நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல் இப்பவே வெளியானது!.. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

மஹிந்திரா நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரங்களை வெளியீடு செய்துள்ளது.

இத்துடன், வேரியண்ட் வாரியாக ஸ்கார்பியோ கிளாசிக் காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை அது வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) காரின் விலைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாக நிறுவனம் அக்காரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடலும் ஒன்று. மஹிந்திரா நிறுவனம் அண்மையில் புதிய தலைமுறை ஸ்கார்பியோவை 'ஸ்கார்பியோ என்' (Scorpio N) எனும் பெயரில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காரின் வருகை பழைய தலைமுறை ஸ்கார்பியோவிற்கு ஆப்பு வைக்குமோ என பலரால் அஞ்சப்பட்டது.

நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

ஆனால், எந்த நிலையிலும் புதுமுக ஸ்கார்பியோ என் காரின் வருகை அதற்கு தடையாக அமையாது என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்தது. ஸ்கார்பியோ என் காரை முதல் முறையாக இந்தியாவில் வெளியீடு செய்தபோதே இந்த தகவலை வெளியிட்டுவிட்டது. மேலும், பழைய தலைமுறை ஸ்கார்பியோ காரை புதிய அவதாரம் மற்றும் புதிய பெயரில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தது.

நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) எனும் பெயரில் அவ்வாகனத்தை நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்தது. இந்த நிலையிலேயே புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக ரூ. 11.99 லட்சம் அதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

புதிய ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யூவி இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, கிளாசிக் எஸ் (Classic S) மற்றும் கிளாசிக் எஸ்11 (Classic S11) ஆகும். இத்துடன், ஐந்து விதமான நிற தேர்வுகளிலும் இவ்வாகனத்தை வாங்கிக் கொள்ள முடியும். இக்காரின் விலைகள் நாளை அறிவிக்கப்படும் என தகவல்கள் கூறப்பட்டு வந்தநிலையில் திடீரென அதிரடியாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

விலை விபரம்:

கிளாசிக் எஸ் வேரியண்டின் விலை ரூ. 11.99 லட்சம் ஆகும்.

கிளாசிக் எஸ்11 வேரியண்டிற்கு ரூ. 15.49 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் வேரியண்ட் வாரியாக ஸ்கார்பியோ கிளாசிக் காரில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களையும் மஹிந்திரா நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. அவற்றின் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

கிளாசிக் எஸ் வேரியண்டில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள்:

 • எல்இடி டெயில் லைட்டுகள்
 • 2வது வரிசை இருக்கைகளுக்கு ஏசி வெண்டுகள்
 • ஹைட்ராலிக் அசிஸ்டட் பான்னெட்
 • பான்னெட் ஸ்கூப்
 • ட்யூவல் ஏர் பேக்குகள்
 • மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம்
 • இன்டெல்லி பார்க்
 • மேலே பார்த்த அம்சங்களே கிளாசிக் எஸ் காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக வழங்கப்பட்டிருக்கின்றன.

  நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

  கிளாசிக் எஸ்11 வேரியண்டில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்களின் பட்டியல்:

  • 22.86 செமீ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • எல்இடி ஐ-ப்ரோஸ்
  • டிஆர்எல்கள்
  • ஸ்பாய்லர்
  • டைமண்ட் கட் அலாய் வீல்கள்
  • முன் பக்க இருக்கைகளில் ஆர்ம் ரெஸ்ட்
  • உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, மேலே எஸ் வேரியண்டில் பார்த்த சிறப்பம்சங்களும் இந்த எஸ்11 வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

   நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

   எஞ்ஜினை பொருத்தவரை இரு வேரியண்டுகளிலும் ஒரே மாதிரியான மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளன. 97 kW, அதாவது, 132 பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் ஜென்2 ரக எம்ஹாவ்க் (GEN-2 mHawk) பெட்ரோல் மோட்டாரே இரு வேரியண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரை மஹிந்திரா நிறுவனம் இலகு ரக எடைக் கொண்ட அலுமினியத்தால் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

   நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

   இத்துடன், புதிய சிக்ஸ்-ஸ்பீடு கேபிள் ஷிஃப்ட் (six-speed cable shift) மேனுவல் டிரான்ஸ்மிஷனில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுதவிர, எம்டிவி-சிஎல் தொழில்நுட்பம் (MTV-CL technology) கொண்ட சஸ்பென் செட்-அப் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது மிக சூப்பரான டிரைவிங் அனுபவத்தை வழங்க உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு அட்வான்ஸ்ட் தொழில்நுட்பங்கள் புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

   நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல்... இப்பவே வெளியானது... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!

   ஸ்காரிபியோ கிளாசிக் காரின் இன்டீரியர் இரு விதமான நிற தேர்வில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் பீஜ் வண்ணங்களிலேயே உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் தோற்றத்தை பல மடங்கு மெருகேற்றும் வகையில் இந்த நிறங்கள் உள்ளன. இதுதவிர, கிளாசிக் உட் பேட்டர்ன் கன்சோல், பிரிமீயம் தர இருக்கைகள், போன் மிர்ரரிங் வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra announces introductory price for the scorpio classic here is full details
Story first published: Friday, August 19, 2022, 20:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X