5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N), எத்தனை விதமான ட்ரிம்?, எத்தனை விதமான வேரியண்ட்? மற்றும் என்ன மாதிரியான இருக்கை தேர்வுகளுடன்? விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் தற்போது தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஸ்கார்பியோ (Scorpio)-வும் ஒன்று. இந்த காரின் புதிய தலைமுறை வெர்ஷனை விரைவில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவை 'ஸ்கார்பியோ கிளாசிக்' (Scorpio Classic), என்ற பெயரிலும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதை 'ஸ்கார்பியோ என்' (Scorpio N) என்ற பெயரிலும் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

பிரமாண்ட தோற்றம், மேம்படுத்தப்பட்ட சொகுசு வசதிகள் மற்றும் அதி நவீன தொழில்நுட்பம் என பல எக்கசக்க சிறப்புகளுடன் ஸ்கார்பியோ என் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ வருகை வெகு விரைவில் இந்தியாவில் அரங்கேற இருக்கின்றது. வரும் ஜூன் 27ம் தேதி அன்றே புதிய ஸ்கார்பியோ என் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

இந்த நிலையில் கார்குறித்த முக்கிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், அண்மையில் காரில் இடம் பெற இருக்கும் புதுமுக சிறப்பு வசதிகள் மற்றும் கார் உருவாக்கப்பட்டிருக்கும் அளவுகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகின.

5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

இந்தநிலையில் தற்போது மேலும் ஓர் புதிய தகவல் ஸ்கார்பியோ என் குறித்து வெளியாகியிருக்கின்றது. இந்த தகவலால் ஸ்கார்பியோ என் எத்தனை விதமான ட்ரிம் மற்றும் வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஒட்டுமொத்தமாக 5 விதமான ட்ரிம்கள் மற்றும் 40 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மிக தெளிவாக கூற வேண்டும் எனில் டீசல் எஞ்ஜினில் 23 விதமான தேர்வுகளிலும், பெட்ரோல் மோட்டாரில் 13 தேர்வுகளிலும் அது கிடைக்கும்.

5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

பெட்ரோல் எஞ்ஜினின் ஒட்டுமொத்த தேர்வுகளில் 7 தேர்வுகள் மேனுவல் கியர்பாக்ஸிலும், 6 தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல் டீசலின் ஒட்டுமொத்த தேர்வுகளில் 13 தேர்வுகள் மேனுவல் கியர்பாக்ஸிலும், 10 தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். ட்ரிம்களைப் பொருத்தவரை இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் ஆகிய ஐந்து விதமான ட்ரிம்களிலேயே புதிய ஸ்கார்பியோ என் கிடைக்கும்.

5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

இதுதவிர, ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்ஜினை பொருத்தவரை ஸ்கார்பியோ என் -இன் அனைத்து வேரியண்டுகளிலும் 2.0 லிட்டர் மோட்டாரே இடம் பெற இருக்கின்றது.

5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 202 எச்பி பவர் வரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதே மோட்டார்தான் எக்ஸ்யூவி700 கார்களில் மஹிந்திரா பயன்படுத்துகின்றது. புதிய ஸ்கார்பியோ என் தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவைக் காட்டிலும் பெரிய உருவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் நீளம் 4,662 மிமீ, அகலம் 1,917 மிமீ மற்றும் வீல் 2,750 மிமீட்டரையும் கொண்டிருக்கின்றது. இந்த அளவுகள் டாடா சஃபாரியைவிட பெரியது என கூறப்படுகின்றது.

5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

ஆகையால், இக்காரின் வருகை டாடா சஃபாரிக்கு தலைவலியை ஏற்படுத்தலாம் என யூகிக்க முடிகின்றது. ஸ்கார்பியோ என் மாடலில் எக்கசக்க தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. அந்தவகையில், புதிய அம்சமாக அட்ரினோஎக்ஸ் (AdrenoX) அடிப்படையிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரீமியம் தர 3டி சோனி சவுண்ட் சிஸ்டம், 7 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற இருக்கின்றன.

5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!

இதுதவிர, அலெக்ஸா, ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்களும் புதிய ஸ்கார்பியோ என்-இல் இடம்பெற உள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களாக இக்காரில் 6 ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிசன்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் அம்சம் மற்றும் பார்க்கிங் கேமிரா போன்ற அதிநவீன கருவிகளும் இடம் பெற இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra scorpio variants trim and engine details leaked
Story first published: Saturday, June 25, 2022, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X