இந்த காரை கண்டிப்பா மிஸ் பண்ண போறோம்... செம்ம சூப்பரான காரை நாட்டில் இருந்து வெளியேற்றியது மஹிந்திரா நிறுவனம்!

மஹிந்திரா நிறுவனம் அதன் புகழ்மிக்க ஓர் எஸ்யூவி ரக காரை சந்தையில் இருந்து வெளியேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் எந்த காரை சந்தையில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது, ஏன், அதை வெளியேற்றியது என்பது குறித்த முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. டாடா நெக்ஸான், பஞ்ச் மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா இவற்றிற்கே இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவையே நாட்டின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார்களும் ஆகும். இந்த கார் மாடல்களுக்கு நாட்டில் வேற லெவல் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேலையில், மஹிந்திரா நிறுவனத்தின் ஓர் முழு அளவு எஸ்யூவி ரக காருக்கு அந்தளவு வரவேற்புக் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்டுராஸ் ஜி4

இந்த நிலையிலேயே அந்த கார் தற்போது சந்தையை விட்டு வெளியேற்றப்படும் செய்யப்பட்டிருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வந்த புகழ்மிக்க எஸ்யூவி ரக கார் மாடல்களில் அல்டுராஸ் ஜி4-ம் ஒன்று. இந்த காரையே நிறுவனம் இந்தியாவை விட்டு தற்போது வெளியேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது விற்பனையில் இருந்து அகற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளியேற்றத்தை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இருந்து அல்டுராஸ் ஜி4 காரின் விபரங்களை அகற்றியிருக்கின்றது.

ஆனால், இதன் வெளியேற்றத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. வெளியேற்றத்தைத் தொடர்ந்து தற்போது மஹிந்திரா கார் விற்பனையாளர்களும் அந்த காருக்கான புக்கிங்குகளை நிறுத்தியிருக்கின்றனர். அல்டுராஸ் ஜி4 இன் வெளியேற்றத்தால், அது இருந்த இடத்திற்கு தற்போது எக்ஸ்யூவி 700 முன்னேறியிருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 13.45 லட்சம் ஆகும். அதேவேலையில் இதன் உயர்நிலை வேரியண்டுக்கு ரூ. 24.95 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது புனே எக்ஸ்- ஷோரூம் விலை ஆகும். ஆனால், இந்த கார் ஓர் நடுத்தர அளவுள்ள எஸ்யூவி ஆகும்.

வெளியேற்றம் செய்யப்பட்டிருப்பதோ முழு அளவிலான எஸ்யூவி ரக காராகும். இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகிய கார் மாடல்களுக்கே மஹிந்திராவின் அல்டுராஸ் ஜி4 போட்டியாக இருந்தது. இந்த கார் வெளியேற்றம் செய்யப்பட்டிருப்பதால் இந்த இரு கார் மாடல்களுக்கும் போட்டி இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த இரு கார் மாடல்களைக் காட்டிலும் குறைவான விலையிலேயே மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 விற்பனைக்குக் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 30.68 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. இருப்பினும் இந்தியர்களின் மனதை இந்த கார் கவர தவறிவிட்டது. இதன் விளைவாக தற்போது சந்தையை விட்டே அல்டுராஸ் கார் வெளியேறியிருக்கின்றது. இந்த காரை மஹிந்திரா நிறுவனம் சிறப்பம்சங்கள் நிரப்பப்பட்ட எஸ்யூவி ரக காராக சந்தையில் விற்பனைக்கு வழங்கி வந்தது. அந்தவகையில், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிக முக்கியமான அம்சமாக இந்த காரில் வழங்கப்பட்டது.

இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. இத்துடன், இந்த காரில் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், பவர்டு டிரைவர் இருக்கை, எச்ஐடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் பவர்டு டெயில்கேட் உள்ளிட்ட டாப் ரக சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டன. இதேபோல் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக அதிகம்.

ஒன்பது ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற எக்கசக்க பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, பெரிய மற்றும் அதிக பவர்ஃபுல்லான டீசல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டது. மெர்சிடிஸ் பென்ஸின் 7 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட 2.2 லிட்டர் டீசல் மோட்டாரே இந்த காரில் வழங்கப்பட்டது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 181 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

ரியர் வீல் டிரைவ் மற்றும் நான்கு வீல் டிரைவ் ஆகிய இரு விதமான தேர்வுகளும் இந்த காரில் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பன்முக சிறப்பு வசதிகள் அடங்கிய எஸ்யூவி காரையே மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்தியாவில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது. இந்த காரின் வெளியேற்றத்தால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக நிறுவனம் வேறு எந்த புதிய தயாரிப்பையும் களமிறக்குமா என்பது தெரியவில்லை. இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பையும் நிறுவனம் இப்போது வரை வெளியிடவில்லை.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra alturas g4 discontinued
Story first published: Thursday, December 1, 2022, 6:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X