இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனம் அதன் 5-இருக்கை காம்பெக்ட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி300-இன் டாப் வேரியண்ட்டின் அலாய் சக்கரங்களின் டிசைனை மாற்றியமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

இந்தியாவில் நீங்கள் ஒரு காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்க நினைக்கிறீர்கள் என்றால், நிச்சயம் நீங்கள் மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 காரையும் பார்க்கலாம். ஏனெனில் அந்த அளவிற்கு பலரது விருப்பமான காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக, ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய பயணிகள் காராக எக்ஸ்யூவி300 உள்ளது.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

அதுமட்டுமின்றி, பாதுகாப்பு விஷயத்தில் எந்தவொரு குறையும் கூற இயலாதப்படி உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களை எக்ஸ்யூவி300 பெற்றுள்ளது. முதன்முதலாக 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி300 கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து அதன் முதல் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை அடுத்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் பெற உள்ளது.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

இதற்கிடையில் எக்ஸ்யூவி300-இன் அலாய் சக்கரங்களின் டிசைன் புதியதாக 5-முனை டிசைனிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய அலாய் சக்கரங்களை எக்ஸ்யூவி300-இன் டாப் டபிள்யூ8 (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் மட்டுமே பெற முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 அறிமுகத்திற்கு பிறகு எக்ஸ்யூவி300 மாடலில் மஹிந்திரா நிறுவனம் கொண்டுவந்துள்ள முக்கியமான அப்கிரேட் இதுவே ஆகும்.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்களில் இப்போது வரையில் இரும்பு சக்கரங்களே வழங்கப்படுகின்றன. உயர்-நிலை டபிள்யூ8 மற்றும் டபிள்யூ8 (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களில் மட்டுமே அலாய் சக்கர தேர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலிலும் தற்போது டபிள்யூ 8 (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடிற்கு மத்தியில் எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் காரையும் விரைவில் அறிமுகப்படுத்தும் முனைப்பில் மஹிந்திரா உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் காரை பற்றிய விபரங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. அப்போது கிடைக்க பெற்றிருந்த இந்த புதிய எக்ஸ்யூவி300 காரின் படத்தில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் கார் எத்தகைய தோற்றத்தை கொண்டிருந்ததோ அதனை பார்க்க முடிந்தது.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

இதனால், அதிகப்பட்சமாக 128 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடிய டர்போ பெட்ரோல் என்ஜினை தேர்வை புதிய எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் காரிலும் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. மேலும், தற்போதைய எக்ஸ்யூவி300 மாடலை போல் புதிய ஸ்போர்ட்ஸ் மாடலும் டபிள்யூ4, டபிள்யூ6, டபிள்யூ8 மற்றும் டபிள்யூ8 (ஆப்ஷ்னல்) என நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்படலாம்.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

தற்போது எக்ஸ்யூவி300 டபிள்யூ8 (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் புதிய எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023இன் துவக்கத்தில் களமிறக்கப்பட உள்ள எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரை பொறுத்தவரையில், இது பெரும்பான்மையான ஸ்டைல் பாகங்களை அளவில்-பெரிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் இருந்து பெற்றுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

இந்த வகையில் செங்குத்தான க்ரோம் ஸ்லாட்களுடன் புதிய டிசைனில், அளவில்-பெரிய முன்பக்க க்ரில் மற்றும் முழு-எல்இடி ஹெட்லேம்ப்களை புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தில் எதிர்பார்க்கிறோம். பக்கவாட்டில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் அப்படியே தொடரப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

ஆனால் உயர்-நிலை டபிள்யூ8 (ஆப்ஷ்னல்) வேரியண்ட் மட்டுமின்றி, காரின் பெரும்பான்மையான வேரியண்ட்களுக்கும் இத்தகைய சக்கரங்கள் வழங்கப்படலாம். இந்த அலாய் சக்கரங்களுக்கு மக்களிடம் இருந்து எத்தகைய வரவேற்பு கிடைக்க உள்ளது என்பதை பார்க்கும் ஓர் கண்ணோட்டமாகவே தற்போது எக்ஸ்யூவி300 டபிள்யூ8 (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் அலாய் சக்கரங்கள் மாற்றப்பட்டிருக்கும் என கருதுகிறோம்.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

பின்பக்கத்தில் டெயில்லேம்ப்களின் வடிவம் திருத்தியமைக்கப்படும். உட்புற கேபினில் புதிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடின் மூலம் எக்ஸ்யூவி300-இன் தற்போதைய 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 128 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக மெருக்கேற்றப்பட உள்ளது.

இனி ஸ்டைலிஷான புதிய அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300-ஐ வாங்கலாம்!! அப்கிரேட் அறிமுகம்!

இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் தற்சமயம் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி வரையில் மட்டுமே காருக்கு வழங்குகிறது. அதேநேரம் தற்போதைய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (110 பிஎச்பி) & 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளும் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தொடரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி300-க்கு விற்பனையில் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்ஸான் உள்ளிட்டவை முக்கிய போட்டி மாடல்களாக விளங்குகின்றன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv300 suv get new set of alloy wheel sportz variant launch soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X