது கேள்விக் குறியாக மாறியுள்ளது. அப்படியே இது இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டாலும் பல்வேறு மாற்றங்களுடன் அது வருகை தரும். இருப்பினும், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Luxury car maker audi revealed urbansphere concept
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X