சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

மஹிந்திரா நிறுவனம் தனது 5 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் ரசிகர்களும், மஹிந்திரா நிறுவனத்தின் ரசிகர்களும் காத்து கொண்டிருந்த நாள் இது. ஆம், இது இந்தியாவின் சுதந்திர தினம். இது இந்தியாவின் சுதந்திர தினம் மட்டுமல்ல. மஹிந்திரா நிறுவனம் தனது 5 எலெக்ட்ரிக் கார்களை பொது பார்வைக்கு கொண்டு வந்த தினமும் இதுதான். மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி இன்று (ஆகஸ்ட் 15), தனது 5 எலெக்ட்ரிக் கார்களையும் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி கார்களை தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. இதன்படி தற்போது பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ள 5 கார்களுமே எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான். மஹிந்திரா நிறுவனம் தற்போது 2 புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்துள்ளது. அவை எக்ஸ்யூவி (XUV) மற்றும் பிஇ (BE) ஆகியவை ஆகும்.

சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

இந்த 2 புதிய பிராண்டுகளின் கீழ்தான் மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது. அதேபோன்றதொரு முதன்மையான இடத்தை பிடிக்க மஹிந்திரா நிறுவனமும் முயற்சி செய்கிறது.

சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

இதன் ஒரு பகுதியாகதான் மஹிந்திரா நிறுவனம் தற்போது 5 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இதில், எக்ஸ்யூவி பிராண்டின் கீழ், ஏற்கனவே விற்பனையில் உள்ள மஹிந்திரா கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

இதன் மூலம் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே தனக்கு உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள திட்டமிட்டுள்ளது. அத்துடன் மஹிந்திரா என்ற குடும்பத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி என்ற பெயரை அடிப்படையாக கொண்டு ஏற்கனவே பல்வேறு ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்து வருகிறது.

சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

இந்த ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களாக அவை இருக்கலாம். மஹிந்திரா நிறுவனம் தற்போதைய நிலையில் நாங்கள் ஏற்கனவே கூறியபடி 5 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி எக்ஸ்யூவி. இ8 (XUV.e8), எக்ஸ்யூவி (XUV.e9), பிஇ .05 (BE.05), பிஇ (BE.07) மற்றும் பிஇ. 09(BE.09) ஆகிய பெயர்களில் இந்த எலெக்ட்ரிக் கார்கள் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுப்டுள்ளன.

சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

இதில், முதல் நான்கு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள், அதாவது எக்ஸ்யூவி. இ8 (XUV.e8), எக்ஸ்யூவி (XUV.e9), பிஇ .05 (BE.05), பிஇ (BE.07) ஆகியவை வரும் 2024ம் ஆண்டுல் இருந்து 2026ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார்கள், INGLO பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கபடவுள்ளன.

சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

எதிர்காலத்தில் இந்த பிளாட்பார்ம்தான் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களின் முதுகெலும்பாக இருக்க போகிறது. இந்த பிளாட்பார்ம், அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள், அதிகபட்ச செயல்திறன், அதிக ரேஞ்ச் ஆகியவற்றை வழங்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா கூறியது பின்வருமாறு:

சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!

''எங்களது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ததில் பெருமை கொள்கிறோம்'' என்றார். மஹிந்திரா நிறுவனம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார் சந்தையில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பதை இந்த முயற்சிகள் காட்டுகின்றன. எனவே எதிர்காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிக சவாலான போட்டியை மஹிந்திரா நிறுவனம் அளிக்கவுள்ளது.

Most Read Articles
English summary
Mahindra unveils five new electric suvs
Story first published: Monday, August 15, 2022, 21:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X