குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் பொலிரோ பிக்-அப் Bolero Pik-Up) ட்ரக்கில் சிட்டி (City) எனும் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் பிரபலமான கார் மாடல்களில் பொலிரோவும் ஒன்று. இந்த வாகனத்தை காராக மட்டுமின்றி பிக்-அப் ட்ரக் ரகத்திலும் மஹிந்திரா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பன்முக தேர்வுகளில் பொலிரோ பிக்-அப் ட்ரக் தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டுள்ளது.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

இந்த நிலையிலேயே, கூடுதலாக ஓர் தேர்வை, அதாவது, புதிய வேரியண்டை பொலிரோ பிக்-அப் ட்ரக்கில் மஹிந்திரா தற்போது இணைத்திருக்கின்றது. இந்த சிட்டி எனும் புதிய தேர்வையே அது இணைத்துள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 7.97 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய சிட்டி வேரியண்டின் பேலோட் திறன் 1,500 கிலோவாகும்.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

தற்போது விற்பனைக்குக் கிடைத்து வரும் பிற பிக்-அப் ட்ரக்குகளைக் காட்டிலும் மிக சிறப்பு வசதிகள் கொண்ட வேரியண்டாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இன்னும் பல மாற்றங்களையும் புதிய சிட்டி வேரியண்டில் மஹிந்திரா மேற்கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இதன் பான்னெட் ஷார்டானதாக காட்சியளிக்கின்றது.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

நெரிசலான மற்றும் குறுகிய பாதைகள் மற்றும் தெருக்களில் எளிதில் நுழையும் விதமாக இந்த அமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களைக் கருத்தில் கொண்டே இந்த வசதியுடன் பொலிரோ பிக்-அப் ட்ரக் சிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. டெலிவரி, சரக்குகளைக் கையாளுதல் என பன்முக வர்த்தக செயல்பாட்டிற்கு இந்த வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

அதிக சரக்குகளைக் கையாளும் விதமாக மிக நீளமான பாடி பின் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில் முன் பக்கத்தில் இருவர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இருக்கைகள் சற்று சொகுசான வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் கோ டிரைவர் இருக்கை சற்று நீளமானதாக இருப்பதால் கூடுதலாக ஒருவரும் இதில் பயணிக்க முடியும்.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக்கில் 2.5 லிட்டர் எம்2டிஐ டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 65 பிஎச்பி மற்றும் 195 என்எம் டார்க்கை வெளியேற்றும். பிற வேரியண்டுகள் சற்று அதிக திறனை வெளியேற்றும் வகையில் ட்யூன்-அப் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால், அவை 75 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

மஹிந்திராவின் இந்த தயாரிப்பு லிட்டருக்கு 17.2 கிமீ வரை மைலேஜ் தரும். பொலிரோ சிட்டி பிக் அப் ட்ரக்கின் பக்கம் ஈர்க்கும் விதமாக 3 வருடங்கள் மற்றும் 1 லட்சம் கிமீ வாரண்டியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது சிறு-குறு வணிக வியாபாரிகளை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

புதிய சிட்டி பிக்-அப் டிரக்கின் அறிமுகம் குறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் விபி-மார்க்கெட்டிங் ஹரிஷ் லால்சந்தனி கூறியதாவது, "சந்தையின் எதிர்கால தேவை மற்றும் வாடிக்கையாளர் மையத்தில் இருக்கும் அதிக ஈடுபாடு ஆகியவையே எங்களின் உத்வேகத்திற்கு காரணமாக இருக்கின்றது. இதுவே பல்துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிப்புகளை உருவாக்க எங்களுக்கு உதவியாக இருக்கின்றது. எங்களின் மிகப்பெரும் வெற்றிகரமான பொலிரோ பிக்-அப் ட்ரக்கின் வரம்பில் கூடுதலாக புதிய தேர்வை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனம் வெகுவிரைவில் ஸ்கார்பியோ என் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஸ்கார்பியோவின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பவர்ஃபுல் மோட்டார் ஆகியவற்றை தாங்கிய வாகனமாகவே இது விரைவில் அறிமுகத்தைப் பெற இருக்கின்றது.

குட்டி குட்டி சந்தா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்... சூப்பரான வசதிகளுடன் மஹிந்திரா சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!

இளம் தலைமுறையினரைக் கவரும் பொருட்டு இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் இக்காரை விற்பனைக்குக் கொண்டு வருகின்றது மஹிந்திரா நிறுவனம். மிக பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் போன்ற அம்சங்கள் புதிய ஸ்கார்பியோ என் மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய அம்சங்களுடனேயே வரும் ஜூன் 27ம் தேதி அன்று மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என்-ஐ வெளியீடு செய்ய இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra launched bolero city pick up truck in india at inr 7 97 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X