சீக்கிரம் இந்த மஹிந்திரா கார்களை ஒர்க்ஷாப்புக்கு எடுத்துட்டு போங்க... இல்லனா சிக்கல் மோசமாயிரும்!

மஹிந்திரா நிறுவனம் தனது குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரித்த எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் கார் மாடல்களில் சிக்கல் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு 19 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளுக்கு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகங்களில் ஒன்றாக ஸ்கார்பியோ என் இருக்கின்றது. இந்த கார் மாடலையும் நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்மிக்க தயாரிப்பான எக்ஸ்யூவி 700 ஆகிய இரண்டு கார் மாடல்களுக்கும் திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரிக்கப்பட்ட இரு கார் மாடல்களிலும் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது.

மஹிந்திரா

இந்த அழைப்பின்கீழ் கண்டறியப்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட இருக்கின்றது. அதாவது, பாதிக்கப்பட்ட பாகம் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய பாகம் மாற்றப்பட இருக்கின்றது. இது தயாரிப்பின்போது ஏற்பட்ட பிரச்னை என்பதால் கட்டணமில்லா நிலையில் இந்த வேலையை மஹிந்திரா செய்து கொடுக்கும் என கொடுக்கும் என கூறப்படுகின்றது. இதற்காகவே மஹிந்திரா நிறுவனம் அந்தந்த பாதிக்கப்பட்ட பாகங்களைக் கொண்ட ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார் மாடல்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றது.

தகுதியான வாகனங்களின் உரிமையாளர்களுக்கு மஹிந்திரா நிறுவனமே அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றது. குறுந்தகவல் மற்றும் செல்போன் அழைப்புகளின் வாயிலாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. "நாங்களும் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் பயன்பாட்டாளர்கள்தாங்க, எங்களுக்கு இந்த மாதிரி எந்த அழைப்பு வரல. எங்களோட வாகனம் பாதிப்புக்கு ஆளாகி இருக்குமோனு சந்தேகப்படுறீங்களா"... கவலையே வேண்டாம், இந்த மாதிரியான சந்தேகம் உள்ளவர்கள் உங்களுடைய வாகனம் தயாரிக்கப்பட்ட காலம் எது என்பது தெரிந்துக் கொள்ளுங்கள்.

மஹிந்திரா

நிறுவனம் 1 ஜூலை 2022 தொடங்கி 11 நவம்பர் 2022 வரையில் தயாரித்த எக்ஸ்யூவி 700 காரையே திரும்பி அழைத்து உள்ளது. இதேதான் மஹிந்திராவின் ஸ்கார்பியோ என் காருக்கும் பொருந்தும். அதேவேலையில், நீங்கள் பயன்படுத்தி வரும் எக்ஸ்யூவி 700 அல்லது ஸ்கார்பியோ என் ஆகிய இரண்டும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட தேர்வாக இருத்தல் வேண்டும். ஆம், இந்த மேனுவல் வேரியண்டுகளிலேயே பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக எக்ஸ்யூவி 700 கார் மாடலின் 12,566 யூனிட்டுகளுக்கும், ஸ்கார்பியோ என் கார் மாடலின் 6,618 யூனிட்டுகளுக்கும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றையே ஒர்க்ஷாப்புகளுக்கு எடுத்து வருமாறு மஹிந்திரா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. பெல் ஹவுசிங்கிற்குள் இருக்கும் ரப்பர் பெல்லோவில் சிக்கல் ஏற்பட்டிருப்பதன் காரணத்தினாலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அழைப்பை மஹிந்திரா டீலர்கள் வாயிலாகவே விடுக்கப்பட்டு வருகின்றது.

மஹிந்திரா நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கும் இரண்டும் புகழ்பெற்ற கார் மாடல்களாகும். இதில், எக்ஸ்யூவி 700 காரை 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் எம்-ஸ்டாலியன் எனும் மோட்டார் தேர்விலும், 2.2 லிட்டர், 4 சிலிண்டர் எம்-ஹாவ்க் டர்போ டீசல் மோட்டார் தேர்விலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த கார் மாடலில் கிடைக்கின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் மாடலைப் போலவே ஸ்கார்பியோ என் காரும் இரு விதமான மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலே பார்த்த அதே மோட்டார் தேர்வுகளே இந்த கார் மாடலிலும் வழங்கப்படுகின்றது. ஆனால், திறன் வெளிப்பாடு மாறுபட்டுக் காணப்படும். தொடர்ந்து, இந்த காரிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இத்துடன், ஸ்பெஷல் தேர்வாக பின் வீல் இயக்கம் மற்றும் 4 வீல் டிரைவ் செட்-அப்பிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல சிறப்பு தேர்வுகளுடன் இந்த கார் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே நிறுவனத்தின் இந்த கார் மாடலுக்கு தற்போது டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த காருக்கு மட்டுமில்லைங்க எக்ஸ்யூவி 700 காருக்கும் பலத்த வரவேற்பு சந்தையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் இரு கார் மாடல்களையும் நிறுவனம் திரும்பி அழைத்துக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra recalled scorpio n and xuv700
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X