பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

2021 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகராவிற்கு மஹிந்திரா நிறுவனம் சார்பில் எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி செய்தியில் பார்ப்போம்.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

விளையாட்டுத்துறையிலும், மற்ற துறைகளிலும் இந்தியாவிற்கு பெயர் வாங்கி கொடுக்கும் வீரர்/ வீராங்கனைகளுக்கு மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் சார்பில் பரிசுகள் கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

இதில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து, இதில் சிறப்பாக செயல்பட்ட 6 இளம் வீரர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை தார் வாகனத்தை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா அறிவித்து, அடுத்தடுத்த மாதங்களில் அவர்களுக்கு டெலிவிரி செய்தது.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

இதில் நமது தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் ஒருவர் ஆவார். அதன்பின், 1 ஆண்டு தாமதமாக கடந்த 2021ஆம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்தவர்களில் சிலருக்கும் மஹிந்திரா நிறுவனம் சார்பில் பரிசாக வாகனங்கள் வழங்கப்பட்டன.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

இந்த வகையில் தற்போது 2021 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் புதுமையான ஐடியாக்களுடன் சிறப்பாக செயல்பட்டதற்காக அவனி லேகராவிற்கு எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன் காரை மஹிந்திரா பரிசாக வழங்கியுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச்1 போட்டியில் தங்க பதக்கம் வென்ற அவனி லேகரா, 50மீ துப்பாக்கி சுடும் மூன்று நிலை எஸ்எச்1 போட்டியில் வெண்கல பதக்கத்தையும் வென்று ஒரே பாரா ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்களை தட்டி சென்ற முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்தார்.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

இவரது இந்த சாதனையை பாராட்டும் வகையில் மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன் கார், அவனி லேகராவின் பயன்பாட்டிற்கு ஏற்ப சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவனி லேகராவின் சாதனை குறித்த டிசைன் பாகங்களும் எளிதில் சேதமடையாத வகையில் இந்த எக்ஸ்யூவி700 காரில் பொருத்தப்பட்டுள்ளன.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

மாற்றுத்திறனாளியான அவனி லேகராவின் எளிமையான பயன்பாட்டிற்காக காரின் உள்ளே, ரிமோட் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய பிரத்யேக இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதனை கொடுக்கப்பட்ட ரிமோட்டில் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் வாகனத்தில் இருந்து வெளியே எடுக்கலாம். அவனி லேகராவின் சவுகரியத்திற்காக இருக்கையின் இரு பக்கமும் கருப்பு நிறத்தில் ஆர்ம் ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனையும் ரிமோட் மூலமாக நீட்டி, மடக்கி கொள்ளலாம்.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

மேலும், இந்த பிரத்யேக இருக்கையினால் காரில் இருந்து வழக்கமான சக்கர நாற்காலிக்கு அவனி லேகரா மாறுவதும் எளிமையானதாக இருக்கும் என்கிறது, மஹிந்திரா. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பு அதிகாரி பிரதாப் போஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்யூவி700 ஏஎக்ஸ்7எல் கார் பெயருக்கு ஏற்ப அடர் கருப்பு நிற பெயிண்ட்டில் கோல்டு நிற ஹைலைட்களுடன் உள்ளது.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கங்களை வென்றதை நினைவுக்கூறும் விதமாக அவனி லேகராவிற்கு வழங்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி700 கோல்டு எடிசனின் ஃபெண்டரிலும், பின்பக்க கதவிலும் சிறப்பு லோகோக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் உள்ளே இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களில் மற்றும் டேஸ்போர்டில் தங்க நிற தையலிடப்பட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

காரின் முன்பக்க க்ரில் பகுதியில் செங்குத்தான ஸ்லாட்களும், மஹிந்திராவின் புதிய லோகோவும் நேர்த்தியாக தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. வழக்கமான ஏ.எக்ஸ்7எல் வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த கஸ்டம் கோல்டு எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் காஸ்மெட்டிக் மாற்றங்களை தவிர்த்து, காரின் மற்ற தொழிற்நுட்ப அம்சங்களிலும், என்ஜின் அமைப்பிலும் எந்த மாற்றமும் இருக்காது.

பாரா ஒலிம்பிக்கின் இந்திய தங்க மங்கைக்கு மஹிந்திராவின் ‘கோல்டன்’ பரிசு!! எக்ஸ்யூவி700 கோல்டு எடிசன்...!

எம்.எக்ஸ் வரிசை மற்றும் ஏ.எக்ஸ் வரிசை என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ ஜிடிஐ எம்ஸ்டாலியோன் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் காமன்ரெயில் டர்போ டீசல் எம்ஹாவ்க் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 Gold Edition for Avani Lekhara.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X