புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டெலிவிரிகள் அறிவிக்கப்பட்டதுபோல் தற்போது அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவி காரை முன்பதிவு செய்வது எவ்வாறு? அதன்பின் டெலிவிரிக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? என்பது குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு அறிவித்தப்படி மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய ஸ்கார்பியோ என் காருக்கான முன்பதிவுகளை இன்று (செப்.26) துவங்கியுள்ளது. முதன்முதலாக கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ என் மாடல் ஆனது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவின் புதிய தலைமுறை வெர்சனாக கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

இந்த நிலையில் ஸ்கார்பியோ என் காரின் டெலிவிரிகள் நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், ஸ்கார்பியோ என் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தலைமுறை ஸ்கார்பியோ ஆனது இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.99 லட்சத்தில் இருந்து ரூ.23.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் உயர்நிலை வேரியண்ட்டான இசட்8எல் -ஐ முன்பதிவு செய்தவர்களுக்கே முதற்கட்டமாக காரை டெலிவிரி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் பிற வேரியண்ட்கள் அடுத்தடுத்ததாக டெலிவிரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

டெலிவிரி துவங்கப்பட்ட பின்னர் முதல் 10 நாட்களில் குறைந்தது 7,000 கார்களையாவது வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துவிட வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளதாக மஹிந்திரா ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதன் மூலமாக ஸ்கார்பியோ என் காரின் எந்தவொரு வேரியண்ட்டை முன்பதிவு செய்யும் முதல் 25 ஆயிரம் வாடிக்கையாளர்கள் டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டிய கால அளவை சராசரியாக 4 மாதங்கள் என்ற அளவில் கடைப்பிடிக்க விரும்புவதாக மஹிந்திரா அந்த சமயத்தில் கூறியிருந்தது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

ஆனால் உண்மையில், தற்போதைக்கு ஸ்கார்பியோ என் காரை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு மிக உச்ச நிலையில் உள்ளது. அதாவது, இந்த புதிய மஹிந்திரா காரை முன்பதிவு செய்துவிட்டு வாடிக்கையாளர்கள் குறைந்தப்பட்சம் 20 மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலை தற்சமயம் உள்ளது. அதிகப்பட்சமாக, ஸ்கார்பியோ என் காரின் இசட்6 மற்றும் இசட்8 என்ற மத்திய-நிலை வேரியண்ட்களின் டெலிவிரிக்காக சுமார் 2 வருடங்கள் வரையில் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

இதனால் சில வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி தேதி ஆனது 2024 டிசம்பர் மாதத்தில் கூட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவிக்கப்படி தற்போது டெலிவிரி பணிகள் துவங்கப்பட்டுள்ளதால், இனி ஸ்கார்பியோ என் கார்களின் உற்பத்தியை மேலும் மஹிந்திரா நிறுவனம் முடுக்கிவிட்டால் வரும் நாட்களில் ஸ்கார்பியோ என் காருக்கான காத்திருப்பு காலம் குறைய நிறைய வாய்ப்புள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

ஆதலால் விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.21,000 என்ற டோக்கன் தொகை உடன் முற்றிலும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். புதிய லேடார் ஃப்ரேம் சேசிஸை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் புதிய ஸ்கார்பியோ என் காரின் நீளம் 4,662மிமீ, அகலம் 1,917மிமீ மற்றும் உயரம் 1,857மிமீ ஆக உள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

வீல்பேஸ் எனப்படும் காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 2,750மிமீ ஆகும். இந்த காரின் டேங்கில் அதிகப்பட்சமாக 57 லிட்டர்களுக்கு எரிபொருளை நிரப்பி கொள்ள முடியும். நிறத்தேர்வுகளாக டஸலிங் சில்வர், அடர் ஃபோரெஸ்ட், கிராண்ட் கன்யான், எவரெஸ்ட் வெள்ளை, நபோலி கருப்பு, சிவப்பு ரேஞ் மற்றும் ராயல் கோல்டு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

புதிய ஸ்கார்பியோ என் காரில் 2.0 லிட்டர் எம் ஸ்டாலியோன், டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாவ்க் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 197 எச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறன் வரையிலும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 173 எச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையிலும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் தான் இனி ரோடு ஃபுல்லா இருக்க போகுது!! ஒருவழியா டெலிவிரி ஸ்டார்ட் ஆயிடுச்சு

இவற்றுடன் கியர்பாக்ஸ் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அத்துடன் மஹிந்திரா பிராண்டின் 4 எக்ஸ்ப்ளோர் 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்படுகிறது. புதிய ஸ்கார்பியோ என் காரை தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் வழக்கமான ஸ்கார்பியோ கார் சில மாற்றங்களுடன் ஸ்கார்பியோ கிளாசிக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra started deliveries of the all new scorpio n read here to find more
Story first published: Monday, September 26, 2022, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X