மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு! என்ன அவை?..

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய இரு மின்சார கார்களையும் ஒப்பீடு செய்து இதுகுறித்த தகவலை வெளியிட்டிருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் அதன் புத்தம் புதிய எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது. இந்த கார் வரும் 2023 ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் இவி-க்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

இந்த கார் இந்திய சந்தையில் நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் கார் மாடலுக்கே போட்டியாக இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது மஹிந்திரா எக்ஸ்யூவி400. இவ்விரு கார்களில் எது பெஸ்ட் என்பதை வெளிக்காட்டக் கூடிய பதிவிலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 பவர்டிரெயின் vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் பவர்டிரெயின்:

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் 40.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400க்கும் அதிகமான கிமீ தூரம் பயணிக்க முடியும். இத்துடன், 143 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டார் இக்காரில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது 9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

இத்தகைய சூப்பரான திறனை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் காருக்கே போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 400 விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் 39.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவே காரின் முன் பக்க ஆக்ஸிலில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டாருக்கான மின் சக்தியை வழங்கும்.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதனால் 8.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். அதேவேலையில், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும்.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 ரேஞ்ஜ் திறன் vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் ரேஞ்ஜ் திறன்:

ஏற்கனவே கூறியதைப் போல் டாடா நெக்ஸானில் பொருத்தப்பட்டிருக்கும் 40.5 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இது அராய் வெளியிட்டிருக்கும் தகவல் ஆகும். நகர்புற சாலையில் வைத்து இயக்கும்பட்சத்தில் இந்த கார் சற்று குறைவான ரேஞ்ஜையே வழங்கும். அதேவேலையில், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சற்று அதிக ரேஞ்ஜை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

இந்த ரேஞ்ஜ் திறனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 456 கிமீ வரை ரேஞ்ஜ் தருமாம். ஃபன், ஃபாஸ்ட் மற்றும் ஃபியர்லெஸ் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 சார்ஜிங் டைம் vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் சார்ஜிங் டைம்:

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் இரு விதமான சார்ஜிங் ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கின்றது. 3.3 kW ஏசி சார்ஜர் மற்றும் 7.2 kW ஏசி சார்ஜர் என இரு விதமான சார்ஜிங் ஆப்ஷன்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், 3.3 kW ஏசி சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் முழுமையாக சார்ஜாக 15-16 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

அதேவேலையில், 7.2 kW ஏசி சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்போது 5-6 மணி நேரங்களுக்குள் முழுமையாக சார்ஜாகிவிடும். அதேநேரத்தில் நம்மால் இந்த காரை வெறும் 50 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தினால் மட்டுமே இந்தளவு அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரிலும் இதுபோன்று இன்னும் பன்முக சார்ஜிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 3.3kW/16A பவர் சாக்கெட்டை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் இக்காரை முழுமையாக சார்ஜாக 13 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். அதுவே, 7.2kW/32A பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 6.30 மணி நேரங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

இதைவிட அதிக வேகத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்ய வேண்டும் எனில் 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜரையே உபயோகிக்க வேண்டும். இதன் வாயிலாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 50 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

சிறப்பம்சங்கள்:

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரில் பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட உள்ளன. அந்தவகையில், டிஜிட்டல் எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினாக்ஸ் மென்பொருள் வசதி, சன்ரூஃப், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, டூயல் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள், டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 400 vs டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்... கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு!

அதேவேலையில், டாடா நெக்ஸான் மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் பார்த்தோமேயானால் ஏர் ப்யூரிஃபையர், கூல்டு இருக்கைகள், ஸ்மார்ட் இணைப்பு வசதி, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், மல்டி மோட் ரீஜெனரேட்டிவ் சிஸ்டம், ஆட்டோ பிரேக் லேம்ப் போன்ற பன்முக சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுமாதிரியான வேறுபட்ட அம்சங்களையே இரு கார்களும் கொண்டிருக்கின்றன. இவற்றின் வாயிலாக ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்பதே தெளிவாகத் தெரிகின்றது. உங்களுக்கு இதில் எந்த வாகனம் பிடித்துள்ளது? எதை தேர்வு செய்யலாம் என்பது இனி உங்கள் கையில்.

Most Read Articles

English summary
Mahindra xuv400 e car vs tata nexon ev max here we explains all the details
Story first published: Saturday, September 17, 2022, 21:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X